2. அப்பெண்கள் தங்கள் (இத்தாவின்) தவணையை அடைந்தால், நேரான முறையில் அவர்களை (மனைவியாகவே) நிறுத்திக்கொள்ளுங்கள். அல்லது நேரான முறையில் அவர்களை நீக்கிவிடுங்கள். (இவ்விரண்டில் நீங்கள் எதைச் செய்த போதிலும் அதற்கு) உங்களில் நீதமான இரு சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். (அந்த சாட்சிகள், சாட்சி சொல்ல வந்தால்) அல்லாஹ்வுக்காக உண்மையையே கூறவும். உங்களில் எவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறாரோ, அவருக்கு இந்நல்லுபதேசம் கூறப்படுகிறது. (தவிர, இவ்விஷயத்தில்) எவர்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கிறார்களோ, அவர்களுக்கு (இத்தகைய விவகாரங்களிலிருந்து) ஒரு (நல்ல தீர்வுபெற) வழியை ஏற்படுத்தித் தருவான்.
الترجمة التاميلية
فَإِذَا بَلَغۡنَ أَجَلَهُنَّ فَأَمۡسِكُوهُنَّ بِمَعۡرُوفٍ أَوۡ فَارِقُوهُنَّ بِمَعۡرُوفٖ وَأَشۡهِدُواْ ذَوَيۡ عَدۡلٖ مِّنكُمۡ وَأَقِيمُواْ ٱلشَّهَٰدَةَ لِلَّهِۚ ذَٰلِكُمۡ يُوعَظُ بِهِۦ مَن كَانَ يُؤۡمِنُ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۚ وَمَن يَتَّقِ ٱللَّهَ يَجۡعَل لَّهُۥ مَخۡرَجٗا
ஆகவே, அவர்கள் தங்கள் (இத்தாவின்) தவணையை நெருங்கினால், அப்பொழுது முறைப்படி (மனைவியராக) அவர்களை நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; அல்லது முறைப்படி அவர்களைப் பிரித்து (விட்டு) விடுங்கள், அன்றியும், உங்களில் நியாயமுடைய இருவரைச் சாட்சியாக வைத்துக் கொள்ளுங்கள், மேலும், சாட்சியத்தை அல்லாஹ்வுக்காக (நேர்மையாக) நிலைப்படுத்துங்கள்; அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசம் கொண்டிருப்போருக்கு இந்த நற்போதனை செய்யப்படுகிறது - தவிர, எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான்.
Jan Trust Foundation - Tamil translation
அவர்கள் (அப்பெண்கள் இத்தாவை முடித்து, இத்தாவில் இருந்து வெளியேற வேண்டிய) தங்கள் தவணையை அடைந்துவிட்டால் அவர்களை (-அப்பெண்களை) நல்ல முறையில் (உங்கள் திருமணத்திலேயே) தடுத்து வையுங்கள். அல்லது நல்ல முறையில் அவர்களை நீங்கள் பிரிந்து விடுங்கள். உங்களில் நீதமான இருவரை (தடுத்து வைக்கும் போதும் அல்லது பிரியும் போதும்) சாட்சியாக்குங்கள்! அல்லாஹ்விற்காக சாட்சியத்தை நிலை நிறுத்துங்கள்! இவை (-இந்த சட்டங்கள்) எவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டிருப்பாரோ அவர் இவற்றின் மூலம் உபதேசிக்கப்படுகின்றார். எவர் அல்லாஹ்வை அஞ்சுவாரோ அவருக்கு அல்லாஹ் ஒரு (நல்ல) தீர்வை ஏற்படுத்துவான்.
الترجمة التاميلية - عمر شريف