۞ إِذۡ تُصۡعِدُونَ وَلَا تَلۡوُۥنَ عَلَىٰٓ أَحَدࣲ وَٱلرَّسُولُ يَدۡعُوكُمۡ فِيٓ أُخۡرَىٰكُمۡ فَأَثَٰبَكُمۡ غَمَّۢا بِغَمࣲّ لِّكَيۡلَا تَحۡزَنُواْ عَلَىٰ مَا فَاتَكُمۡ وَلَا مَآ أَصَٰبَكُمۡۗ وَٱللَّهُ خَبِيرُۢ بِمَا تَعۡمَلُونَ ١٥٣
Al-Imran 3:153
سورة آل عمران
Medinan
Verse: 153/200
Page 69
-
தமிழ் translation
الترجمة التاميلية
153. (உஹுத் போரில் அல்லாஹ்வுடைய) தூதர் உங்களுக்கு பின்னால் இருந்தவாறு ‘‘(என்னிடம் வாருங்கள்!) வாருங்கள்'' என்று உங்களை(க் கூவி) அழைத்துக் கொண்டிருந்த சமயத்தில் நீங்கள் ஒருவரையுமே திரும்பிப்பாராது வெருண்டோடிக் கொண்டிருந்ததையும் சிந்தித்துப் பாருங்கள். (நம் தூதருக்கும் நீங்கள் உண்டு பண்ணிய) இத்துயரத்தின் காரணமாக உங்களுக்கும் (தோல்வியின்) துயரத்தையே பிரதிபலனாகக் கொடுத்தான். ஏனென்றால், உங்களிடமிருந்து (ஒரு பொருள்) தவறி விட்டதைப் பற்றியும், உங்களுக்கு ஏற்பட்ட (நஷ்டத்)தைப் பற்றியும் நீங்கள் துயரத்தில் ஆழ்ந்துவிடாமல் இருப்பதற்(குரிய சகிப்புத்தன்மையை உங்களுக்கு உண்டு பண்ணுவதற்)காகவே (இத்தகைய சிரமத்தை உங்களுக்குக் கொடுத்தான்). நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கறிவான். -
Jan Trust Foundation - Tamil translation
(நினைவு கூருங்கள்! உஹது களத்தில்) உங்கள் பின்னால் இருந்து இறைதூதர் உங்களை அழைத்துக் கொண்டிருக்க, நீங்கள் எவரையும் திரும்பிப் பார்க்காமல் மேட்டின்மேல் ஏறிக் கொள்ள ஓடிக் கொண்டிருந்தீர்கள். ஆகவே (இவ்வாறு இறை தூதருக்கு நீங்கள் கொடுத்த துக்கத்தின்) பலனாக இறைவன் துக்கத்தின்மேல் துக்கத்தை உங்களுக்குக் கொடுத்தான். ஏனெனில் உங்களுக்குக் கிடைக்க வேண்டியது தவறி விட்டாலோ, உங்களுக்குச் சோதனைகள் ஏற்பட்டாலோ நீங்கள் (சோர்வும்) கவலையும் அடையாது (பொறுமையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்); இன்னும், அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கு அறிபவனாக இருக்கின்றான். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
(உஹுத் போரில் அல்லாஹ்வுடைய) தூதர் உங்களுக்கு இறுதியில் இருந்தவாறு உங்களை அழைக்க நீங்கள் ஒருவரையும் எதிர்பார்க்காமல் வேகமாக ஓடிய சமயத்தை நினைவு கூறுங்கள். (தூதருக்கு நீங்கள் கொடுத்த) துயரத்தின் காரணமாக உங்களுக்கு(ம் தோல்வியின்) துயரத்தையே (அல்லாஹ்) கூலியாக்கினான். (காரணம், வெற்றியில்) உங்களுக்கு தவறியதின் மீதும், உங்களுக்கு ஏற்பட்ட (நஷ்டத்)தின் மீதும் நீங்கள் துக்கப்படாமல் இருப்பதற்காகவே ஆகும். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் ஆழ்ந்தறிந்தவன்.
Al-Imran 3:153
Loading the recitation…
0:00