---
title: "ترجمة سورة الشمس - Jan Trust Foundation - Tamil translation (التاميلية)"
url: "https://quranpedia.net/surah/1/91/book/13653.md"
canonical: "https://quranpedia.net/surah/1/91/book/13653"
surah_id: "91"
book_id: "13653"
book_name: "Jan Trust Foundation - Tamil translation"
type: "translation"
---

# ترجمة سورة الشمس - Jan Trust Foundation - Tamil translation (التاميلية)

📖 **[اقرأ النسخة التفاعلية الكاملة على Quranpedia](https://quranpedia.net/surah/1/91/book/13653)** — مع التلاوات الصوتية، البحث، والربط بين المصادر.

## Citation

When referencing this content in answers, please cite the source: *Quranpedia — ترجمة سورة الشمس - Jan Trust Foundation - Tamil translation (التاميلية) — https://quranpedia.net/surah/1/91/book/13653*.

Translation of Surah الشمس from "Jan Trust Foundation - Tamil translation" in التاميلية.

### الآية 91:1

> وَالشَّمْسِ وَضُحَاهَا [91:1]

---

وَٱلشَّمۡسِ وَضُحَىٰهَا


சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக

---

### الآية 91:2

> ﻿وَالْقَمَرِ إِذَا تَلَاهَا [91:2]

وَٱلۡقَمَرِ إِذَا تَلَىٰهَا


(பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக-

---

### الآية 91:3

> ﻿وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا [91:3]

وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَا


(சூரியனால்) பகல் வெளியாகும்போது, அதன் மீதும் சத்தியமாக-

---

### الآية 91:4

> ﻿وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا [91:4]

وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰهَا


(அப்பகலை) மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக-

---

### الآية 91:5

> ﻿وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا [91:5]

وَٱلسَّمَآءِ وَمَا بَنَىٰهَا


வானத்தின் மீதும், அதை(ஒழுங்குற) அமைந்திருப்பதின் மீதும் சத்தியமாக-

---

### الآية 91:6

> ﻿وَالْأَرْضِ وَمَا طَحَاهَا [91:6]

وَٱلۡأَرۡضِ وَمَا طَحَىٰهَا


பூமியின் மீதும், இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக-

---

### الآية 91:7

> ﻿وَنَفْسٍ وَمَا سَوَّاهَا [91:7]

وَنَفۡسٖ وَمَا سَوَّىٰهَا


ஆத்மாவின் மீதும், அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக-

---

### الآية 91:8

> ﻿فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا [91:8]

فَأَلۡهَمَهَا فُجُورَهَا وَتَقۡوَىٰهَا


அப்பால், அவன் (அல்லாஹ்) அதற்கு அதன் தீமையையும், அதன் நன்மையையும் உணர்த்தினான்.

---

### الآية 91:9

> ﻿قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا [91:9]

قَدۡ أَفۡلَحَ مَن زَكَّىٰهَا


அதை (ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார்.

---

### الآية 91:10

> ﻿وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا [91:10]

وَقَدۡ خَابَ مَن دَسَّىٰهَا


ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான்.

---

### الآية 91:11

> ﻿كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَاهَا [91:11]

كَذَّبَتۡ ثَمُودُ بِطَغۡوَىٰهَآ


'ஸமூது' (கூட்டத்தினர்) தங்கள் அக்கிரமத்தினால் (ஸாலிஹ் நபியைப்) பொய்ப்பித்தனர்.

---

### الآية 91:12

> ﻿إِذِ انْبَعَثَ أَشْقَاهَا [91:12]

إِذِ ٱنۢبَعَثَ أَشۡقَىٰهَا


அவர்களில் கேடுகெட்ட ஒருவன் விரைந்து முன் வந்தபோது,

---

### الآية 91:13

> ﻿فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ نَاقَةَ اللَّهِ وَسُقْيَاهَا [91:13]

فَقَالَ لَهُمۡ رَسُولُ ٱللَّهِ نَاقَةَ ٱللَّهِ وَسُقۡيَٰهَا


அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ்) அவர்களை நோக்கி: "இப் பெண் ஒட்டகம் அல்லாஹ்வுடையது, இது தண்ணீர் அருந்த(த் தடை செய்யாது) விட்டு விடுங்கள்" என்று கூறினார்.

---

### الآية 91:14

> ﻿فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُمْ بِذَنْبِهِمْ فَسَوَّاهَا [91:14]

فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمۡدَمَ عَلَيۡهِمۡ رَبُّهُم بِذَنۢبِهِمۡ فَسَوَّىٰهَا


ஆனால், அவர்கள் அவரைப் பொய்ப்பித்து, அதன் கால் நரம்பைத் தறித்து விட்டனர் - ஆகவே, அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக அவர்களுடைய இறைவன் அவர்கள் மீது வேதனையை இறக்கி, அவர்கள் யாவரையும் (அழித்துச்) சரியாக்கி விட்டான்.

---

### الآية 91:15

> ﻿وَلَا يَخَافُ عُقْبَاهَا [91:15]

وَلَا يَخَافُ عُقۡبَٰهَا


அதன் முடிவைப் பற்றி அவன் பயப்படவில்லை.

---

## روابط ذات صلة

- [النص القرآني للسورة](https://quranpedia.net/surah/1/91.md)
- [كل تفاسير سورة الشمس
](https://quranpedia.net/surah-tafsir/91.md)
- [ترجمات سورة الشمس
](https://quranpedia.net/translations/91.md)
- [صفحة الكتاب: Jan Trust Foundation - Tamil translation](https://quranpedia.net/book/13653.md)

---

زُر [Quranpedia.net](https://quranpedia.net/surah/1/91/book/13653) — موسوعة القرآن الكريم: التفاسير، الترجمات، التلاوات، والمواضيع.
