قُلِ ٱدۡعُواْ ٱلَّذِينَ زَعَمۡتُم مِّن دُونِهِۦ فَلَا يَمۡلِكُونَ كَشۡفَ ٱلضُّرِّ عَنكُمۡ وَلَا تَحۡوِيلًا ٥٦
Al-Isra 17:56
سورة الإسراء
Meccan
Verse: 56/111
Page 287
-
தமிழ் translation
الترجمة التاميلية
56. (நபியே! இணைவைத்து வணங்குபவர்களை நோக்கி) கூறுவீராக: அல்லாஹ்வைத் தவிர்த்து (வேறு தெய்வங்கள் இருப்பதாக) நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்களே அவற்றை நீங்கள் (உங்கள் சிரமங்களை நீக்க) அழையுங்கள். (அவ்வாறு அழைத்தால்) அவை உங்கள் சிரமத்தை நீக்கி வைக்கவோ அல்லது (அதைத்) தட்டிவிடவோ சக்திபெறாது (என்பதை அறிந்து கொள்வீர்கள்). -
Jan Trust Foundation - Tamil translation
அவனையன்றி (வேறு தெய்வங்கள் இருப்பதாக) நீங்கள் எண்ணிக்கொண்டிருப்பவர்களை அழைத்துப்பாருங்கள்; அவர்கள் உங்களுடைய கஷ்டத்தை நிவர்த்திக்கவோ அல்லது திருப்பிவிடவோ சக்தி பெறவில்லை (என்பதை அறிவீர்கள்). -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
(நபியே!) கூறுவீராக! அவனையன்றி (தெய்வங்கள் என) நீங்கள் கூறியவற்றை (உங்கள் துன்பத்தில் அவர்களிடம் உதவிகோரி) அழையுங்கள். அவை உங்களை விட்டுத் துன்பத்தை நீக்குவதற்கும் (அதை விட்டுத்) திருப்புவதற்கும் ஆற்றல் பெற மாட்டார்கள்.
Al-Isra 17:56
Loading the recitation…
0:00