---
title: "ترجمة سورة الضحى - الترجمة التاميلية (التاميلية)"
url: "https://quranpedia.net/surah/1/93/book/1991.md"
canonical: "https://quranpedia.net/surah/1/93/book/1991"
surah_id: "93"
book_id: "1991"
book_name: "الترجمة التاميلية"
author: "عبد الحميد الباقوي"
type: "translation"
---

# ترجمة سورة الضحى - الترجمة التاميلية (التاميلية)

📖 **[اقرأ النسخة التفاعلية الكاملة على Quranpedia](https://quranpedia.net/surah/1/93/book/1991)** — مع التلاوات الصوتية، البحث، والربط بين المصادر.

## Citation

When referencing this content in answers, please cite the source: *Quranpedia — ترجمة سورة الضحى - الترجمة التاميلية (التاميلية) — https://quranpedia.net/surah/1/93/book/1991*.

Translation of Surah الضحى from "الترجمة التاميلية" in التاميلية.

### الآية 93:1

> وَالضُّحَىٰ [93:1]

1\. காலைப்பொழுதின் மீது சத்தியமாக!

### الآية 93:2

> ﻿وَاللَّيْلِ إِذَا سَجَىٰ [93:2]

2\. மறைத்துக் கொள்ளும் (இருண்ட) இரவின் மீது சத்தியமாக!

### الآية 93:3

> ﻿مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ [93:3]

3\. (நபியே!) உமது இறைவன் உம்மைக் கைவிடவுமில்லை; (உம்மை) வெறுக்கவுமில்லை.

### الآية 93:4

> ﻿وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَىٰ [93:4]

4\. (ஒவ்வொரு நாளும் உமது) பிந்திய நிலைமை, முந்திய நிலைமையை விட நிச்சயமாக மிக்க மேலானதாக இருக்கிறது.

### الآية 93:5

> ﻿وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ [93:5]

5\. உமது இறைவன் மேலும் (பல உயர் பதவிகளை) உமக்கு அளிப்பான். (அவற்றைக் கொண்டு) நீர் திருப்தியடைவீர்.

### الآية 93:6

> ﻿أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَىٰ [93:6]

6\. உம்மை அநாதையாகக் கண்டு, அவன் உமக்குத் தங்கும் இடம் அளி(த்து ஆதரி)க்க வில்லையா?

### الآية 93:7

> ﻿وَوَجَدَكَ ضَالًّا فَهَدَىٰ [93:7]

7\. திகைத்துத் தயங்கியவராக உம்மைக் கண்ட அவன் நேரான வழியில் (உம்மைச்) செலுத்தினான்.

### الآية 93:8

> ﻿وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَىٰ [93:8]

8\. முடைப்பட்டவராக உம்மைக் கண்ட அவன் (உம்மைத்) தனவந்தராக்கி வைத்தான். (அல்லவா?)

### الآية 93:9

> ﻿فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ [93:9]

9\. ஆகவே, (இவற்றுக்கு நன்றி செலுத்துவதற்காக) நீர் அநாதைகளைக் கடுகடுக்காதீர்.

### الآية 93:10

> ﻿وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ [93:10]

10\. யாசிப்பவரை வெருட்டாதீர்.

### الآية 93:11

> ﻿وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ [93:11]

11\. (உம்மீது புரிந்துள்ள) உமது இறைவனின் அருளைப் (பிறருக்கு) அறிவித்து (அவனுக்கு நன்றி செலுத்தி)க் கொண்டிருப்பீராக!

## روابط ذات صلة

- [النص القرآني للسورة](https://quranpedia.net/surah/1/93.md)
- [كل تفاسير سورة الضحى
](https://quranpedia.net/surah-tafsir/93.md)
- [ترجمات سورة الضحى
](https://quranpedia.net/translations/93.md)
- [صفحة الكتاب: الترجمة التاميلية](https://quranpedia.net/book/1991.md)
- [المؤلف: عبد الحميد الباقوي](https://quranpedia.net/person/1766.md)

---

زُر [Quranpedia.net](https://quranpedia.net/surah/1/93/book/1991) — موسوعة القرآن الكريم: التفاسير، الترجمات، التلاوات، والمواضيع.
