4. இப்ராஹீமிடத்திலும், அவருடன் இருந்தவர்களிடத்திலும் உங்களுக்கு ஒரு நல்ல உதாரணம் நிச்சயமாக இருக்கிறது. அவர்கள் தம் மக்களை நோக்கி ‘‘நிச்சயமாக நாங்கள் உங்களில் இருந்தும், அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்குகிறவற்றிலிருந்தும் விலகிவிட்டோம். உங்களையும் (அவற்றையும்) நிராகரித்து விட்டோம். அல்லாஹ் ஒருவனையே நீங்கள் நம்பிக்கை கொள்ளும்வரை எங்களுக்கும் உங்களுக்குமிடையில் விரோதமும், குரோதமும் ஏற்பட்டுவிட்டது'' என்று கூறினார்கள். மேலும் இப்ராஹீம் தன் (சொல்லைக் கேளாத) தந்தையை நோக்கி ‘‘அல்லாஹ்விடத்தில் உமக்காக (அவனுடைய வேதனையில்) எதையும் தடுக்க எனக்கு சக்தி கிடையாது. ஆயினும், உமக்காக அவனிடத்தில் பின்னர் நான் மன்னிப்பைக் கோருவேன்'' என்று கூறி, ‘‘எங்கள் இறைவனே! உன்னையே நாங்கள் நம்பினோம். உன்னையே நாங்கள் நோக்கினோம். உன்னிடமே (நாங்கள் அனைவரும்) வர வேண்டியதிருக்கிறது'' (என்றும்),
الترجمة التاميلية
قَدۡ كَانَتۡ لَكُمۡ أُسۡوَةٌ حَسَنَةٞ فِيٓ إِبۡرَٰهِيمَ وَٱلَّذِينَ مَعَهُۥٓ إِذۡ قَالُواْ لِقَوۡمِهِمۡ إِنَّا بُرَءَـٰٓؤُاْ مِنكُمۡ وَمِمَّا تَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ كَفَرۡنَا بِكُمۡ وَبَدَا بَيۡنَنَا وَبَيۡنَكُمُ ٱلۡعَدَٰوَةُ وَٱلۡبَغۡضَآءُ أَبَدًا حَتَّىٰ تُؤۡمِنُواْ بِٱللَّهِ وَحۡدَهُۥٓ إِلَّا قَوۡلَ إِبۡرَٰهِيمَ لِأَبِيهِ لَأَسۡتَغۡفِرَنَّ لَكَ وَمَآ أَمۡلِكُ لَكَ مِنَ ٱللَّهِ مِن شَيۡءٖۖ رَّبَّنَا عَلَيۡكَ تَوَكَّلۡنَا وَإِلَيۡكَ أَنَبۡنَا وَإِلَيۡكَ ٱلۡمَصِيرُ
இப்றாஹீமிடமும், அவரோடு இருந்தவர்களிடமும், நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது, தம் சமூகத்தாரிடம் அவர்கள், "உங்களை விட்டும், இன்னும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகிறவற்றைவிட்டும், நாங்கள் நிச்சயமாக நீங்கிக் கொண்டோம்; உங்களையும் நாங்கள் நிராகரித்து விட்டோம், அன்றியும் ஏகனான அல்லாஹ் ஒருவன் மீதே நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை, நமக்கும் உங்களுக்குமிடையில் பகைமையும், வெறுப்பும் நிரந்தரமாக ஏற்பட்டு விட்டன" என்றார்கள். ஆனால் இப்றாஹீம் தம் தந்தையை நோக்கி, "அல்லாஹ்விடத்தில் உங்களுக்காக (அவனுடைய வேதனையிலிருந்து) எதையும் தடுக்க எனக்குச் சக்தி கிடையாது, ஆயினும் உங்களுக்காக நான் அவனிடத்தில் நிச்சயமாக மன்னிப்புத் தேடுவேன்" எனக் கூறியதைத் தவிர (மற்ற எல்லாவற்றிலும் முன் மாதிரியிருக்கிறது, அன்றியும், அவர் கூறினார்); "எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்ககிறோம் மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது,"
Jan Trust Foundation - Tamil translation
திட்டமாக இப்ராஹீமிடத்திலும் அவர்களுடன் இருந்தவர்களிடத்திலும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. “நிச்சயமாக நாங்கள் உங்களை விட்டும் அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்குகின்றவற்றை விட்டும் விலகியவர்கள் ஆவோம். உங்களை(யும் நீங்கள் செய்கின்ற செயல்களையும்) நாங்கள் மறுத்துவிட்டோம். எங்களுக்கு மத்தியிலும் உங்களுக்கு மத்தியிலும் பகைமையும் குரோதமும் எப்போதும் வெளிப்பட்டுவிட்டன, நீங்கள் அல்லாஹ் ஒருவனை மட்டும் நம்பிக்கை கொள்கின்ற வரை (நாங்கள் உங்களுடன் சேர முடியாது)” என்று அவர்கள் தங்கள் மக்களுக்கு கூறிய சமயத்தை நினைவு கூருங்கள்! எனினும் இப்ராஹீம் தனது தந்தைக்கு, “நிச்சயமாக நான் உமக்காக பாவமன்னிப்பு கேட்பேன், ஆனால், அல்லாஹ்விடம் உமக்கு நான் எதையும் செய்ய உரிமை பெறமாட்டேன்” என்று கூறியதை தவிர. (இது அவர் இறைவனின் சட்டம் தெரிவதற்கு முன்னர் கூறியதாகும். இணைவைப்பவர்களுக்கு பாவமன்னிப்பு கேட்கக்கூடாது என்று தெரிந்தவுடன் அவர் தந்தைக்கு மன்னிப்பு கேட்பதை விட்டு விலகிவிட்டார். எனவே, இதுதவிர மற்ற எல்லா விஷயங்களிலும் இப்ராஹீமிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. மேலும் இப்ராஹீம் கூறினார்:) “எங்கள் இறைவா! உன் மீது நாங்கள் நம்பிக்கை வைத்தோம். உன் பக்கமே நாங்கள் பணிவுடன் திரும்பிவிட்டோம். உன் பக்கமே (எங்கள் அனைவரின்) மீளுமிடம் இருக்கின்றது.
الترجمة التاميلية - عمر شريف