فَلَمَّا جَنَّ عَلَيۡهِ ٱلَّيۡلُ رَءَا كَوۡكَبࣰاۖ قَالَ هَٰذَا رَبِّيۖ فَلَمَّآ أَفَلَ قَالَ لَآ أُحِبُّ ٱلۡأٓفِلِينَ ٧٦
Al-An'am 6:76
سورة الأنعام
Meccan
Verse: 76/165
Page 137
-
தமிழ் translation
الترجمة التاميلية
76. (ஒரு நாள்) இருள் சூழ்ந்த இரவில் அவர் (மின்னிக் கொண்டிருந்த) ஒரு நட்சத்திரத்தைக் கண்டு, ‘‘இது என் இறைவன் (ஆகுமா?)'' என (தம் மக்களைக்) கேட்டு, அது மறையவே, ‘‘மறையக்கூடியவற்றை (இறைவனாக எடுத்துக் கொள்ள) நான் விரும்பமாட்டேன்'' எனக் கூறிவிட்டார். -
Jan Trust Foundation - Tamil translation
ஆகவே அவரை இரவு மூடிக் கொண்டபோது அவர் ஒரு நட்சத்திரத்தைப் பார்த்தார்; "இதுதான் என் இறைவன்!" என்று கூறினார்; ஆனால் அது மறைந்த போது அவர், "நான் மறையக் கூடியவற்றை நேசிக்க மாட்டேன்" என்று சொன்னார். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
இரவு சூழ்ந்தபோது அவர் ஒரு நட்சத்திரத்தைக் கண்டு "இது என் இறைவன்'' எனக் கூறினார். அது மறைந்தபோது, "மறையக்கூடியவற்றை (இறைவனாக எடுத்துக்கொள்ள நான்) விரும்பமாட்டேன்'' எனக் கூறினார்.
Al-An'am 6:76
Loading the recitation…
0:00