لَّوۡلَآ إِذۡ سَمِعۡتُمُوهُ ظَنَّ ٱلۡمُؤۡمِنُونَ وَٱلۡمُؤۡمِنَٰتُ بِأَنفُسِهِمۡ خَيۡرࣰا وَقَالُواْ هَٰذَآ إِفۡكࣱ مُّبِينࣱ ١٢
An-Nur 24:12
سورة النور
Medinan
Verse: 12/64
Page 351
-
தமிழ் translation
الترجمة التاميلية
12. இதை நீங்கள் கேள்வியுற்ற மாத்திரத்தில் (இதை மறுத்து) நம்பிக்கை கொண்ட ஆண்களும் நம்பிக்கை கொண்ட பெண்களும் தங்களைப் பற்றி நல்லெண்ணம் வைத்து ‘‘இது பகிரங்கமான அவதூறே'' என்று கூறியிருக்க வேண்டாமா? -
Jan Trust Foundation - Tamil translation
முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களுமாகிய நீங்கள் இதனைக் கேள்வியுற்றபோது, தங்களைப் (போன்ற முஃமினானவர்களைப்) பற்றி நல்லெண்ணங் கொண்டு, "இது பகிரங்கமான வீண் பழியேயாகும்" என்று கூறியிருக்க வேண்டாமா? -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
நீங்கள் அதைக் கேட்டபோது நம்பிக்கை கொண்ட ஆண்களும் நம்பிக்கை கொண்ட பெண்களும் தங்களைப் பற்றி (தங்களில் இட்டுக்கட்டப்பட்டவரைப் பற்றி) நல்லதை எண்ணியிருக்க வேண்டாமா! இன்னும் இது தெளிவான இட்டுக்கட்டாகும் (பொய்யாகும்) என்று சொல்லியிருக்க வேண்டாமா!
An-Nur 24:12
Loading the recitation…
0:00