ﯢ
ترجمة معاني سورة النجم
باللغة التاميلية من كتاب الترجمة التاميلية - عمر شريف
.
ﰡ
மறுமை நெருங்கிவிட்டது. சந்திரன் பிளந்து விட்டது.
உங்கள் தோழர் நேர்வழியிலிருந்து விலகிவிடல்லை. இன்னும், தீய பாதையில் செல்லவில்லை.
அவர் (இந்த குர்ஆனை) மன இச்சையால் பேச மாட்டார்.
இது (அவருக்கு) அறிவிக்கப்படுகின்ற வஹ்யே தவிர வேறு இல்லை.
ஆற்றலால் வலிமை மிக்கவர் (-ஜிப்ரீல்) இவருக்கு இதை கற்பித்தார்.
அவர் அழகிய தோற்றமுடையவர். அவரும் அவரும் (ஜிப்ரீலும் நபியும் நேருக்கு நேர்) சமமானார்கள்.
அவரும் அவரும் (-ஜிப்ரீலும் நபியும்) மிக உயர்ந்த வான உச்சியில் (நேருக்கு நேர் சமமானார்கள்).
பிறகு, அவர் (அவருக்கு) நெருக்கமானார். இன்னும் மிக அதிகமாக (அவரை) நெருங்கினார்.
அவர் (அவருக்கு) இரண்டு வில்லின் அளவுக்கு அல்லது அதைவிட மிக நெருக்கமாக ஆகிவிட்டார்.
அவனுடைய (-அல்லாஹ்வுடைய) அடிமை(யாகிய நபி)க்கு ஜிப்ரீல் (தமக்கு) எதை (தமது இறைவன்) வஹ்யி அறிவித்தானோ அதை (நபி அவர்களுக்கு) வஹ்யி அறிவித்தார்.
(நபி) எதை (தனது கண்களால்) பார்த்தாரோ அதை (அவருடைய) உள்ளம் பொய்ப்பிக்கவில்லை. (உள்ளமும் அதை நம்பிக்கை கொண்டது.)
அவர் பார்த்ததில் அவரிடம் நீங்கள் தர்க்கம் செய்கின்றீர்களா?
திட்டவட்டமாக அவர் (-நபி முஹம்மது) அவரை (-ஜிப்ரீலை) மற்றொரு முறைப் பார்த்தார்,
சித்ரத்துல் முன்தஹா என்ற இடத்தில்.
அங்குதான் அல்மஃவா சொர்க்கம் இருக்கின்றது. (சித்ரதுல் முன்தஹா -இறுதி இடத்தில் உள்ள இலந்தை மரம்.)
எது சூழ்ந்து கொள்ளுமோ அது அந்த சித்ராவை (-இலந்தை மரத்தை) சூழ்ந்து கொள்ளும் போது (அவர் அவரை மற்றொரு முறை பார்த்தார்).
(நபியின்) பார்வை (அவர் பார்த்ததை விட்டும் இங்கும் அங்கும்) சாயவில்லை, (அல்லாஹ் அவருக்கு நிர்ணயித்த எல்லையை) மீறவுமில்லை.
திட்டவட்டமாக அவர் தனது இறைவனின் பெரிய அத்தாட்சிகளில் (ஒன்றைப்) பார்த்தார்.
லாத், உஸ்ஸாவைப் பற்றி (எனக்கு) நீங்கள் அறிவியுங்கள்!
இன்னும், மற்றொரு மூன்றாவது மனாத்தைப் பற்றியும் (-இவை அல்லாஹ்வின் பெண் பிள்ளைகள் என்று நீங்கள் கூறுவதின் உண்மைத் தன்மையைப் பற்றி எனக்கு நீங்கள் அறிவியுங்கள்)!
உங்களுக்கு (நீங்கள் விரும்புகின்ற) ஆண்பிள்ளையும் அவனுக்கு (நீங்கள் உங்களுக்கு வெறுக்கின்ற) பெண் பிள்ளையுமா?
அப்படியென்றால் இது ஒரு அநியாயமான பங்கீடாகும்.
