---
title: "ترجمة سورة الليل - Jan Trust Foundation - Tamil translation (التاميلية)"
url: "https://quranpedia.net/surah/1/92/book/13653.md"
canonical: "https://quranpedia.net/surah/1/92/book/13653"
surah_id: "92"
book_id: "13653"
book_name: "Jan Trust Foundation - Tamil translation"
type: "translation"
---

# ترجمة سورة الليل - Jan Trust Foundation - Tamil translation (التاميلية)

📖 **[اقرأ النسخة التفاعلية الكاملة على Quranpedia](https://quranpedia.net/surah/1/92/book/13653)** — مع التلاوات الصوتية، البحث، والربط بين المصادر.

## Citation

When referencing this content in answers, please cite the source: *Quranpedia — ترجمة سورة الليل - Jan Trust Foundation - Tamil translation (التاميلية) — https://quranpedia.net/surah/1/92/book/13653*.

Translation of Surah الليل from "Jan Trust Foundation - Tamil translation" in التاميلية.

### الآية 92:1

> وَاللَّيْلِ إِذَا يَغْشَىٰ [92:1]

---

وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰ


(இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக

---

### الآية 92:2

> ﻿وَالنَّهَارِ إِذَا تَجَلَّىٰ [92:2]

وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ


பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக-

---

### الآية 92:3

> ﻿وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنْثَىٰ [92:3]

وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰٓ


ஆணையும், பெண்ணையும் (அவன்) படைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-

---

### الآية 92:4

> ﻿إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰ [92:4]

إِنَّ سَعۡيَكُمۡ لَشَتَّىٰ


நிச்சயமாக உங்களுடைய முயற்சி பலவாகும்.

---

### الآية 92:5

> ﻿فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَاتَّقَىٰ [92:5]

فَأَمَّا مَنۡ أَعۡطَىٰ وَٱتَّقَىٰ


எனவே எவர் (தானதருமம்) கொடுத்து, (தன் இறைவனிடம்) பயபக்தியுடன் நடந்து,

---

### الآية 92:6

> ﻿وَصَدَّقَ بِالْحُسْنَىٰ [92:6]

وَصَدَّقَ بِٱلۡحُسۡنَىٰ


நல்லவற்றை (அவை நல்லவையென்று) உண்மையாக்குகின்றாரோ,

---

### الآية 92:7

> ﻿فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَىٰ [92:7]

فَسَنُيَسِّرُهُۥ لِلۡيُسۡرَىٰ


அவருக்கு நாம் (சுவர்க்கத்தின் வழியை) இலேசாக்குவோம்.

---

### الآية 92:8

> ﻿وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَىٰ [92:8]

وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسۡتَغۡنَىٰ


ஆனால் எவன் உலோபித்தனம் செய்து அல்லாஹ்விடமிருந்து தன்னைத் தேவையற்றவனாகக் கருதுகிறானோ,

---

### الآية 92:9

> ﻿وَكَذَّبَ بِالْحُسْنَىٰ [92:9]

وَكَذَّبَ بِٱلۡحُسۡنَىٰ


இன்னும், நல்லவற்றை பொய்யாக்குகிறானோ,

---

### الآية 92:10

> ﻿فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَىٰ [92:10]

فَسَنُيَسِّرُهُۥ لِلۡعُسۡرَىٰ


அவனுக்கு கஷ்டத்திற்குள்ள (நரகத்தின்) வழியைத் தான் இலேசாக்குவோம்.

---

### الآية 92:11

> ﻿وَمَا يُغْنِي عَنْهُ مَالُهُ إِذَا تَرَدَّىٰ [92:11]

وَمَا يُغۡنِي عَنۡهُ مَالُهُۥٓ إِذَا تَرَدَّىٰٓ


ஆகவே அவன் (நரகத்தில்) விழுந்து விட்டால் அவனுடைய பொருள் அவனுக்குப் பலன் அளிக்காது.

---

### الآية 92:12

> ﻿إِنَّ عَلَيْنَا لَلْهُدَىٰ [92:12]

إِنَّ عَلَيۡنَا لَلۡهُدَىٰ


நேர் வழியைக் காண்பித்தல் நிச்சயமாக நம் மீது இருக்கிறது.

