---
title: "ترجمة سورة التين - الترجمة التاميلية (التاميلية)"
url: "https://quranpedia.net/surah/1/95/book/1991.md"
canonical: "https://quranpedia.net/surah/1/95/book/1991"
surah_id: "95"
book_id: "1991"
book_name: "الترجمة التاميلية"
author: "عبد الحميد الباقوي"
type: "translation"
---

# ترجمة سورة التين - الترجمة التاميلية (التاميلية)

📖 **[اقرأ النسخة التفاعلية الكاملة على Quranpedia](https://quranpedia.net/surah/1/95/book/1991)** — مع التلاوات الصوتية، البحث، والربط بين المصادر.

## Citation

When referencing this content in answers, please cite the source: *Quranpedia — ترجمة سورة التين - الترجمة التاميلية (التاميلية) — https://quranpedia.net/surah/1/95/book/1991*.

Translation of Surah التين from "الترجمة التاميلية" in التاميلية.

### الآية 95:1

> وَالتِّينِ وَالزَّيْتُونِ [95:1]

1\. அத்தியின் மீதும்,ஜெய்தூனின் மீதும் சத்தியமாக!

### الآية 95:2

> ﻿وَطُورِ سِينِينَ [95:2]

2\. ஸினாய் மலையின் மீதும் சத்தியமாக!

### الآية 95:3

> ﻿وَهَٰذَا الْبَلَدِ الْأَمِينِ [95:3]

3\. அபயமளிக்கும் இந்நகரத்தின் மீதும் சத்தியமாக,

### الآية 95:4

> ﻿لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ [95:4]

4\. நிச்சயமாக நாம் மனிதனை மிக்க அழகான அமைப்பில் படைத்திருக்கிறோம்.

### الآية 95:5

> ﻿ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ [95:5]

5\. (அவனுடைய தீய நடத்தையின் காரணமாகப்) பின்னர், அவனைத் தாழ்ந்தவர்களிலும் தாழ்ந்தவனாக நாம் ஆக்கி விடுகிறோம்.

### الآية 95:6

> ﻿إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ [95:6]

6\. ஆயினும், எவர்கள் நம்பிக்கைகொண்டு நற்செயல்களைச் செய்து வருகிறார்களோ அவர்களைத் தவிர. (அவர்கள் மேலான தன்மையில் இருப்பதுடன்) அவர்களுக்கு (என்றென்றுமே) தடைபடாத (நற்)கூலியுண்டு.

### الآية 95:7

> ﻿فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّينِ [95:7]

7\. கூலி கொடுக்கும் நாளைப் பற்றி (நபியே!) இதற்குப் பின்னர், உம்மை எவர்தான் பொய்யாக்க முடியும்?

### الآية 95:8

> ﻿أَلَيْسَ اللَّهُ بِأَحْكَمِ الْحَاكِمِينَ [95:8]

8\. தீர்ப்பளிப்பவர்களில் எல்லாம், அல்லாஹ் மிக மேலான நீதிபதியல்லவா?

## روابط ذات صلة

- [النص القرآني للسورة](https://quranpedia.net/surah/1/95.md)
- [كل تفاسير سورة التين
](https://quranpedia.net/surah-tafsir/95.md)
- [ترجمات سورة التين
](https://quranpedia.net/translations/95.md)
- [صفحة الكتاب: الترجمة التاميلية](https://quranpedia.net/book/1991.md)
- [المؤلف: عبد الحميد الباقوي](https://quranpedia.net/person/1766.md)

---

زُر [Quranpedia.net](https://quranpedia.net/surah/1/95/book/1991) — موسوعة القرآن الكريم: التفاسير، الترجمات، التلاوات، والمواضيع.
