3. மேலும், அவர்கள் எதிர்பார்க்காத வகையில் அவர்களுக்கு வேண்டிய வசதிகளை அளிப்பான். எவர்கள் அல்லாஹ்வை முற்றிலும் நம்புகிறார்களோ, அவர்களுக்கு அவனே (முற்றிலும்) போதுமானவன். நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தைச் செய்தே முடிப்பான். ஆயினும், அல்லாஹ் ஒவ்வொன்றிற்கும் (ஒரு காலத்தையும்) அளவையும் ஏற்படுத்திவிட்டான். (அதன்படியே நடைபெறும்.)
الترجمة التاميلية
وَيَرۡزُقۡهُ مِنۡ حَيۡثُ لَا يَحۡتَسِبُۚ وَمَن يَتَوَكَّلۡ عَلَى ٱللَّهِ فَهُوَ حَسۡبُهُۥٓۚ إِنَّ ٱللَّهَ بَٰلِغُ أَمۡرِهِۦۚ قَدۡ جَعَلَ ٱللَّهُ لِكُلِّ شَيۡءٖ قَدۡرٗا
அ(த்தகைய)வருக்கு, அவர் எண்ணியிராத புறத்திலிருந்து, அவன் உணவு (வசதி)களை அளிக்கிறான், மேலும், எவர், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவன் போதுமானவன், நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தை நிறைவாக்குபவன் - திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அளவை உண்டாக்கி வைத்திருக்கின்றான்.
Jan Trust Foundation - Tamil translation
இன்னும் அவர் எண்ணாத விதத்தில் இருந்து அவருக்கு உணவளிப்பான் (வாழ்வாதாரத்தை ஏற்படுத்துவான்). எவர் அல்லாஹ்வின் மீது தவக்குல் - நம்பிக்கை வைப்பாரோ அவனே அவருக்குப் போதுமானவன் ஆவான். நிச்சயமாக அல்லாஹ் தனது காரியத்தை நிறைவேற்றுவான். (யாரும் அவனை தடுக்க முடியாது, எதுவும் அவனை விட்டு தப்ப முடியாது.) திட்டமாக அல்லாஹ் ஒவ்வொன்றுக்கும் ஓர் அளவை ஏற்படுத்தினான்.
الترجمة التاميلية - عمر شريف