16. (இன்னும், இவர்களுடைய உதாரணம்:) ஒரு ஷைத்தானுடைய உதாரணத்தையும் ஒத்திருக்கிறது. அவன் மனிதனை நோக்கி ‘‘நீ (அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும்) நிராகரித்துவிடு'' என்று கூறுகிறான். அவ்வாறே அவனும் நிராகரித்து விட்டான். (பின்னர், ஷைத்தான் அவனை நோக்கி) ‘‘நிச்சயமாக நான் உன்னைவிட்டு விலகிவிட்டேன். ஏனென்றால், உலகத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு மெய்யாகவே நான் பயப்படுகிறேன்'' என்று கூறுவான்.
الترجمة التاميلية
كَمَثَلِ ٱلشَّيۡطَٰنِ إِذۡ قَالَ لِلۡإِنسَٰنِ ٱكۡفُرۡ فَلَمَّا كَفَرَ قَالَ إِنِّي بَرِيٓءٞ مِّنكَ إِنِّيٓ أَخَافُ ٱللَّهَ رَبَّ ٱلۡعَٰلَمِينَ
(இன்னும் இவர்கள் நிலை) ஷைத்தானுடைய உதாரணத்தைப் போன்றிருக்கிறது, (அவன்) மனிதனை நோக்கி, "நீ (இறைவனை) நிராகரித்து விடு" என்று கூறுகிறான். அவ்வாறு மனிதன் நிராகரித்ததும் "நான் உன்னை விட்டும் ஒதுங்கிக் கொண்டேன், (ஏனெனில்) நான் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுகிறேன்" என்றான்.
Jan Trust Foundation - Tamil translation
(நபிக்கு எதிராக யூதர்களைத் தூண்டிய நயவஞ்சகர்களின் உதாரணம்) அந்த ஷைத்தானின் உதாரணத்தைப் போன்றுதான். அவன் மனிதனுக்கு, “நீ நிராகரித்து விடு” என்று கூறினான். அந்த மனிதன் நிராகரித்துவிடவே, “உன்னை விட்டு நிச்சயமாக நான் நீங்கியவன், நிச்சயமாக அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வை நான் பயப்படுகின்றேன்” என்று கூறி (அந்த மனிதனை விட்டும் அவன் விலகி) விடுகின்றான்.
الترجمة التاميلية - عمر شريف