ﮠ
                    surah.translation
            .
            
                            
            
    ﰡ
                                                                                                                
                                    ﭵ
                                    ﰀ
                                                                        
                    தா ஹா (ஓ மனித (தூத)ரே!)
                                                                                                                மக்களுக்கு அவர்களின் விசாரணை (நாள்) நெருங்கிவிட்டது. அவர்களோ அலட்சியத்தில் இருந்துகொண்டு (நமது வசனங்களை) புறக்கணிக்கின்றனர்.
                                                                        நாம் (இந்த) குர்ஆனை நீர் சிரமப்படுவதற்காக உம்மீது நாம் இறக்கவில்லை.
                                                                        பயப்படுகின்றவருக்கு ஒரு நினைவூட்டலாகவே தவிர (யாரும் சிரமப்படுவதற்காக இதை நாம் இறக்கவில்லை).
                                                                        (இது) பூமியையும் உயர்ந்த வானங்களையும் படைத்தவனிடமிருந்து இறக்கப்பட்டதாகும்.
                                                                        ரஹ்மான் அர்ஷின் மீது (தன் தகுதிக்குத் தக்கவாறு) உயர்ந்து இருக்கிறான்.
                                                                        வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவை இரண்டிற்கும் இடையில் உள்ளவையும் ஈரமான மண்ணுக்குக் கீழ் உள்ளவையும் அவனுக்கே உரியன.
                                                                        நீர் பேச்சை பகிரங்கப்படுத்தினாலும் (அல்லது மறைத்தாலும்) நிச்சயமாக அவன் இரகசியத்தையும் (அதைவிட) மிக மறைந்ததையும் நன்கறிவான்.
                                                                        அல்லாஹ் -வணக்கத்திற்குரியவன் அவனைத் தவிர (வேறு யாரும்) அறவே இல்லை. அவனுக்கு மிக அழகிய பெயர்கள் உண்டு.
                                                                        (நபியே!) மூஸாவுடைய செய்தி உமக்கு வந்ததா?
                                                                        அவர் ஒரு நெருப்பைப் பார்த்தபோது, அவர் தனது குடும்பத்தினருக்குக் கூறினார்: “(இங்கே) தங்கி இருங்கள்! நிச்சயமாக நான் ஒரு நெருப்பைக் காண்கின்றேன். அதிலிருந்து ஒரு (சிறிய) நெருப்பை உங்களிடம் கொண்டு வரலாம் அல்லது நெருப்பின் அருகில் ஒரு வழிகாட்டுதலை நான் பெறலாம்.
                                                                        அவர் அதனிடம் வந்தபோது (இவ்வாறு) அழைக்கப்பட்டார். “மூஸாவே!”
                                                                        நிச்சயமாக நான்தான் உமது இறைவன். உமது செருப்புகளை கழட்டுவீராக! நிச்சயமாக நீர் “துவா” என்னும் பரிசுத்தமான பள்ளத்தாக்கில் இருக்கிறீர்.
                                                                        நான் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். ஆகவே, (உமக்கு) வஹ்யி அறிவிக்கப்படுபவற்றை செவிமடுப்பீராக!
                                                                        நிச்சயமாக நான்தான் அல்லாஹ். என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் (வேறுயாரும்) அறவே இல்லை. ஆகவே, என்னை வணங்குவீராக! என் நினைவிற்காக தொழுகையை நிலைநிறுத்துவீராக!
                                                                        நிச்சயமாக மறுமை வரக்கூடியதாகும். அதை நான் (என் அறிவில்) மறைத்தே வைத்திருப்பேன், ஒவ்வொரு ஆன்மாவும் அது செய்கின்றவற்றுக்கு கூலி கொடுக்கப்படுவதற்காக.
                                                                        அதை (-மறுமையை) நம்பிக்கை கொள்ளாமல் தனது மன இச்சையை பின்பற்றியவன் அதை (-மறுமையை) விட்டு உம்மை திருப்பிவிட வேண்டாம். (அதை விட்டும் நீர் திரும்பிவிட்டால்) நீர் அழிந்து விடுவீர்.
                                                                        மூஸாவே! உமது வலக்கையில் உள்ள அது என்ன?
                                                                        அவர் கூறினார்: அது எனது கைத்தடி. அதன்மீது நான் சாய்ந்து கொள்வேன். அதைக் கொண்டு என் ஆடுகளுக்கு (இலைகளை) பறிப்பேன். இன்னும் எனக்கு அதில் மற்ற பல தேவைகள் (பல பயன்கள்) உள்ளன.
                                                                        அவன் கூறினான்: மூஸாவே! அதை நீர் எறிவீராக!
                                                                        அதை அவர் எறிந்தார். உடனே அது ஓடுகின்ற ஒரு பாம்பாக ஆகிவிட்டது.
                                                                        அவன் கூறினான்: அதைப் பிடிப்பீராக! பயப்படாதீர். நாம் அதை அதன் முந்திய தன்மைக்கே திருப்புவோம்.
                                                                        உமது கரத்தை புஜத்தின் கீழ் சேர்ப்பீராக! அது (எவ்வித) நோயுமின்றி (பனிக்கட்டியைப் போன்று) வெண்மையாக மற்றுமொறு அத்தாட்சியாக தோன்றும்.
                                                                        நமது பெரிய அத்தாட்சிகளில் இருந்து உமக்கு நாம் காண்பிப்பதற்காக (இவற்றைக் கொடுத்தோம்).
                                                                        ஃபிர்அவ்னிடம் நீர் செல்வீராக! நிச்சயமாக அவன் வரம்புமீறி விட்டான்.
                                                                        அவர் கூறினார்: “என் இறைவா! எனக்கு என் நெஞ்சத்தை விரிவாக்கு!
                                                                        “எனக்கு என் காரியத்தை இலகுவாக்கு!
                                                                        என் நாவிலிருந்து (என்) கொன்னலை அவிழ்த்துவிடு!
                                                                        
