ﯮ
                    surah.translation
            .
            
                            
            
    ﰡ
நபியே! உமது மனைவிகளின் பொருத்தத்தை நாடி, அல்லாஹ் உமக்கு ஆகுமாக்கியதை நீர் ஏன் (உமக்கு) விலக்கிக் கொள்கிறீர்? அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன்.
                                                                        அவர்கள் (அப்பெண்கள் இத்தாவை முடித்து, இத்தாவில் இருந்து வெளியேற வேண்டிய) தங்கள் தவணையை அடைந்துவிட்டால் அவர்களை (-அப்பெண்களை) நல்ல முறையில் (உங்கள் திருமணத்திலேயே) தடுத்து வையுங்கள். அல்லது நல்ல முறையில் அவர்களை நீங்கள் பிரிந்து விடுங்கள். உங்களில் நீதமான இருவரை (தடுத்து வைக்கும் போதும் அல்லது பிரியும் போதும்) சாட்சியாக்குங்கள்! அல்லாஹ்விற்காக சாட்சியத்தை நிலை நிறுத்துங்கள்! இவை (-இந்த சட்டங்கள்) எவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டிருப்பாரோ அவர் இவற்றின் மூலம் உபதேசிக்கப்படுகின்றார். எவர் அல்லாஹ்வை அஞ்சுவாரோ அவருக்கு அல்லாஹ் ஒரு (நல்ல) தீர்வை ஏற்படுத்துவான்.
                                                                        இன்னும் அவர் எண்ணாத விதத்தில் இருந்து அவருக்கு உணவளிப்பான் (வாழ்வாதாரத்தை ஏற்படுத்துவான்). எவர் அல்லாஹ்வின் மீது தவக்குல் - நம்பிக்கை வைப்பாரோ அவனே அவருக்குப் போதுமானவன் ஆவான். நிச்சயமாக அல்லாஹ் தனது காரியத்தை நிறைவேற்றுவான். (யாரும் அவனை தடுக்க முடியாது, எதுவும் அவனை விட்டு தப்ப முடியாது.) திட்டமாக அல்லாஹ் ஒவ்வொன்றுக்கும் ஓர் அளவை ஏற்படுத்தினான்.
                                                                        உங்கள் பெண்களில் எவர்கள் மாதவிடாயிலிருந்து நிராசை அடைந்து விட்டனரோ (அவர்களின் இத்தா விஷயத்தில்) நீங்கள் சந்தேகித்தால் அவர்களின் இத்தா மூன்று மாதங்களாகும். இன்னும் (இது வரை) மாதவிடாய் வராத பெண்களுக்கும் (இத்தா மூன்று மாதங்களாகும்). கர்ப்பமுடைய பெண்கள் அவர்களின் (இத்தா) தவணை அவர்கள் தங்கள் கர்ப்பத்தை பெற்றெடுப்பதாகும். எவர் அல்லாஹ்வை அஞ்சுவாரோ அவருக்கு அவரின் காரியத்தில் இலகுவை அவன் ஏற்படுத்துவான்.
                                                                        இது அல்லாஹ்வின் கட்டளையாகும். அவன் இதை உங்களுக்கு இறக்கி இருக்கின்றான். எவர் அல்லாஹ்வை அஞ்சுவாரோ அவரை விட்டும் அவரின் பாவங்களை அவன் போக்குவான். இன்னும் அவருக்கு கூலியை பெரிதாக்குவான்.