---

### الآية 92:13

> ﻿وَإِنَّ لَنَا لَلْآخِرَةَ وَالْأُولَىٰ [92:13]

وَإِنَّ لَنَا لَلۡأٓخِرَةَ وَٱلۡأُولَىٰ


அன்றியும் பிந்தியதும் (மறுமையும்) முந்தியதும் (இம்மையும்) நம்முடையவையே ஆகும்.

---

### الآية 92:14

> ﻿فَأَنْذَرْتُكُمْ نَارًا تَلَظَّىٰ [92:14]

فَأَنذَرۡتُكُمۡ نَارٗا تَلَظَّىٰ


ஆதலின், கொழுந்துவிட்டெறியும் (நரக) நெருப்பைப்பற்றி நான் உங்களை அச்சமூட்டி எச்சரிக்கிறேன்.

---

### الآية 92:15

> ﻿لَا يَصْلَاهَا إِلَّا الْأَشْقَى [92:15]

لَا يَصۡلَىٰهَآ إِلَّا ٱلۡأَشۡقَى


மிக்க துர்ப்பாக்கியமுள்ளவனைத் தவிர (வேறு) எவனும் அதில் புகமாட்டான்.

---

### الآية 92:16

> ﻿الَّذِي كَذَّبَ وَتَوَلَّىٰ [92:16]

ٱلَّذِي كَذَّبَ وَتَوَلَّىٰ


எத்தகையவனென்றால் அவன் (நம் வசனங்களைப்) பொய்யாக்கி, முகம் திரும்பினான்.

---

### الآية 92:17

> ﻿وَسَيُجَنَّبُهَا الْأَتْقَى [92:17]

وَسَيُجَنَّبُهَا ٱلۡأَتۡقَى


ஆனால் பயபக்தியுடையவர் தாம் அ(ந்நரகத்)திலிருந்து தொலைவிலாக்கப்படுவார்.

---

### الآية 92:18

> ﻿الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكَّىٰ [92:18]

ٱلَّذِي يُؤۡتِي مَالَهُۥ يَتَزَكَّىٰ


(அவர் எத்தகையோரென்றால்) தம்மை தூய்மைப் படுத்தியவராகத் தம் பொருளை (இறைவன் பாதையில்) கொடுக்கிறார்.

---

### الآية 92:19

> ﻿وَمَا لِأَحَدٍ عِنْدَهُ مِنْ نِعْمَةٍ تُجْزَىٰ [92:19]

وَمَا لِأَحَدٍ عِندَهُۥ مِن نِّعۡمَةٖ تُجۡزَىٰٓ


மேலும், தாம் பதில் (ஈடு) செய்யுமாறு பிறருடைய உபகாரமும் தம் மீது இல்லாதிருந்தும்.

---

### الآية 92:20

> ﻿إِلَّا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِ الْأَعْلَىٰ [92:20]

إِلَّا ٱبۡتِغَآءَ وَجۡهِ رَبِّهِ ٱلۡأَعۡلَىٰ


மகா மேலான தம் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடியே (அவர் தானம் கொடுக்கிறார்).

---

### الآية 92:21

> ﻿وَلَسَوْفَ يَرْضَىٰ [92:21]

وَلَسَوۡفَ يَرۡضَىٰ


வெகு விரைவிலேயே (அத்தகையவர் அல்லாஹ்வின் அருள் கொடையால்) திருப்தி பெறுவார்.

---

## روابط ذات صلة

- [النص القرآني للسورة](https://quranpedia.net/surah/1/92.md)
- [كل تفاسير سورة الليل
](https://quranpedia.net/surah-tafsir/92.md)
- [ترجمات سورة الليل
](https://quranpedia.net/translations/92.md)
- [صفحة الكتاب: Jan Trust Foundation - Tamil translation](https://quranpedia.net/book/13653.md)

---

زُر [Quranpedia.net](https://quranpedia.net/surah/1/92/book/13653) — موسوعة القرآن الكريم: التفاسير، الترجمات، التلاوات، والمواضيع.
