وَٱذۡكُرۡنَ مَا يُتۡلَىٰ فِي بُيُوتِكُنَّ مِنۡ ءَايَٰتِ ٱللَّهِ وَٱلۡحِكۡمَةِۚ إِنَّ ٱللَّهَ كَانَ لَطِيفًا خَبِيرًا ٣٤
AlAhzab 33:34
سورة الأحزاب
Medinan
Verse: 34/73
Page 422
-
தமிழ் translation
الترجمة التاميلية
34. உங்கள் வீடுகளில் ஓதப்படுகின்ற அல்லாஹ்வுடைய வசனங்களையும், ஞானவாக்கியங்க(ளான ஹதீஸ்க)ளையும் ஞாபகத்தில் வையுங்கள். (அவற்றைக் கொண்டு நல்லுணர்ச்சி பெறுங்கள்.) நிச்சயமாக அல்லாஹ் கிருபையுடையவனாக, நன்கறிந்தவனாக இருக்கிறான். -
Jan Trust Foundation - Tamil translation
மேலும் உங்களுடைய வீடுகளில் ஓதப்படுகின்றனவே அல்லாஹ்வின் வசனங்கள் (அவற்றையும்) ஞான விஷயங்களையும் (ஹிக்மத்) நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் (உங்கள் உள்ளங்களிலுள்ளவை பற்றி) சூட்சமமாகத் தெரிந்தவன்; (உங்கள் செயல்கள் பற்றி) நன்கறிந்தவன். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
(தொழுகையில்) ஓதப்படுகின்றவற்றை அதாவது அல்லாஹ்வின் வசனங்களை இன்னும் ஞானத்தை (-நபியின் பொன்மொழிகளை) உங்கள் இல்லங்களில் மனனம் செய்யுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் மிக கருணையாளனாக ஆழ்ந்தறிபவனாக இருக்கின்றான்.
AlAhzab 33:34
Loading the recitation…
0:00