ثَانِيَ عِطۡفِهِۦ لِيُضِلَّ عَن سَبِيلِ ٱللَّهِۖ لَهُۥ فِي ٱلدُّنۡيَا خِزۡيࣱۖ وَنُذِيقُهُۥ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ عَذَابَ ٱلۡحَرِيقِ ٩
Al-Hajj 22:9
سورة الحج
Medinan
Verse: 9/78
Page 333
-
தமிழ் translation
الترجمة التاميلية
9. அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து (மக்களைத்) திருப்பிவிடும் பொருட்டு தன் கழுத்தை திருப்பியவர்களாக (கர்வம் கொண்டு இவ்வாறு தர்க்கிக்கின்றனர்). இம்மையில் அவர்களுக்கு இழிவுதான். மறுமை நாளிலோ சுட்டெரிக்கும் நெருப்பின் வேதனையை அவர்கள் சுவைக்கும்படிச் செய்வோம். -
Jan Trust Foundation - Tamil translation
(அவன்) அல்லாஹ்வின் பாதையை விட்டும் மனிதர்களை வழி கெடுப்பதற்காக ஆணவத்தோடு (இவ்வாறு தர்க்கம்) செய்கிறான்; அவனுக்கு இவ்வுலகிலும் இழிவு இருக்கிறது கியாம நாளில் நாம் அவனை எரிநரகின் வேதனையையும் சுவைக்க செய்வோம். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
தனது கழுத்தைத் திருப்பியவனாக (-பெருமையடித்து புறக்கணித்தவனாக) அல்லாஹ்வின் மார்க்கத்திலிருந்து (நம்பிக்கையாளர்களை) தடுப்பதற்காக (அவன் அல்லாஹ்வின் விஷயத்தில் தர்க்கிக்கின்றான். அவனுக்கு இவ்வுலகத்தில் கேவலம் (-தண்டனை) உண்டு. மறுமை நாளில் பொசுக்கக்கூடிய வேதனையை நாம் அவனுக்கு சுவைக்க வைப்போம். (அவனை நெருப்பால் பொசுக்குவோம்.)
Al-Hajj 22:9
Loading the recitation…
0:00