இவை எல்லாம் வெறும் பெயர்களே தவிர வேறில்லை. இவற்றுக்கு நீங்களும் உங்கள் மூதாதைகளும் பெயர் வைத்தீர்கள். அல்லாஹ் இவற்றுக்கு எவ்வித ஆதாரத்தையும் இறக்கவில்லை. நீங்கள் வீண் எண்ணத்தையும் மனங்கள் விரும்புகின்றதையும் தவிர வேறு எதையும் நீங்கள் பின்பற்றுவதில்லை. அவர்களின் இறைவனிடமிருந்து நேர்வழி திட்டவட்டமாக வந்துள்ளது (அதாவது இவற்றை வணங்குவது கூடாது, வணக்க வழிபாடு அல்லாஹ் ஒருவனுக்கே தவிர வேறு யாருக்கும் தகுதியாகாது.)
மனிதனுக்கு அவன் விரும்பியது கிடைத்துவிடுமா?
மறுமையும் இந்த உலகமும் அல்லாஹ்விற்கே உரியது.
வானங்களில் உள்ள எத்தனையோ வானவர்கள், அவர்களின் சிபாரிசு (அல்லாஹ்வின் வேதனையில் இருந்து) எதையும் தடுக்காது அல்லாஹ்வின் அனுமதிக்கு பின்னரே தவிர, (அதுவும்) அவன் நாடுகின்ற, அவன் விரும்புகின்றவருக்கு (மட்டுமே பலன் தரும்).
நிச்சயமாக மறுமையை நம்பிக்கை கொள்ளாதவர்கள் வானவர்களுக்கு பெண்களின் பெயர்களை பெயர் சூட்டுகின்றார்கள்.
அவர்களுக்கு அ(வர்கள் செய்வ)தைப் பற்றி எவ்வித கல்வி அறிவும் இல்லை. அவர்கள் வீண் எண்ணத்தைத் தவிர வேறு எதையும் பின்பற்றுவதில்லை. நிச்சயமாக வீண் எண்ணம் உண்மைக்கு பதிலாக அறவே பலன் தராது. (உண்மையின் இடத்தில் வீண் எண்ணம் நிற்கமுடியாது.)
ஆகவே, நமது நினைவை விட்டு (-குர்ஆனை விட்டு) விலகியவர்களை (நபியே!) நீர் புறக்கணிப்பீராக! அவர்கள் உலக வாழ்க்கையைத் தவிர வேறு எதையும் நாடவில்லை.
அதுதான் அவர்களது கல்வியின் முதிர்ச்சியாகும். நிச்சயமாக உமது இறைவன்தான் தனது பாதையை விட்டு வழிதவறியவர்களை மிக அறிந்தவன். இன்னும் அவன் நேர்வழி பெற்றவர்களையும் மிக அறிந்தவன்.
வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அல்லாஹ்விற்கே உரியன. இறுதியில், தீமை செய்தவர்களுக்கு அவர்கள் செய்தவற்றுக்கு (தகுந்த தண்டனையை) அவன் கூலி(யாகக்) கொடுப்பான்; நன்மை செய்தவர்களுக்கு சொர்க்கத்தை அவன் கூலி(யாகக்) கொடுப்பான்.
அவர்கள் பெரும் பாவங்கள், இன்னும் மானக்கேடான செயல்களை விட்டும் விலகி இருப்பார்கள், சிறு தவறுகளைத் தவிர. (அந்த சிறு தவறுகளை அல்லாஹ் அவர்களுக்கு மன்னித்து விடுவான்.) நிச்சயமாக உமது இறைவன் விசாலமான மன்னிப்புடையவன். அவன் உங்களை பூமியில் இருந்து உருவாக்கிய போதும் (ஆதமை மண்ணிலிருந்து படைத்த போதும், பிறகு,) நீங்கள் உங்கள் தாய்மார்களின் வயிறுகளில் சிசுக்களாக இருந்த போதும் அவன் உங்களை (-யார் நல்லவர், யார் தீயவர் என்று) மிக அறிந்தவனாக இருக்கின்றான். ஆகவே, உங்களை நீங்களே (தூய்மையானவர்களாக) பீத்திக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சியவர்களை அவன் மிக அறிந்தவன் ஆவான்.
(நபியே!) நீர் அறிவிப்பீராக! ஒருவன் (இந்த மார்க்கத்தை விட்டு) புறக்கணித்தான்.
அவன் (தனது நண்பனுக்கு தனது செல்வத்தில் இருந்து) கொஞ்சம் கொடுத்தான். பிறகு நிறுத்திக் கொண்டான்.
அவனிடம் மறைவானவற்றின் அறிவு இருக்கிறதா? அவன் (என்ன அவற்றைப்) பார்க்கின்றானா?
மூசாவின் ஏடுகளில் உள்ளவற்றைப் பற்றி அவனுக்கு செய்தி அறிவிக்கப்படவில்லையா?