                                                                                                                
                                    ﯦﯧ
                                    ﰛ
                                                                        
                    அவர்கள் என் பேச்சை புரிந்து கொள்வார்கள்.
                                                                        என் குடும்பத்திலிருந்து எனக்கு ஓர் உதவியாளரை ஏற்படுத்து!
                                                                        
                                                                                                                
                                    ﯯﯰ
                                    ﰝ
                                                                        
                    என் சகோதரர் ஹாரூனை (எனக்கு உதவியாளராக ஆக்கி வை)!
                                                                        அதன் மூலம் எனது முதுகைப் பலப்படுத்து.
                                                                        எனது காரியத்தில் அவரை இணைத்துவிடு! (அவரையும் நபியாக ஆக்கிவிடு!)
                                                                        நாங்கள் உன்னை அதிகம் துதிப்பதற்காக,
                                                                        
                                                                                                                
                                    ﯾﯿ
                                    ﰡ
                                                                        
                    இன்னும், உன்னை அதிகம் நினைவு கூருவதற்காக (என் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்!).
                                                                        நிச்சயமாக நீ எங்களை உற்று நோக்கியவனாக இருக்கின்றாய்.
                                                                        அவன் கூறினான்: “மூஸாவே! உமது கோரிக்கையை நீர் கொடுக்கப்பட்டீர்.”
                                                                        உம்மீது மற்றொருமுறை திட்டமாக அருள் புரிந்திருக்கின்றேன்.
                                                                        (உமது பிறப்பிற்கு பின்னர் என்ன செய்ய வேண்டும் என்று) அறிவிக்கப்பட வேண்டியவற்றை நாம் உமது தாயாருக்கு அறிவித்தபோது (உம்மீது அருள் புரிந்தோம்). 
                                                                        உமது சகோதரி நடந்துசென்றபோது, “அவரை பொறுப்பேற்பவரை நான் உங்களுக்கு அறிவிக்கவா? என்று கூறினாள். உம்மை உமது தாயிடமே நாம் திரும்பக் கொண்டு வந்தோம், அவளது கண் குளிர்வதற்காகவும் அவள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும். நீர் ஓர் உயிரை கொன்று விட்டீர். அந்த துக்கத்திலிருந்து உம்மை நாம் பாதுகாத்தோம். பல சோதனைகளில் நாம் உம்மை சோதித்தோம். ஆக, மத்யன் வாசிகளிடம் பல ஆண்டுகள் நீர் தங்கினீர். பிறகு (உம்மை தூதராக அனுப்புவதற்குரிய) ஒரு குறிப்பிட்ட நேரத்தை மூஸாவே! நீர் அடைந்தீர்.
                                                                        
