---
title: "ترجمة سورة الشمس - الترجمة التاميلية - عمر شريف (التاميلية)"
url: "https://quranpedia.net/surah/1/91/book/27819.md"
canonical: "https://quranpedia.net/surah/1/91/book/27819"
surah_id: "91"
book_id: "27819"
book_name: "الترجمة التاميلية - عمر شريف"
type: "translation"
---

# ترجمة سورة الشمس - الترجمة التاميلية - عمر شريف (التاميلية)

📖 **[اقرأ النسخة التفاعلية الكاملة على Quranpedia](https://quranpedia.net/surah/1/91/book/27819)** — مع التلاوات الصوتية، البحث، والربط بين المصادر.

## Citation

When referencing this content in answers, please cite the source: *Quranpedia — ترجمة سورة الشمس - الترجمة التاميلية - عمر شريف (التاميلية) — https://quranpedia.net/surah/1/91/book/27819*.

Translation of Surah الشمس from "الترجمة التاميلية - عمر شريف" in التاميلية.

### الآية 91:1

> وَالشَّمْسِ وَضُحَاهَا [91:1]

இரவின் மீது சத்தியமாக! (அது) மூடும்போது,

### الآية 91:2

> ﻿وَالْقَمَرِ إِذَا تَلَاهَا [91:2]

சந்திரனின் மீது சத்தியமாக! அதைத் தொடரும்போது,

### الآية 91:3

> ﻿وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا [91:3]

பகலின் மீது சத்தியமாக! அதை வெளிப்படுத்தும்போது (வெளிச்சப்படுத்தும் போது),

### الآية 91:4

> ﻿وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا [91:4]

இரவின் மீது சத்தியமாக! அது (-இரவு) அதை (-சூரியனை) மூடும்போது,

### الآية 91:5

> ﻿وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا [91:5]

வானத்தின் மீது சத்தியமாக! அதை அமைத்தவன் மீது சத்தியமாக!

### الآية 91:6

> ﻿وَالْأَرْضِ وَمَا طَحَاهَا [91:6]

பூமியின் மீது சத்தியமாக! அதை விரித்தவன் மீது சத்தியமாக!

### الآية 91:7

> ﻿وَنَفْسٍ وَمَا سَوَّاهَا [91:7]

ஆன்மாவின் மீது சத்தியமாக! அதை சீர்படுத்தியவன் மீது சத்தியமாக!

### الآية 91:8

> ﻿فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا [91:8]

அவன் அதன் தீமையையும் அதன் நன்மையையும் அதற்கு அறிவித்தான்.

### الآية 91:9

> ﻿قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا [91:9]

(இஸ்லாமைக் கொண்டு) அதைப் பரிசுத்தமாக்கியவர் திட்டமாக வெற்றி பெற்றார்.

### الآية 91:10

> ﻿وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا [91:10]

அதை(ப் பாவத்தில்) மறைத்தவன் திட்டமாக நஷ்டமடைந்தான்.\*

### الآية 91:11

> ﻿كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَاهَا [91:11]

ஸமூது சமுதாயம் தன் அழிச்சாட்டியத்தால் (தூதரைப்) பொய்ப்பித்தது.

### الآية 91:12

> ﻿إِذِ انْبَعَثَ أَشْقَاهَا [91:12]

அதன் தீயவன் புறப்பட்டபோது,

### الآية 91:13

> ﻿فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ نَاقَةَ اللَّهِ وَسُقْيَاهَا [91:13]

அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ்) "அல்லாஹ்வுடைய பெண் ஒட்டகத்தையும் அது நீர் பருகுவதையும் (தடை செய்யாதீர்)'' என்று அவர்களுக்குக் கூறினார்.

### الآية 91:14

> ﻿فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُمْ بِذَنْبِهِمْ فَسَوَّاهَا [91:14]

அவரைப் பொய்ப்பித்தார்கள்; அதைக் கொன்றார்கள். ஆகவே, அவர்களின் பாவத்தினால் அவர்களுடைய இறைவன் அவர்களின் மீது கடுமையான வேதனையை இறக்கினான். அதை (-அந்த சமுதாயத்தை) சமமாக்கினான்.

### الآية 91:15

> ﻿وَلَا يَخَافُ عُقْبَاهَا [91:15]

(அவன்) அதன் முடிவைப் பயப்பட மாட்டான்.

## روابط ذات صلة

- [النص القرآني للسورة](https://quranpedia.net/surah/1/91.md)
- [كل تفاسير سورة الشمس
](https://quranpedia.net/surah-tafsir/91.md)
- [ترجمات سورة الشمس
](https://quranpedia.net/translations/91.md)
- [صفحة الكتاب: الترجمة التاميلية - عمر شريف](https://quranpedia.net/book/27819.md)

---

زُر [Quranpedia.net](https://quranpedia.net/surah/1/91/book/27819) — موسوعة القرآن الكريم: التفاسير، الترجمات، التلاوات، والمواضيع.
