فَلَمَّآ أَن جَآءَ ٱلۡبَشِيرُ أَلۡقَىٰهُ عَلَىٰ وَجۡهِهِۦ فَٱرۡتَدَّ بَصِيرࣰاۖ قَالَ أَلَمۡ أَقُل لَّكُمۡ إِنِّيٓ أَعۡلَمُ مِنَ ٱللَّهِ مَا لَا تَعۡلَمُونَ ٩٦
Yusuf 12:96
سورة يوسف
Meccan
Verse: 96/111
Page 247
-
தமிழ் translation
الترجمة التاميلية
96. அச்சமயம் (யூஸுஃபைப் பற்றி) நற்செய்தி கூறுபவரும் வந்து, (யூஸுஃபுடைய சட்டையை) அவர் (தந்தையின்) முகத்தில் போடவே, அவர் இழந்த (தன் கண்) பார்வையை அடைந்து ‘‘(யூஸுஃப் உயிரோடிருப்பதைப் பற்றி) நீங்கள் அறியாத வற்றையெல்லாம் அல்லாஹ்வின் அருளைக் கொண்டு நிச்சயமாக நான் அறிவேன் என்பதாக (முன்னர்) நான் உங்களுக்குக் கூறவில்லையா?'' என்று கேட்டார். -
Jan Trust Foundation - Tamil translation
பிறகு, நன்மாராயங் கூறுபவர் வந்து, (சட்டையை) அவர் முகத்தில் போட்டபோது அவர் மீண்டும் பார்வையுடையோரானார்; "நீங்கள் அறியாததையெல்லாம் அல்லாஹ்விடமிருந்து நிச்சயமாக நான் அறிவேன் என்று உங்களிடம் கூறவில்லையா?" என்று (அவர்களை நோக்கிக்) கூறினார், -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
நற்செய்தியாளர் வந்தபோது, அதை அவருடைய முகத்தில் போட்டார். அவர் பார்வையுடையவராக திரும்பினார். “நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்விடம் நிச்சயமாக நான் அறிவேன் என்று நான் உங்களுக்குக் கூறவில்லையா?” என்று கூறினார்.
Yusuf 12:96
Loading the recitation…
0:00