6. (‘தலாக்' கூறிய பின்னர் இத்தா இருக்கவேண்டிய உங்கள்) பெண்களை உங்களால் முடிந்தவரை, நீங்கள் இருக்கும் இடத்திலேயே வசித்திருக்கும்படி செய்யுங்கள். அவர்களை நிர்ப்பந்திக்கக் கருதி அவர்களைத் துன்புறுத்தாதீர்கள். அவர்கள் கர்ப்பமான பெண்களாக இருந்தால், அவர்கள் பிரசவிக்கும் வரை அவர்களுக்குச் செலவுக்குக் கொடுத்து வாருங்கள். (பிரசவித்ததன்) பின்னர் (குழந்தைக்கு) உங்களுக்காக அவர்கள் பாலூட்டினால் அதற்குரிய கூலியை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள். (இதைப் பற்றி முன்னதாகவே) உங்களுக்குள் முறையாக பேசி முடிவு செய்துகொள்ளுங்கள். இதில் உங்களுக்குள் சிரமம் ஏற்பட்டால், (அக்குழந்தைக்கு) மற்றவளைக் கொண்டும் பால் கொடுக்கலாம்.
الترجمة التاميلية
أَسۡكِنُوهُنَّ مِنۡ حَيۡثُ سَكَنتُم مِّن وُجۡدِكُمۡ وَلَا تُضَآرُّوهُنَّ لِتُضَيِّقُواْ عَلَيۡهِنَّۚ وَإِن كُنَّ أُوْلَٰتِ حَمۡلٖ فَأَنفِقُواْ عَلَيۡهِنَّ حَتَّىٰ يَضَعۡنَ حَمۡلَهُنَّۚ فَإِنۡ أَرۡضَعۡنَ لَكُمۡ فَـَٔاتُوهُنَّ أُجُورَهُنَّ وَأۡتَمِرُواْ بَيۡنَكُم بِمَعۡرُوفٖۖ وَإِن تَعَاسَرۡتُمۡ فَسَتُرۡضِعُ لَهُۥٓ أُخۡرَىٰ
உங்கள் சக்திக்கேற்ப நீங்கள் குடியிருக்கும் இடத்தில் ('இத்தா'விலிருக்கும்) பெண்களை நீங்கள் குடியிருக்கச் செய்யுங்கள், அவர்களுக்கு நெருக்கடியுண்டாக்குவதற்காக அவர்களுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள், அவர்கள் கர்ப்பமுடையவர்களாக இருந்தால், அவர்கள் பிரசவிக்கும் வரை, அவர்களுக்காகச் செலவு செய்யுங்கள்; அன்றியும் அவர்கள் உங்களுக்காக (உங்கள் குழந்தைகளுக்குப்) பாலூட்டினால், அதற்கான கூலியை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள். (இதைப் பற்றி) உங்களுக்குள் நேர்மையாகப் பேசி முடிவு செய்து கொள்ளுங்கள், ஆனால் (இது பற்றி) உங்களுக்குள் சிரமம் ஏற்பட்டால் (அக்குழந்தைக்கு) மற்றொருத்தி பால் கொடுக்கலாம்.
Jan Trust Foundation - Tamil translation
உங்கள் வசதிக்கேற்ப நீங்கள் தங்கும் இடத்தில் அவர்களை தங்க வையுங்கள்! (தங்குமிடத்தில்) அவர்கள் மீது நீங்கள் நெருக்கடியை ஏற்படுத்துவதற்காக அவர்களுக்கு தீங்கு செய்யாதீர்கள். அவர்கள் கர்ப்பம் உள்ள பெண்களாக இருந்தால் அவர்கள் தங்கள் கர்ப்பத்தை பெற்றெடுக்கின்ற வரை அவர்களுக்கு செலவு செய்யுங்கள்! அவர்கள் உங்களுக்காக (உங்கள் பிள்ளைகளுக்கு) பாலூட்டினால் அவர்களின் ஊதியங்களை அவர்களுக்குக் கொடுங்கள்! உங்களுக்கு மத்தியில் நல்லதை ஒருவருக்கொருவர் ஏற்றுக் கொள்ளுங்கள்! (ஒருவர் கூறுகின்ற நல்லதை மற்றொருவர் ஏற்றுக்கொள்ளட்டும்.) நீங்கள் (கணவன், மனைவி இருவரும்) சிரமமாகக் கருதினால் அவருக்காக (அவரின் குழந்தைக்கு) வேறு ஒரு பெண் பாலூட்டுவாள்.
الترجمة التاميلية - عمر شريف