4. இதன் காரணமாவது: நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் (மிகக் கடினமாக) எதிர்த்தார்கள் என்பதுதான். (இவ்வாறு) எவன் அல்லாஹ்வை எதிர்க்கிறானோ, (அவனை) நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பான்.
الترجمة التاميلية
ذَٰلِكَ بِأَنَّهُمۡ شَآقُّواْ ٱللَّهَ وَرَسُولَهُۥۖ وَمَن يُشَآقِّ ٱللَّهَ فَإِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ
அதற்கு(க் காரணம்); நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் விரோதம் செய்தார்கள், அன்றியும், எவன் அல்லாஹ்வை விரோதிக்கின்றானோ, (அவனை) நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் கடினமானவன்.
Jan Trust Foundation - Tamil translation
அதற்கு காரணம், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் மாறுசெய்தார்கள். யார் அல்லாஹ்விற்கு மாறுசெய்வாரோ (அவருக்கு கடுமையான தண்டனை உண்டு. ஏனெனில்,) நிச்சயமாக அல்லாஹ் (தனக்கு மாறு செய்பவர்களை) தண்டிப்பதில் கடுமையானவன்.
الترجمة التاميلية - عمر شريف