فَأَقِمۡ وَجۡهَكَ لِلدِّينِ حَنِيفࣰاۚ فِطۡرَتَ ٱللَّهِ ٱلَّتِي فَطَرَ ٱلنَّاسَ عَلَيۡهَاۚ لَا تَبۡدِيلَ لِخَلۡقِ ٱللَّهِۚ ذَٰلِكَ ٱلدِّينُ ٱلۡقَيِّمُ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ ٣٠
ArRoom 30:30
سورة الروم
Meccan
Verse: 30/60
Page 407
-
தமிழ் translation
الترجمة التاميلية
30. (நபியே! இப்ராஹீமுடைய) நேரான மார்க்கத்தை நோக்கி நீர் உமது முகத்தை உறுதியான ஓர்மைப்பாட்டுடன் திருப்புவீராக. (அதுவே) மனிதர்களுக்காக அல்லாஹ் ஏற்படுத்திய இயற்கை மார்க்கமாகும். அவன் படைத்த (மார்க்கத்)தை (எவராலும்) மாற்றிவிட முடியாது. இதுதான் நிலையான (நேர்மையான) மார்க்கம். எனினும், மனிதரில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்துகொள்ளவே மாட்டார்கள். -
Jan Trust Foundation - Tamil translation
ஆகவே, நீர் உம்முகத்தை தூய (இஸ்லாமிய) மார்க்கத்தின் பக்கமே முற்றிலும் திருப்பி நிலைநிறுத்துவீராக! எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றம் இல்லை அதுவே நிலையான மார்க்கமாகும். ஆனால் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
ஆகவே, (நபியே! நீர் இஸ்லாமிய கொள்கையில்) உறுதியுடையவராக உமது முகத்தை(யும் உமது உம்மத்தின் முகங்களையும் அந்த) மார்க்கத்தின் பக்கம் நிறுத்துவீராக! அல்லாஹ்வுடைய இயற்கை மார்க்கம் அது. அதன் மீது தான் அல்லாஹ் மக்களை இயற்கையாக அமைத்தான். அல்லாஹ்வின் படைப்பை (தீனை) மாற்றக்கூடாது. இதுதான் நிலையான (நீதமான, நேரான) மார்க்கம் ஆகும். என்றாலும் மக்களில் அதிகமானவர்கள் அறியமாட்டார்கள்.
ArRoom 30:30
Loading the recitation…
0:00