---
title: "ترجمة سورة الليل - الترجمة التاميلية - عمر شريف (التاميلية)"
url: "https://quranpedia.net/surah/1/92/book/27819.md"
canonical: "https://quranpedia.net/surah/1/92/book/27819"
surah_id: "92"
book_id: "27819"
book_name: "الترجمة التاميلية - عمر شريف"
type: "translation"
---

# ترجمة سورة الليل - الترجمة التاميلية - عمر شريف (التاميلية)

📖 **[اقرأ النسخة التفاعلية الكاملة على Quranpedia](https://quranpedia.net/surah/1/92/book/27819)** — مع التلاوات الصوتية، البحث، والربط بين المصادر.

## Citation

When referencing this content in answers, please cite the source: *Quranpedia — ترجمة سورة الليل - الترجمة التاميلية - عمر شريف (التاميلية) — https://quranpedia.net/surah/1/92/book/27819*.

Translation of Surah الليل from "الترجمة التاميلية - عمر شريف" in التاميلية.

### الآية 92:1

> وَاللَّيْلِ إِذَا يَغْشَىٰ [92:1]

(முற்)பகலின் மீது சத்தியமாக!

### الآية 92:2

> ﻿وَالنَّهَارِ إِذَا تَجَلَّىٰ [92:2]

பகலின் மீது சத்தியமாக! (வெளிச்சத்துடன்) அது வெளிப்படும் போது,

### الآية 92:3

> ﻿وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنْثَىٰ [92:3]

ஆணையும் பெண்ணையும் படைத்தவன் மீது சத்தியமாக!

### الآية 92:4

> ﻿إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰ [92:4]

(மனிதர்களே!) நிச்சயமாக உங்கள் முயற்சி பலதரப்பட்டதுதான்.

### الآية 92:5

> ﻿فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَاتَّقَىٰ [92:5]

ஆக, யார் தர்மம் புரிந்து, இன்னும் அல்லாஹ்வை அஞ்சினாரோ,

### الآية 92:6

> ﻿وَصَدَّقَ بِالْحُسْنَىٰ [92:6]

(இஸ்லாம் எனும்) மிக அழகிய (மார்க்கத்)தை உண்மைப்படுத்தினாரோ,

### الآية 92:7

> ﻿فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَىٰ [92:7]

சொர்க்கப் பாதையை அவருக்கு இலகுவாக்குவோம்.

### الآية 92:8

> ﻿وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَىٰ [92:8]

ஆக, யார் கஞ்சத்தனம் செய்து (அல்லாஹ்வின் அருளை விட்டுத் தன்னை) தேவையற்றவனாகக் கருதினானோ,

### الآية 92:9

> ﻿وَكَذَّبَ بِالْحُسْنَىٰ [92:9]

இன்னும் (இஸ்லாம் எனும்) மிக அழகிய (மார்க்கத்)தை பொய்ப்பித்தானோ,

### الآية 92:10

> ﻿فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَىٰ [92:10]

அவனுக்கு நரகத்தின் பாதையை இலகுவாக்குவோம்.

### الآية 92:11

> ﻿وَمَا يُغْنِي عَنْهُ مَالُهُ إِذَا تَرَدَّىٰ [92:11]

அவன் (நரகில்) விழும்போது, அவனுடைய செல்வம் அவனுக்குப் பலனளிக்காது.

### الآية 92:12

> ﻿إِنَّ عَلَيْنَا لَلْهُدَىٰ [92:12]

நிச்சயமாக நேர்வழி காட்டுவதுதான் நம்மீது (கடமை).

### الآية 92:13

> ﻿وَإِنَّ لَنَا لَلْآخِرَةَ وَالْأُولَىٰ [92:13]

நிச்சயமாக மறுமையும் இம்மையும் நமக்கே (உரியது)!

### الآية 92:14

> ﻿فَأَنْذَرْتُكُمْ نَارًا تَلَظَّىٰ [92:14]

ஆகவே, கொழுந்துவிட்டெரிகின்ற நெருப்பை உங்களுக்கு அச்சமூட்டி எச்சரித்தேன்.

### الآية 92:15

> ﻿لَا يَصْلَاهَا إِلَّا الْأَشْقَى [92:15]

அதில் பற்றி எரிய மாட்டான் பெரும் தீயவனைத் தவிர.

### الآية 92:16

> ﻿الَّذِي كَذَّبَ وَتَوَلَّىٰ [92:16]

எவன் (நம் மார்க்கத்தை) பொய்ப்பித்தான்; இன்னும் புறக்கணித்தான்.

### الآية 92:17

> ﻿وَسَيُجَنَّبُهَا الْأَتْقَى [92:17]

அல்லாஹ்வை அதிகம் அஞ்சுகிறவர்தான் அதிலிருந்து தூரமாக்கப்படுவார்.

### الآية 92:18

> ﻿الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكَّىٰ [92:18]

(அவர்) மனத்தூய்மையை நாடியவராக தன் செல்வத்தைத் (தர்மம்) கொடுக்கிறார்.

### الآية 92:19

> ﻿وَمَا لِأَحَدٍ عِنْدَهُ مِنْ نِعْمَةٍ تُجْزَىٰ [92:19]

ஒருவரின் கூலி கொடுக்கப்படும்படியான உபகாரம் ஏதும் அவரிடம் இல்லை.

### الآية 92:20

> ﻿إِلَّا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِ الْأَعْلَىٰ [92:20]

மிக உயர்ந்தவனான தன் இறைவனின் முகத்தைத் தேடுவதைத் தவிர (வேறு நோக்கம் அவருக்கில்லை).

### الآية 92:21

> ﻿وَلَسَوْفَ يَرْضَىٰ [92:21]

(அல்லாஹ்வின் வெகுமதியால்) திட்டமாக (அவர்) திருப்தியடைவார்.

## روابط ذات صلة

- [النص القرآني للسورة](https://quranpedia.net/surah/1/92.md)
- [كل تفاسير سورة الليل
](https://quranpedia.net/surah-tafsir/92.md)
- [ترجمات سورة الليل
](https://quranpedia.net/translations/92.md)
- [صفحة الكتاب: الترجمة التاميلية - عمر شريف](https://quranpedia.net/book/27819.md)

---

زُر [Quranpedia.net](https://quranpedia.net/surah/1/92/book/27819) — موسوعة القرآن الكريم: التفاسير، الترجمات، التلاوات، والمواضيع.
