ﯧ
                    surah.translation
            .
            
                            
            
    ﰡ
வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வை துதிக்கின்றன. அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்.
                                                                        உங்களில் எவர்கள் தங்கள் பெண்கள் (-மனைவிகள்) இடம் ளிஹார் செய்கின்றார்களோ அவர்கள் (-அந்த பெண்கள்) அவர்களின் தாய்மார்களாக ஆகமுடியாது. அவர்களின் தாய்மார்கள் அவர்களை எவர்கள் பெற்றெடுத்தார்களோ அவர்களைத் தவிர வேறு யாரும் இல்லை. (ளிஹார் செய்வதன் மூலமாக) நிச்சயமாக அவர்கள் பேச்சில் மிகத் தீயதையும் பொய்யானதையும் கூறுகின்றனர். நிச்சயமாக அல்லாஹ் மிகவும் பிழை பொறுப்பவன், மகா மன்னிப்பாளன் ஆவான்.
                                                                        எவர் தங்கள் பெண்களிடம் ளிஹார் செய்து, பிறகு தாங்கள் கூறியதற்கு (-தங்கள் தவறை திருத்திக்கொள்ள) மீளுகின்றார்களோ அவர்கள் (கணவன் மனைவி) இருவரும் இணைவதற்கு முன்னர் ஓர் அடிமையை உரிமையிட வேண்டும். இதுதான், நீங்கள் இதற்கு (-இதை செய்வதற்கு) உபதேசிக்கப்படுகிறீர்கள். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிபவன் ஆவான்.
                                                                        எவர் (அடிமையை உரிமையிட) வசதி பெறவில்லையோ அவர் இரண்டு மாதங்கள் தொடர்ந்து நோன்பிருக்க வேண்டும் (கணவன் மனைவி) இருவரும் இணைவதற்கு முன்னர். எவர் (இதற்கு) சக்தி பெறவில்லையோ அவர் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்கட்டும். இது ஏனெனில், நீங்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்கின்றீர்கள். இவை அல்லாஹ்வின் சட்டங்களாகும். நிராகரிப்பாளர்களுக்கு வலி தரக்கூடிய தண்டனை உண்டு.
                                                                        நிச்சயமாக அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் முரண்படுபவர்கள் இவர்களுக்கு முன்னுள்ளவர்கள் இழிவுபடுத்தப்பட்டது போன்று இழிவு படுத்தப்படுவார்கள். திட்டமாக நாம் தெளிவான அத்தாட்சிகளை இறக்கினோம். நிராகரிப்பாளர்களுக்கு இழிவுதரும் தண்டனை உண்டு.
                                                                        அல்லாஹ் அவர்கள் அனைவரையும் எழுப்புகின்ற நாளில் அவர்கள் செய்தவற்றை அவன் அவர்களுக்கு அறிவிப்பான். அல்லாஹ் அவற்றை கணக்கிட்டு வைத்துள்ளான். அவர்கள் அவற்றை மறந்துவிட்டார்கள். அல்லாஹ் எல்லாவற்றையும் கண்காணிப்பவன் (அவற்றுக்கு சாட்சியாளன்) ஆவான்.
                                                                        (நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் வானங்களில் உள்ளவற்றையும் பூமியில் உள்ளவற்றையும் நன்கறிவான். மூன்று நபர்களின் உரையாடல் இருக்காது அவன் அவர்களில் நான்காமவனாக இருந்தே தவிர. ஐந்து நபர்களின் உரையாடல் இருக்காது அவன் அவர்களில் ஆறாவதாக இருந்தே தவிர. அதை விட குறைவாக, அதிகமாக எதுவும் இருக்காது அவன் அவர்களுடன் இருந்தே தவிர அவர்கள் எங்கிருந்தாலும் சரியே. பிறகு, அவன் அவர்களுக்கு அவர்கள் செய்தவற்றை மறுமை நாளில் அறிவிப்பான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் ஆவான்.