                                                                        உங்கள் வசதிக்கேற்ப நீங்கள் தங்கும் இடத்தில் அவர்களை தங்க வையுங்கள்! (தங்குமிடத்தில்) அவர்கள் மீது நீங்கள் நெருக்கடியை ஏற்படுத்துவதற்காக அவர்களுக்கு தீங்கு செய்யாதீர்கள். அவர்கள் கர்ப்பம் உள்ள பெண்களாக இருந்தால் அவர்கள் தங்கள் கர்ப்பத்தை பெற்றெடுக்கின்ற வரை அவர்களுக்கு செலவு செய்யுங்கள்! அவர்கள் உங்களுக்காக (உங்கள் பிள்ளைகளுக்கு) பாலூட்டினால் அவர்களின் ஊதியங்களை அவர்களுக்குக் கொடுங்கள்! உங்களுக்கு மத்தியில் நல்லதை ஒருவருக்கொருவர் ஏற்றுக் கொள்ளுங்கள்! (ஒருவர் கூறுகின்ற நல்லதை மற்றொருவர் ஏற்றுக்கொள்ளட்டும்.) நீங்கள் (கணவன், மனைவி இருவரும்) சிரமமாகக் கருதினால் அவருக்காக (அவரின் குழந்தைக்கு) வேறு ஒரு பெண் பாலூட்டுவாள்.
                                                                        வசதியுடையவர் தனது வசதியிலிருந்து செலவு செய்யட்டும். எவர் ஒருவர் அவர் மீது அவருடைய வாழ்வாதாரம் நெருக்கடியாக இருக்கின்றதோ அவர் தனக்கு அல்லாஹ் கொடுத்ததில் இருந்து செலவு செய்யட்டும். அல்லாஹ் ஓர் ஆன்மாவிற்கு சிரமம் கொடுக்க மாட்டான் அவன் அதற்கு கொடுத்ததைத் தவிர (அவன் அதற்கு கொடுத்த சக்திக்கு உட்பட்டே தவிர). சிரமத்திற்கு பின்னர் அல்லாஹ் இலகுவை ஏற்படுத்துவான்.
                                                                        எத்தனையோ ஊர்கள் தமது இறைவனின் கட்டளையையும் தமது தூதரின் கட்டளையையும் மீறின. நாம் அவற்றை கடுமையான விசாரணையால் விசாரித்தோம். இன்னும் அவற்றை மோசமான தண்டனையால் வேதனை செய்தோம்.
                                                                        அவை (-அந்த ஊர்கள்) தமது காரியத்தின் கெட்ட முடிவை சுவைத்தன. அவற்றின் காரியத்தின் (அந்த ஊரார்களின் செயல்களின்) முடிவு மிக நஷ்டமாகவே ஆகிவிட்டது.
                                                                        அல்லாஹ் அவர்களுக்கு (-அவ்வூர்வாசிகளுக்கு) கடுமையான தண்டனையை தயார் செய்துள்ளான். ஆகவே, நம்பிக்கை கொண்ட அறிவுடையவர்களே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு திட்டமாக நல்லுபதேசத்தை இறக்கினான்.
                                                                        (இன்னும்) ஒரு தூதரை (அனுப்பி இருக்கின்றான்). அவர் உங்களுக்கு அல்லாஹ்வின் தெளிவான வசனங்களை ஓதிக் காண்பிக்கிறார். ஏனெனில், நம்பிக்கை கொண்டு, நன்மைகள் செய்தவர்களை இருள்களில் இருந்து ஒளியின் பக்கம் அவன் வெளியேற்றுவதற்காக (தூதரை அனுப்பினான்). எவர்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, நன்மையை செய்வார்களோ அவர்களை அவன் சொர்க்கங்களில் பிரவேசிக்க வைப்பான். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவர்கள் அவற்றில் எப்போதும் நிரந்தரமாகத் தங்குவார்கள். அல்லாஹ் அவர்களுக்கு (அங்கு) வாழ்வாதாரத்தை (உணவு, குடிபானம், இன்னும் எல்லாத் தேவைகளையும்) மிக அழகாக (விசாலமாக, நெருக்கடியின்றி) வைத்திருக்கின்றான்.
                                                                        அல்லாஹ்தான் ஏழு வானங்களையும் படைத்தான். இன்னும் பூமியில் அவற்றைப் போன்று (-ஏழு பூமிகளை) படைத்தான். அவற்றுக்கு மத்தியில் (அவனுடைய) கட்டளைகள் இறங்குகின்றன. நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன், நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களையும் அறிவால் சூழ்ந்துள்ளான் என்பதை நீங்கள் அறிவதற்காக (இவற்றை அவன் உங்களுக்கு விவரிக்கின்றான்).