وَلَنُسۡكِنَنَّكُمُ ٱلۡأَرۡضَ مِنۢ بَعۡدِهِمۡۚ ذَٰلِكَ لِمَنۡ خَافَ مَقَامِي وَخَافَ وَعِيدِ ١٤
Ibrahim 14:14
سورة إبراهيم
Meccan
Verse: 14/52
Page 257
-
தமிழ் translation
الترجمة التاميلية
14. ‘‘உங்களை அவர்களுக்குப் பின்னர் (அவர்களுடைய) பூமியில் நிச்சயமாக நாம் குடியேறச் செய்வோம்'' (என்றும் வஹ்யி மூலம் அறிவித்து) ‘‘இது எவன் என் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதைப் பயந்தும், என் அச்சமூட்டலைப் பயந்தும் நடக்கிறானோ அவனுக்கு ஒரு சன்மானமாகும்'' என்றும் அவர்களுடைய இறைவன் அறிவித்தான். -
Jan Trust Foundation - Tamil translation
"நிச்சயமாக நாம் உங்களை அவர்களுக்குப் பின் இப்பூமியில் குடியேற்றுவோம்; இது என் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதை அஞ்சியும், என் எச்சரிக்கையை அஞ்சி நடப்பவருக்கும் (சன்மானம்) ஆகும்" (என்றும் வஹீ மூலம் அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு அறிவித்தான்). -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
“அவர்களுக்குப் பின்னர் உங்களை (அவர்களுடைய) பூமியில் நிச்சயமாக குடி அமர்த்துவோம். இ(ந்த வாக்கான)து எவர் என் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதை பயந்தாரோ இன்னும் என் எச்சரிக்கையை பயந்தாரோ அவருக்காகும்”(என்று அவர்களுடைய இறைவன் வஹ்யி அறிவித்தான்).
Ibrahim 14:14
Loading the recitation…
0:00