9. நபியே! (இந்த) நிராகரிப்பவர்களுடன் (வாளைக் கொண்டும், இந்த) நயவஞ்சகர்களுடன் (தர்க்கத்தைக் கொண்டும்) போர் புரிவீராக. அவர்களுடன் நீங்கள் (தயவு தாட்சண்யம் காட்டாது) கடுமையாகவே இருப்பீராக. அவர்கள் செல்லுமிடம் நரகம்தான்; அது மகாகெட்ட சேரும் இடமாகும்.
الترجمة التاميلية
يَـٰٓأَيُّهَا ٱلنَّبِيُّ جَٰهِدِ ٱلۡكُفَّارَ وَٱلۡمُنَٰفِقِينَ وَٱغۡلُظۡ عَلَيۡهِمۡۚ وَمَأۡوَىٰهُمۡ جَهَنَّمُۖ وَبِئۡسَ ٱلۡمَصِيرُ
நபியே! காஃபிர்களுடனும், முனாஃபிக்குகளுடனும் நீர் போரிட்டு, அவர்களிடம் கண்டிப்புடன் இருப்பீராக! அன்றியும் அவர்கள் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அது மிகவும் கெட்ட சேருமிடம் ஆகும்.
Jan Trust Foundation - Tamil translation
நபியே! நிராகரிப்பாளர்களிடமும், நயவஞ்சகர்களிடமும் ஜிஹாது செய்வீராக! அவர்களிடம் கடுமை காட்டுவீராக! அவர்களின் தங்குமிடம் நரகம்தான். மீளுமிடங்களில் (நரகம்) மிகக் கெட்டதாகும்.
الترجمة التاميلية - عمر شريف