                                                                        கூடிப் பேசுவதை விட்டும் தடுக்கப்பட்டவர்களை நீர் பார்க்கவில்லையா? (தடுக்கப்பட்ட) பிறகும், அவர்கள் எதிலிருந்து தடுக்கப்பட்டார்களோ அதற்கே அவர்கள் திரும்புகிறார்கள். பாவத்தையும் வரம்புமீறுவதையும் தூதருக்கு மாறுசெய்வதையும் கூடிப் பேசுகிறார்கள். அவர்கள் உம்மிடம் வந்தால் அல்லாஹ் உமக்கு எதை முகமன் கூறவில்லையோ அதை முகமன் கூறுகிறார்கள். தங்கள் மனதிற்குள் “நாம் சொல்வதைக் கொண்டு அல்லாஹ் நம்மை வேதனை செய்யாமல் இருக்க வேண்டுமே!” என்று கூறுகின்றனர். அவர்களுக்கு நரகமே போதும். அதில் அவர்கள் எரிந்து பொசுங்குவார்கள். அது மீளுமிடங்களில் மிகக் கெட்டதாகும்.
                                                                        நம்பிக்கையாளர்களே! நீங்கள் கூடிப்பேசினால் பாவமானதையும் வரம்பு மீறும் காரியத்தையும் தூதருக்கு மாறுசெய்வதையும் கூடிப்பேசாதீர்கள். நன்மையான விஷயத்தையும் இறையச்சம் மிகுந்த விஷயத்தையும் கூடிப் பேசுங்கள்! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனிடம்தான் நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்.
                                                                        (சந்தேகத்திற்கிடமாக) கூடிப்பேசுவது ஷைத்தான் புறத்திலிருந்து தூண்டப்படுகிறது. (காரணம்,) நம்பிக்கை கொண்டவர்களை கவலைப்படுத்துவதற்காக. ஆனால், அது அவர்களுக்கு அறவே தீங்கு செய்வதாக இல்லை, அல்லாஹ்வின் அனுமதி இல்லாமல். அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை யாளர்கள் நம்பிக்கை வைக்கட்டும். (அவனையே சார்ந்து இருக்கட்டும்.)
                                                                        நம்பிக்கையாளர்களே! சபைகளில் (கொஞ்சம்) இடம் கொடுங்கள்” என்று உங்களுக்கு கூறப்பட்டால் நீங்கள் (உள்ளே நுழைந்த உங்கள் சகோதரர்களுக்காக) இடம் கொடுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு (இடத்தை) விசாலப்படுத்துவான். (சபைகளில் இருந்து) நீங்கள் புறப்படுங்கள் என்று கூறப்பட்டால் நீங்கள் புறப்படுங்கள்! உங்களில் நம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ் உயர்த்துவான். இன்னும் கல்வி கொடுக்கப்பட்டவர்களை பல அந்தஸ்துகள் அவன் உயர்த்துவான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிபவன் ஆவான்.
                                                                        நம்பிக்கையாளர்களே! நீங்கள் தூதரிடம் கூடிப்பேசினால் நீங்கள் கூடிப் பேசுவதற்கு முன்னர் தர்மத்தை முற்படுத்துங்கள்! அது உங்களுக்கு மிகச் சிறந்ததும் மிக பரிசுத்தமானதும் ஆகும். நீங்கள் (எதையும் தர்மம் செய்ய) வசதி பெறவில்லை என்றால் (அல்லாஹ் உங்களை மன்னித்து விடுவான். ஏனெனில்,) நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன்.
                                                                        உங்கள் உரையாடலுக்கு முன்னர் தர்மங்களை முற்படுத்துவதற்கு (அப்படி செய்தால் வறுமை வந்துவிடுமென) நீங்கள் பயப்படுகிறீர்களா? நீங்கள் அப்படி செய்யவில்லை என்றால், அல்லாஹ்வும் உங்களை மன்னித்துவிட்டதால் (உங்கள் மீது குற்றமில்லை. ஆகவே,) நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்! ஸகாத்தை கொடுங்கள்! அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்! அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிபவன் ஆவான்.
