أَوَلَمۡ يَرَوۡاْ أَنَّا نَأۡتِي ٱلۡأَرۡضَ نَنقُصُهَا مِنۡ أَطۡرَافِهَاۚ وَٱللَّهُ يَحۡكُمُ لَا مُعَقِّبَ لِحُكۡمِهِۦۚ وَهُوَ سَرِيعُ ٱلۡحِسَابِ ٤١
Ar-Ra'd 13:41
سورة الرعد
Medinan
Verse: 41/43
Page 254
-
தமிழ் translation
الترجمة التاميلية
41. (அவர்கள் வசித்திருக்கும்) பூமியை அதன் ஓரங்களிலிருந்து நிச்சயமாக நாம் (படிப்படியாகக்) குறைத்து வருவதை அவர்கள் காணவில்லையா? அல்லாஹ்வே தீர்ப்பளிக்கக்கூடியவன். அவனுடைய தீர்ப்பைத் தடை செய்யக்கூடியவன் ஒருவனுமில்லை. அவன் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகத் தீவிரமானவன். -
Jan Trust Foundation - Tamil translation
பூமி (யில் அவர்களின் பிடி) யை அதன் எல்லையோரங்களிலிருந்து நாம் (படிப்படியாகக்) குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? மேலும், அல்லாஹ்வே தீர்ப்பளிப்பவன்; அவன் தீர்ப்பை மாற்றுபவன் எவனுமில்லை! மேலும், அவன் கேள்வி-கணக்குக் கேட்பதில் விரைவானவன். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
நிச்சயமாக நாம் (அவர்கள் வசிக்கின்ற) பூமியை அதன் ஓரங்களிலிருந்து குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் காணவில்லையா? அல்லாஹ்வே தீர்ப்பளிக்கிறான் (அதிகாரம் செலுத்துகிறான்). அவனுடைய தீர்ப்பைத் தடுப்பவர் அறவே இல்லை. அவன் விசாரிப்பதில் மிக தீவிரமானவன்.
Ar-Ra'd 13:41
Loading the recitation…
0:00