இன்னும் (தனது தூதுவத்தை) முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீமுடைய (ஏட்டில் உள்ளதைப் பற்றி அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?)
அதாவது, பாவம் செய்த ஆன்மா இன்னொரு பாவியான ஆன்மாவின் பாவத்தை சுமக்காது.
இன்னும், மனிதனுக்கு அவன் எதை அடைய முயற்சித்தானோ அதைத் தவிர வேறு ஏதும் இல்லை.
இன்னும், நிச்சயமாக தனது முயற்ச்சியை (-தனது முயற்சியின் பலனை) அவன் விரைவில் காண்பான்.
பிறகு, மிக பூரணமான கூலியை அதற்கு அவன் கூலி கொடுக்கப்படுவான்.
இன்னும், நிச்சயமாக உமது இறைவன் பக்கம்தான் இறுதி ஒதுங்குமிடம் இருக்கிறது.
இன்னும், நிச்சயமாக அவன்தான் சிரிக்க வைக்கின்றான்; அழ வைக்கின்றான்.
இன்னும், நிச்சயமாக அவன்தான் மரணிக்க வைக்கின்றான்; உயிர் கொடுக்கின்றான்.
இன்னும், நிச்சயமாக அவன்தான் இரு ஜோடிகளை -ஆணையும் பெண்ணையும்- படைத்தான்,
(கருவறையில்) இந்திரியமாக செலுத்தப்படுகின்ற இந்திரியத்தில் இருந்து.
இன்னும் நிச்சயமாக அவன் மீதே மற்றொரு முறை (இவர்களை) உருவாக்குவதும் கடமையாக இருக்கிறது.
இன்னும் நிச்சயமாக அவன்தான் (சிலரை) செல்வந்தராக ஆக்கினான்; (அவர்களுக்கு) சேமிப்பைக் கொடுத்தான். (இன்னும் சிலரை ஏழ்மையில் வைத்தான்.)
இன்னும் நிச்சயமாக அவன்தான் ஷிஃரா நட்சத்திரத்தின் இறைவன் ஆவான்.
இன்னும் நிச்சயமாக அவன்தான் முந்திய ஆது சமுதாயத்தை அழித்தான்.
இன்னும் சமூது சமுதாயத்தை (அழித்தான்). ஆக, அவன் (இவர்களில் எவரையும்) விட்டு வைக்கவில்லை.
இன்னும் நூஹுடைய மக்களையும் இதற்கு முன்னர் (அவன் அழித்தான்). நிச்சயமாக இவர்கள் மிகப் பெரிய அநியாயக்காரர்களாக, மிகப் பெரிய வரம்பு மீறிகளாக இருந்தனர்.
ﭿﮀ
ﰴ
இன்னும் தலைகீழாக புரட்டப்பட்ட சமுதாயத்தை அவன்தான் (தலைக் கீழாக) கவிழ்த்(து அவர்களை அழித்)தான்.
எதைக் கொண்டு மூட வேண்டுமோ அதனால் அவன் அவர்களை மூடினான். (சுடப்பட்ட பொடிக் கற்களை அவர்கள் மீது அடை மழையாக அவன் பொழிவித்தான்.)
உமது இறைவனின் அத்தாட்சிகளில் எதில் நீ தர்க்கம் செய்கின்றாய்?
முந்திய எச்சரிப்பாளர்களில் இருந்து (அவர்களைப் போன்ற) ஓர் எச்சரிப்பாளர்தான் இவர்.
ﮑﮒ
ﰸ
நெருங்கக்கூடியது (-மறுமை) நெருங்கிவிட்டது.
ல்லாஹ்வை அன்றி (அதில் உள்ள நன்மை, தீமையை) வெளிப்படுத்துபவர் யாரும் அதற்கு இல்லை.
இந்த குர்ஆனினால் நீங்கள் ஆச்சரியப்படுகின்றீர்களா? (-இதை கேலி செய்கிறீர்களா?)
(இதன் எச்சரிக்கையால்) நீங்கள் (பயந்து) அழாமல் (திமிரு கொண்டு) சிரிக்கின்றீர்களா?
ﮤﮥ
ﰼ
நீங்களோ (இதை) அலட்சியம் செய்பவர்களாக இருக்கின்றீர்கள்.
(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்விற்கே சிரம் பணியுங்கள்! (அவன் ஒருவனையே) வணங்குங்கள்!