                                                                        அல்லாஹ் கோபப்பட்ட மக்களை (-யூதர்களை) நண்பர்களாக எடுத்துக் கொண்ட (நய)வ(ஞ்சக)ர்களை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? அவர்கள் (-நயவஞ்சகர்கள்) உங்களை சேர்ந்தவர்கள் இல்லை. அவர்கள் அவர்களை சேர்ந்தவர்களும் இல்லை. அவர்கள் அறிந்து கொண்டே பொய்யான விஷயத்தின் மீது சத்தியம் செய்கின்றனர்.
                                                                        அவர்களுக்கு அல்லாஹ் கடுமையான வேதனையை ஏற்படுத்தி இருக்கின்றான். நிச்சயமாக அவர்கள் செய்துகொண்டிருந்தவை (அனைத்தும்) மிகக் கெட்டவையாகும்.
                                                                        அவர்கள் தங்கள் சத்தியங்களை (தாங்கள் தப்பிப்பதற்கு) ஒரு கேடயமாக எடுத்துக் கொண்டனர். அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டும் (பாமர மக்களை) தடுக்கின்றனர். ஆகவே, இழிவுதரக்கூடிய தண்டனை அவர்களுக்கு உண்டு.
                                                                        அல்லாஹ்விடம் (அவனது வேதனையிலிருந்து) எதையும் அவர்களின் செல்வங்களோ அவர்களின் பிள்ளைகளோ அவர்களை விட்டும் அறவே தடுக்க மாட்டார்கள். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
                                                                        அல்லாஹ் அவர்கள் அனைவரையும் எழுப்பும் நாளில் அவனுக்கு முன் அவர்கள் சத்தியம் செய்வார்கள், உங்களுக்கு முன் அவர்கள் சத்தியம் செய்வது போன்று. (இந்த சத்தியத்தின் மூலம்) அவர்கள் (புத்திகூர்மையான) ஒரு செயலின் மீது நிச்சயமாக தாங்கள் இருப்பதாக எண்ணுவார்கள். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள்தான் பொய்யர்கள்!
                                                                        ஷைத்தான் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகின்றான். அல்லாஹ்வின் நினைவை அவர்களுக்கு மறக்கவைத்து விட்டான். அவர்கள்தான் ஷைத்தானின் கட்சியினர் ஆவார்கள் அறிந்துகொள்ளுங்கள்! நிச்சயமாக ஷைத்தானின் கட்சியினர், அவர்கள்தான் நஷ்டவாளிகள் ஆவார்கள்.
                                                                        நிச்சயமாக அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் முரண்படுகிறவர்கள், அவர்கள் மிக இழிவானவர்களில் உள்ளவர்கள்.
                                                                        நிச்சயமாக நானும் எனது தூதரும்தான் வெல்வோம் என்று அல்லாஹ் (தன்னைப் பற்றி) விதித்துவிட்டான். நிச்சயமாக அல்லாஹ் மிக வலிமை உள்ளவன், மிகைத்தவன் ஆவான்.
                                                                        அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொள்கின்ற மக்களை - அவர்கள் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் முரண்படுகின்றவர்களை நேசிப்பவர்களாக நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் தந்தைகளாக அல்லது தங்கள் பிள்ளைகளாக அல்லது தங்கள் சகோதரர்களாக அல்லது தங்கள் குடும்பத்தினராக இருந்தாலும் சரியே! அவர்கள்தான், அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் ஈமானை உறுதிபடுத்திவிட்டான். இன்னும் அவர்களை தன் புறத்தில் இருந்து உதவியைக் கொண்டு பலப்படுத்தினான். இன்னும், அவன் அவர்களை சொர்க்கங்களில் நுழைப்பான். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவர்கள் அவற்றில் நிரந்தரமாக தங்குவார்கள். அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொள்வான். அவர்களும் அவனை பொருந்திக் கொள்வார்கள். அவர்கள்தான் அல்லாஹ்வின் கட்சியினர். அறிந்து கொள்ளுங்கள்! “நிச்சயமாக அல்லாஹ்வின் கட்சியினர்தான் வெற்றியாளர்கள் ஆவார்கள்.