وَلَقَدۡ جَآءَتۡ رُسُلُنَآ إِبۡرَٰهِيمَ بِٱلۡبُشۡرَىٰ قَالُواْ سَلَٰمࣰاۖ قَالَ سَلَٰمࣱۖ فَمَا لَبِثَ أَن جَآءَ بِعِجۡلٍ حَنِيذࣲ ٦٩
Hood 11:69
سورة هود
Meccan
Verse: 69/123
Page 229
-
தமிழ் translation
الترجمة التاميلية
69. நிச்சயமாக (வானவர்களிலுள்ள) நம் தூதர்கள் இப்றாஹீமுக்கு நற்செய்தி கொண்டு வந்து “ஸலாம்'' கூறினர். (இப்றாஹீம் அதற்குப் பிரதியாக “உங்களுக்கும்) ஸலாம்'' கூறி சிறிதும் தாமதிக்காது (அறுத்துச்) சுட்டதொரு கன்றுக்குட்டியைக் கொண்டு வந்(து அவர்கள் முன் வைத்)தார்கள். -
Jan Trust Foundation - Tamil translation
நிச்சயமாக நம் தூதர்கள் (வானவர்கள்) இப்றாஹீமுக்கு நற்செய்தி (கொண்டு வந்து) 'ஸலாம்' (சொன்னார்கள்; இப்றாஹீமும் "ஸலாம்" (என்று பதில்) சொன்னார்; (அதன் பின்னர் அவர்கள் உண்பதற்காக) பொரித்த கன்றின் (இறைச்சியைக்) கொண்டு வருவதில் தாமதிக்கவில்லை. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
திட்டவட்டமாக நம் (வானவ) தூதர்கள் இப்றாஹீமிடம் நற்செய்தியைக் கொண்டு வந்து, “(உமக்கு) ஈடேற்றம் உண்டாகுக” என்று கூறினர். (இப்றாஹீம்) (“உங்களுக்கும்) ஈடேற்றம் உண்டாகுக!” என்று கூறி, தாமதிக்காது சுடப்பட்ட ஒரு கன்றுக்குட்டி(யின் கறி)யைக் கொண்டு வந்தார்.
Hood 11:69
Loading the recitation…
0:00