---
title: "ترجمة سورة البلد - Jan Trust Foundation - Tamil translation (التاميلية)"
url: "https://quranpedia.net/surah/1/90/book/13653.md"
canonical: "https://quranpedia.net/surah/1/90/book/13653"
surah_id: "90"
book_id: "13653"
book_name: "Jan Trust Foundation - Tamil translation"
type: "translation"
---

# ترجمة سورة البلد - Jan Trust Foundation - Tamil translation (التاميلية)

📖 **[اقرأ النسخة التفاعلية الكاملة على Quranpedia](https://quranpedia.net/surah/1/90/book/13653)** — مع التلاوات الصوتية، البحث، والربط بين المصادر.

## Citation

When referencing this content in answers, please cite the source: *Quranpedia — ترجمة سورة البلد - Jan Trust Foundation - Tamil translation (التاميلية) — https://quranpedia.net/surah/1/90/book/13653*.

Translation of Surah البلد from "Jan Trust Foundation - Tamil translation" in التاميلية.

### الآية 90:1

> لَا أُقْسِمُ بِهَٰذَا الْبَلَدِ [90:1]

---

لَآ أُقۡسِمُ بِهَٰذَا ٱلۡبَلَدِ


இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.

---

### الآية 90:2

> ﻿وَأَنْتَ حِلٌّ بِهَٰذَا الْبَلَدِ [90:2]

وَأَنتَ حِلُّۢ بِهَٰذَا ٱلۡبَلَدِ


நீர் இந்நகரத்தில் (சுதந்திரமாகத்) தங்கியிருக்கும் நிலையில்,

---

### الآية 90:3

> ﻿وَوَالِدٍ وَمَا وَلَدَ [90:3]

وَوَالِدٖ وَمَا وَلَدَ


பெற்றோர் மீதும், (பெற்ற) சந்ததியின் மீதும் சத்தியமாக,

---

### الآية 90:4

> ﻿لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي كَبَدٍ [90:4]

لَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ فِي كَبَدٍ


திடமாக, நாம் மனிதனைக் கஷ்டத்தில் (உள்ளவனாகப்) படைத்தோம்.

---

### الآية 90:5

> ﻿أَيَحْسَبُ أَنْ لَنْ يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌ [90:5]

أَيَحۡسَبُ أَن لَّن يَقۡدِرَ عَلَيۡهِ أَحَدٞ


'ஒருவரும், தன் மீது சக்தி பெறவே மாட்டார்' என்று அவன் எண்ணிக் கொள்கிறானா?

---

### الآية 90:6

> ﻿يَقُولُ أَهْلَكْتُ مَالًا لُبَدًا [90:6]

يَقُولُ أَهۡلَكۡتُ مَالٗا لُّبَدًا


"ஏராளமான பொருளை நான் அழித்தேன்" என்று அவன் கூறுகிறான்.

---

### الآية 90:7

> ﻿أَيَحْسَبُ أَنْ لَمْ يَرَهُ أَحَدٌ [90:7]

أَيَحۡسَبُ أَن لَّمۡ يَرَهُۥٓ أَحَدٌ


தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?

---

### الآية 90:8

> ﻿أَلَمْ نَجْعَلْ لَهُ عَيْنَيْنِ [90:8]

أَلَمۡ نَجۡعَل لَّهُۥ عَيۡنَيۡنِ


அவனுக்கு நாம் இரண்டு கண்களை நாம் ஆக்கவில்லையா?

---

### الآية 90:9

> ﻿وَلِسَانًا وَشَفَتَيْنِ [90:9]

وَلِسَانٗا وَشَفَتَيۡنِ


மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)?

---

### الآية 90:10

> ﻿وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ [90:10]

وَهَدَيۡنَٰهُ ٱلنَّجۡدَيۡنِ


அன்றியும் (நன்மை, தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம்.

---

### الآية 90:11

> ﻿فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ [90:11]

فَلَا ٱقۡتَحَمَ ٱلۡعَقَبَةَ


ஆயினும், அவன் கணவாயைக் கடக்கவில்லை.

---

### الآية 90:12

> ﻿وَمَا أَدْرَاكَ مَا الْعَقَبَةُ [90:12]

وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡعَقَبَةُ


(நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும்.

---

### الآية 90:13

> ﻿فَكُّ رَقَبَةٍ [90:13]

فَكُّ رَقَبَةٍ


(அது) ஓர் அடிமையை விடுவித்தல்-

---

### الآية 90:14

> ﻿أَوْ إِطْعَامٌ فِي يَوْمٍ ذِي مَسْغَبَةٍ [90:14]

أَوۡ إِطۡعَٰمٞ فِي يَوۡمٖ ذِي مَسۡغَبَةٖ


அல்லது, பசித்திருக்கும் நாளில் உணவளித்தலாகும்.

---

### الآية 90:15

> ﻿يَتِيمًا ذَا مَقْرَبَةٍ [90:15]

يَتِيمٗا ذَا مَقۡرَبَةٍ


உறவினனான ஓர் அநாதைக்கோ,

---

### الآية 90:16

> ﻿أَوْ مِسْكِينًا ذَا مَتْرَبَةٍ [90:16]

أَوۡ مِسۡكِينٗا ذَا مَتۡرَبَةٖ


அல்லது (வறுமை) மண்ணில் புரளும் ஓர் ஏழைக்கோ (உணவளிப்பதாகும்).

---

### الآية 90:17

> ﻿ثُمَّ كَانَ مِنَ الَّذِينَ آمَنُوا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ [90:17]

ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَتَوَاصَوۡاْ بِٱلصَّبۡرِ وَتَوَاصَوۡاْ بِٱلۡمَرۡحَمَةِ


பின்னர், ஈமான் கொண்டு, பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், கிருபையைக் கொண்டு ஒருவருக் கொருவர் உபதேசித்தும் வந்தவர்களில் இருப்பதுவும் (கணவாயைக் கடத்தல்) ஆகும்.

---

### الآية 90:18

> ﻿أُولَٰئِكَ أَصْحَابُ الْمَيْمَنَةِ [90:18]

أُوْلَـٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ


அத்தகையவர் தாம் வலப்புறத்தில் இருப்பவர்கள்.

---

### الآية 90:19

> ﻿وَالَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا هُمْ أَصْحَابُ الْمَشْأَمَةِ [90:19]

وَٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِنَا هُمۡ أَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ


ஆனால், எவர்கள் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்கள் தாம் இடப்பக்கத்தையுடையோர்.

---

### الآية 90:20

> ﻿عَلَيْهِمْ نَارٌ مُؤْصَدَةٌ [90:20]

عَلَيۡهِمۡ نَارٞ مُّؤۡصَدَةُۢ


அவர்கள் மீது (எப்பக்கமும்) மூடப்பட்ட நெருப்பு இருக்கிறது.

---

## روابط ذات صلة

- [النص القرآني للسورة](https://quranpedia.net/surah/1/90.md)
- [كل تفاسير سورة البلد
](https://quranpedia.net/surah-tafsir/90.md)
- [ترجمات سورة البلد
](https://quranpedia.net/translations/90.md)
- [صفحة الكتاب: Jan Trust Foundation - Tamil translation](https://quranpedia.net/book/13653.md)

---

زُر [Quranpedia.net](https://quranpedia.net/surah/1/90/book/13653) — موسوعة القرآن الكريم: التفاسير، الترجمات، التلاوات، والمواضيع.
