ﰡ
(நபியே! அகிலங்கள் அனைத்தையும்) படைத்த உம் இறைவனின் பெயரால் படிப்பீராக!
சினாய் மலையின் மீது சத்தியமாக!
அபயமளிக்கக்கூடிய இந்த நகரத்தின் மீது சத்தியமாக!
திட்டவட்டமாக, மனிதனை மிக அழகிய அமைப்பில் படைத்தோம்.
பிறகு, தாழ்ந்தோரில் மிகத் தாழ்ந்தவனாக (மாறும் நிலைமைக்கு) அவனைத் திருப்பினோம்.
நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்தவர்களைத் தவிர. ஆகவே, அவர்களுக்கு முடிவுறாத (கணக்கற்ற, குறையாத) நன்மை உண்டு.
(இத்தனை சான்றுகளுக்குப்) பின்னர், மார்க்கத்தில் உம்மை யார்தான் பொய்ப்பிப்பார்?*
தீர்ப்பளிப்பவர்களில் மிகமேலான தீர்ப்பளிப்பவனாக அல்லாஹ் இல்லையா?