---
title: "ترجمة سورة العلق - الترجمة التاميلية - عمر شريف (التاميلية)"
url: "https://quranpedia.net/surah/1/96/book/27819.md"
canonical: "https://quranpedia.net/surah/1/96/book/27819"
surah_id: "96"
book_id: "27819"
book_name: "الترجمة التاميلية - عمر شريف"
type: "translation"
---

# ترجمة سورة العلق - الترجمة التاميلية - عمر شريف (التاميلية)

📖 **[اقرأ النسخة التفاعلية الكاملة على Quranpedia](https://quranpedia.net/surah/1/96/book/27819)** — مع التلاوات الصوتية، البحث، والربط بين المصادر.

## Citation

When referencing this content in answers, please cite the source: *Quranpedia — ترجمة سورة العلق - الترجمة التاميلية - عمر شريف (التاميلية) — https://quranpedia.net/surah/1/96/book/27819*.

Translation of Surah العلق from "الترجمة التاميلية - عمر شريف" in التاميلية.

### الآية 96:1

> اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ [96:1]

நிச்சயமாக நாம் இதை "கத்ரு” இரவில் இறக்கினோம்.

### الآية 96:2

> ﻿خَلَقَ الْإِنْسَانَ مِنْ عَلَقٍ [96:2]

அவன் மனிதனைக் கருவிலிருந்து படைத்தான்.

### الآية 96:3

> ﻿اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ [96:3]

படிப்பீராக! இன்னும் உம் இறைவன் பெரும் கண்ணியவான் ஆவான்.

### الآية 96:4

> ﻿الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ [96:4]

அவன் எழுதுகோல் மூலம் (எழுதுவதைக்) கற்பித்தான்.

### الآية 96:5

> ﻿عَلَّمَ الْإِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ [96:5]

மனிதனுக்கு அவன் அறியாததைக் கற்பித்தான்.

### الآية 96:6

> ﻿كَلَّا إِنَّ الْإِنْسَانَ لَيَطْغَىٰ [96:6]

அவ்வாறல்ல, நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்,

### الآية 96:7

> ﻿أَنْ رَآهُ اسْتَغْنَىٰ [96:7]

தன்னைத் தேவையற்றவனாக எண்ணியதால் (அவன் வரம்பு மீறுகிறான்).

### الآية 96:8

> ﻿إِنَّ إِلَىٰ رَبِّكَ الرُّجْعَىٰ [96:8]

நிச்சயமாக மீட்சி உம் இறைவனின் பக்கம்தான் இருக்கிறது.

### الآية 96:9

> ﻿أَرَأَيْتَ الَّذِي يَنْهَىٰ [96:9]

(நபியே! தொழுகையிலிருந்து) தடுப்பவனைப் பார்த்தீரா?

### الآية 96:10

> ﻿عَبْدًا إِذَا صَلَّىٰ [96:10]

(அவன்) ஓர் அடியாரை அவர் தொழும்போது (தடுகின்றான்).

### الآية 96:11

> ﻿أَرَأَيْتَ إِنْ كَانَ عَلَى الْهُدَىٰ [96:11]

பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்தாலுமா (அவன் அவரைத் தடுப்பான்)?

### الآية 96:12

> ﻿أَوْ أَمَرَ بِالتَّقْوَىٰ [96:12]

அல்லது அவர் இறையச்சமிக்க நன்மையை ஏவினாலுமா (அவன் அவரைத் தடுப்பான்)?

### الآية 96:13

> ﻿أَرَأَيْتَ إِنْ كَذَّبَ وَتَوَلَّىٰ [96:13]

பார்த்தீரா? அவன் பொய்ப்பித்தால், இன்னும் புறக்கணித்தால்

### الآية 96:14

> ﻿أَلَمْ يَعْلَمْ بِأَنَّ اللَّهَ يَرَىٰ [96:14]

நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?

### الآية 96:15

> ﻿كَلَّا لَئِنْ لَمْ يَنْتَهِ لَنَسْفَعًا بِالنَّاصِيَةِ [96:15]

அவ்வாறல்ல, (அவன் தன் தீய செயல்களிலிருந்து) விலகவில்லையெனில் (அவனுடைய) நெற்றிமுடியைக் கடுமையாகப் பிடிப்போம்.

### الآية 96:16

> ﻿نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ [96:16]

(அது அவன் பொய் கூறுகின்றவன், குற்றம் புரிகின்றவன் உடைய) நெற்றி முடி. (இன்னும் நரகத்தில் வீசுவோம்.)

### الآية 96:17

> ﻿فَلْيَدْعُ نَادِيَهُ [96:17]

ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.

### الآية 96:18

> ﻿سَنَدْعُ الزَّبَانِيَةَ [96:18]

நரகத்தின் காவலாளிகளை நாம் அழைப்போம்.

### الآية 96:19

> ﻿كَلَّا لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِبْ ۩ [96:19]

அவ்வாறல்ல, அவனுக்குக் கீழ்ப்படியாதீர்! (உம் இறைவனுக்குச்) சிரம் பணிவீராக! (அவனளவில்) நெருங்குவீராக!

## روابط ذات صلة

- [النص القرآني للسورة](https://quranpedia.net/surah/1/96.md)
- [كل تفاسير سورة العلق
](https://quranpedia.net/surah-tafsir/96.md)
- [ترجمات سورة العلق
](https://quranpedia.net/translations/96.md)
- [صفحة الكتاب: الترجمة التاميلية - عمر شريف](https://quranpedia.net/book/27819.md)

---

زُر [Quranpedia.net](https://quranpedia.net/surah/1/96/book/27819) — موسوعة القرآن الكريم: التفاسير، الترجمات، التلاوات، والمواضيع.
