يَسۡمَعُ ءَايَٰتِ ٱللَّهِ تُتۡلَىٰ عَلَيۡهِ ثُمَّ يُصِرُّ مُسۡتَكۡبِرࣰا كَأَن لَّمۡ يَسۡمَعۡهَاۖ فَبَشِّرۡهُ بِعَذَابٍ أَلِيمࣲ ٨
Al-Jathiya 45:8
سورة الجاثية
Meccan
Verse: 8/37
Page 499
-
தமிழ் translation
الترجمة التاميلية
8. அவர்கள் அல்லாஹ்வின் வசனங்கள் தங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டதை செவிமடுத்து விட்டு பின்னர், அதை செவிமடுக்காதவர்களைப்போல் கர்வம் கொண்டு (நிராகரிப்பின் மீதே) பிடிவாதமாக இருக்கிறார்கள். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு (நபியே!) நற்செய்தி கூறுவீராக. -
Jan Trust Foundation - Tamil translation
தன் மீது ஓதிக்காட்டப்படும் அல்லாஹ்வுடைய வசனங்களைக் கேட்கிறான்; பின்பு பெருமையடித்துக் கொண்டு அவன் அதைக் கேளாதது போல் (தன் நிராகரிப்பில்) பிடிவாதம் செய்கிறான்; அ(த்தகைய)வனுக்கு நோவினை செய்யும் வேதனையைக் கொண்டு நன்மாராயம் கூறுவீராக. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அவன் அல்லாஹ்வின் வசனங்கள் தன் மீது ஓதப்படுவதை செவியுறுகின்றான். பிறகு, பெருமை பிடித்தவனாக (நிராகரிப்பிலேயே) பிடிவாதம் காட்டுகின்றான் அவனோ அவற்றை செவியுறாதவனைப் போல. அவனுக்கு வலி தரக்கூடிய வேதனையைக் கொண்டு நற்செய்தி கூறுங்கள்!
Al-Jathiya 45:8
Loading the recitation…
0:00