---
title: "ترجمة سورة العلق - الترجمة التاميلية (التاميلية)"
url: "https://quranpedia.net/surah/1/96/book/1991.md"
canonical: "https://quranpedia.net/surah/1/96/book/1991"
surah_id: "96"
book_id: "1991"
book_name: "الترجمة التاميلية"
author: "عبد الحميد الباقوي"
type: "translation"
---

# ترجمة سورة العلق - الترجمة التاميلية (التاميلية)

📖 **[اقرأ النسخة التفاعلية الكاملة على Quranpedia](https://quranpedia.net/surah/1/96/book/1991)** — مع التلاوات الصوتية، البحث، والربط بين المصادر.

## Citation

When referencing this content in answers, please cite the source: *Quranpedia — ترجمة سورة العلق - الترجمة التاميلية (التاميلية) — https://quranpedia.net/surah/1/96/book/1991*.

Translation of Surah العلق from "الترجمة التاميلية" in التاميلية.

### الآية 96:1

> اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ [96:1]

1\. (நபியே! அனைத்தையும்) படைத்த உமது இறைவனின் பெயரால் (அவனது கட்டளைகள் அடங்கிய திரு குர்ஆனை) ஓதுவீராக!

### الآية 96:2

> ﻿خَلَقَ الْإِنْسَانَ مِنْ عَلَقٍ [96:2]

2\. அவனே மனிதனை இரத்தக்கட்டியிலிருந்து படைக்கிறான்.

### الآية 96:3

> ﻿اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ [96:3]

3\. (நபியே! மேலும்) நீர் ஓதுவீராக! உமது இறைவன் மாபெரும் கொடையாளி!

### الآية 96:4

> ﻿الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ [96:4]

4\. அவன்தான் எழுதுகோலைக் கொண்டு (எழுதக்) கற்றுக் கொடுத்தான்.

### الآية 96:5

> ﻿عَلَّمَ الْإِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ [96:5]

5\. (அதன் மூலம்) மனிதன் அறியாதவற்றை எல்லாம் அவனுக்குக் கற்றுக் கொடுக்கிறான்.

### الآية 96:6

> ﻿كَلَّا إِنَّ الْإِنْسَانَ لَيَطْغَىٰ [96:6]

6, 7. (இவ்வாறிருந்தும்,) மனிதன் (அவனுக்கு நன்றி செலுத்துவதற்குப் பதிலாகத்) தன்னை (இறைவனின் அருளிலிருந்து) தேவையற்றவன் என்று மெய்யாகவே எண்ணிக்கொண்டு, அவனுக்கு மாறு செய்கிறான்.

### الآية 96:7

> ﻿أَنْ رَآهُ اسْتَغْنَىٰ [96:7]

6, 7. (இவ்வாறிருந்தும்,) மனிதன் (அவனுக்கு நன்றி செலுத்துவதற்குப் பதிலாகத்) தன்னை (இறைவனின் அருளிலிருந்து) தேவையற்றவன் என்று மெய்யாகவே எண்ணிக்கொண்டு, அவனுக்கு மாறு செய்கிறான்.

### الآية 96:8

> ﻿إِنَّ إِلَىٰ رَبِّكَ الرُّجْعَىٰ [96:8]

8\. நிச்சயமாக உமது இறைவன் பக்கம்தான் (அவன்) மீள வேண்டும்.

### الآية 96:9

> ﻿أَرَأَيْتَ الَّذِي يَنْهَىٰ [96:9]

9-10. (நபியே!) ஓர் அடியார் தொழுதால், அதைத் தடை செய்கின்றவனை நீர் (கவனித்துப்) பார்த்தீரா?

### الآية 96:10

> ﻿عَبْدًا إِذَا صَلَّىٰ [96:10]

9-10. (நபியே!) ஓர் அடியார் தொழுதால், அதைத் தடை செய்கின்றவனை நீர் (கவனித்துப்) பார்த்தீரா?

### الآية 96:11

> ﻿أَرَأَيْتَ إِنْ كَانَ عَلَى الْهُدَىٰ [96:11]

11-12. அவர் நேரான பாதையில் இருந்துகொண்டு, இறையச்சத்தை ஏவிக்கொண்டிருந்தும் (அவரை அவன் தடை செய்வதை) நீர் (கவனித்துப்) பார்த்தீரா?

### الآية 96:12

> ﻿أَوْ أَمَرَ بِالتَّقْوَىٰ [96:12]

11-12. அவர் நேரான பாதையில் இருந்துகொண்டு, இறையச்சத்தை ஏவிக்கொண்டிருந்தும் (அவரை அவன் தடை செய்வதை) நீர் (கவனித்துப்) பார்த்தீரா?

### الآية 96:13

> ﻿أَرَأَيْتَ إِنْ كَذَّبَ وَتَوَلَّىٰ [96:13]

13\. (அவன், அவரைப்) பொய்யாக்கிப் புறக்கணிப்பதையும் நீர் கவனித்தீரா?

### الآية 96:14

> ﻿أَلَمْ يَعْلَمْ بِأَنَّ اللَّهَ يَرَىٰ [96:14]

14\. (அவன் செய்யும் இந்த துஷ்ட காரியங்களை) நிச்சயமாக அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லையா?

### الآية 96:15

> ﻿كَلَّا لَئِنْ لَمْ يَنْتَهِ لَنَسْفَعًا بِالنَّاصِيَةِ [96:15]

15, 16. (இவ்வாறு அவன் செய்வது) தகாது; (இந்த துஷ்ட செயலிலிருந்து) அவன் விலகிக் கொள்ளாவிடில், குற்றம் செய்யும் அப்பொய்யனின் முன் குடுமியைப் பிடித்து நாம் இழுப்போம்.

### الآية 96:16

> ﻿نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ [96:16]

15, 16. (இவ்வாறு அவன் செய்வது) தகாது; (இந்த துஷ்ட செயலிலிருந்து) அவன் விலகிக் கொள்ளாவிடில், குற்றம் செய்யும் அப்பொய்யனின் முன் குடுமியைப் பிடித்து நாம் இழுப்போம்.

### الآية 96:17

> ﻿فَلْيَدْعُ نَادِيَهُ [96:17]

17\. ஆகவே, அவன் (தன் உதவிக்காகத்) தன் சபையோரை அழைக்கட்டும்.

### الآية 96:18

> ﻿سَنَدْعُ الزَّبَانِيَةَ [96:18]

18\. நாமும் (அவனை நரகத்திற்கு அனுப்ப, நரகத்தின்) காவலாளிகளை அழைப்போம்.

### الآية 96:19

> ﻿كَلَّا لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِبْ ۩ [96:19]

19\. (நபியே!) நிச்சயமாக நீர் அவனுக்குக் கீழ்ப்படியாதீர். (உமது இறைவனுக்குச்) சிரம் பணிந்து வணங்கி (அவனை) நெருங்குவீராக!

## روابط ذات صلة

- [النص القرآني للسورة](https://quranpedia.net/surah/1/96.md)
- [كل تفاسير سورة العلق
](https://quranpedia.net/surah-tafsir/96.md)
- [ترجمات سورة العلق
](https://quranpedia.net/translations/96.md)
- [صفحة الكتاب: الترجمة التاميلية](https://quranpedia.net/book/1991.md)
- [المؤلف: عبد الحميد الباقوي](https://quranpedia.net/person/1766.md)

---

زُر [Quranpedia.net](https://quranpedia.net/surah/1/96/book/1991) — موسوعة القرآن الكريم: التفاسير، الترجمات، التلاوات، والمواضيع.
