وَٱلَّذِينَ عَمِلُواْ ٱلسَّيِّـَٔاتِ ثُمَّ تَابُواْ مِنۢ بَعۡدِهَا وَءَامَنُوٓاْ إِنَّ رَبَّكَ مِنۢ بَعۡدِهَا لَغَفُورࣱ رَّحِيمࣱ ١٥٣
Al-A'raf 7:153
سورة الأعراف
Meccan
Verse: 153/206
Page 169
-
தமிழ் translation
الترجمة التاميلية
153. (எனினும் இத்தகைய) பாவங்கள் செய்து கொண்டிருந்தவர்களிலும் எவர்கள் கைசேதப்பட்டு அதிலிருந்து விலகி உண்மையாகவே நம்பிக்கை கொள்கிறார்களோ (அவர்களை), அதற்குப் பின்னர் நிச்சயமாக உமது இறைவன் மன்னித்துக் கருணை செய்பவன் ஆவான். -
Jan Trust Foundation - Tamil translation
ஆனால் தீய செயல்கள் செய்து கொண்டிருந்தோர் (மனந்திருந்தி), தவ்பா செய்து (பாவங்களிலிருந்து விலகி உண்மையாக) நம்பிக்கை கொண்டால் - நிச்சயமாக அதன்பின் உம்முடைய இறைவன் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்பவனாகவுமிருக்கின்றான். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
தீமைகளை செய்து, பிறகு, அவற்றுக்குப் பின்னர் திருந்தி (அல்லாஹ்வின் பக்கம்) திரும்பி, (பாவமன்னிப்புக் கோரி,) நம்பிக்கை கொண்டவர்கள் (நிச்சயம் மன்னிப்பு பெறுவார்கள். ஏனெனில்) நிச்சயமாக உம் இறைவன் அதற்குப் பின்னர் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.
Al-A'raf 7:153
Loading the recitation…
0:00