40. (அதற்கு) ஜகரிய்யா (அல்லாஹ்வை நோக்கி) ‘‘என் இறைவனே! எனக்கு எப்படி சந்ததி உண்டாகும். நிச்சயமாக நானோ முதுமையை அடைந்துவிட்டேன். என் மனைவியோ மலடியாயிருக்கிறாள்'' என்று கூறினார். (அதற்கு இறைவன்) ‘‘இப்படியே (நடைபெறும்). அல்லாஹ், தான் விரும்பியதை (அவசியம்) செய்(தே தீரு)வான்'' என்று கூறினான்.