                                                                                                                
                                    ﮖﮗ
                                    ﰨ
                                                                        
                    இன்னும் எனக்காகவே நான் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
                                                                        நீரும் உனது சகோதரரும் என் அத்தாட்சிகளைக் கொண்டு (ஃபிர்அவ்னிடம்) செல்வீர்களாக! என்னை நினைவு கூர்வதில் சோர்வடையாதீர்கள்.
                                                                        நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்வீர்களாக! நிச்சயமாக அவன் வரம்பு மீறிவிட்டான்.
                                                                        அவனுக்கு மென்மையான சொல்லை இருவரும் கூறுவீர்களாக! அவன் நல்லறிவு பெறுகிறானா, அல்லது பயப்படுகிறானா? (என்று பாருங்கள்).
                                                                        (அவ்விருவரும்) கூறினர்: எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் (அவன் எங்களை தண்டிப்பதில்) எங்கள் மீது அவசரப்படுவதை அல்லது அவன் (எங்கள் மீது) வரம்பு மீறுவதை பயப்படுகிறோம்.
                                                                        (அல்லாஹ்) கூறினான்: நீங்கள் இருவரும் பயப்படாதீர்கள். நிச்சயமாக நான் உங்கள் இருவருடன் கேட்பவனாக, பார்ப்பவனாக இருக்கிறேன்.
                                                                        ஆகவே, அவனிடம் நீங்கள் இருவரும் வாருங்கள்! (அவனிடம்) கூறுங்கள்! நிச்சயமாக நாங்கள் உனது இறைவனின் தூதர்கள். ஆகவே, எங்களுடன் இஸ்ரவேலர்களை அனுப்பி விடு! அவர்களை வேதனை செய்யாதே! திட்டமாக உனது இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியைக் உன்னிடம் நாங்கள் கொண்டு வந்துள்ளோம். நேர்வழியை பின்பற்றியவருக்கு ஈடேற்றம் உண்டாகுக!
                                                                        நிச்சயமாக நாங்கள் -பொய்ப்பித்து, புறக்கணித்து, திரும்பியவர் மீது நிச்சயமாக தண்டனை நிகழும் என்று- எங்களுக்கு திட்டமாக வஹ்யி அறிவிக்கப்பட்டுள்ளது.
                                                                        அவன் கூறினான்: “மூஸாவே! உங்கள் இருவரின் இறைவன் யார்?”
                                                                        அவர் (-மூஸா) கூறினார்: எவன் ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய படைப்பை (அதுபோன்ற ஒரு ஜோடியை -துணையைக்) கொடுத்து, பிறகு (அதற்கு) வழிகாட்டினானோ அவன்தான் எங்கள் இறைவன்.
                                                                        அவன் (ஃபிர்அவ்ன்) கூறினான்: “முந்திய தலைமுறையினர்களின் நிலை என்னவாகும்.”
                                                                        அவர் (-மூஸா) கூறினார்: அவர்களைப் பற்றிய ஞானம் என் இறைவனிடம் ஒரு பதிவுப்புத்தகத்தில் (பாதுகாப்பாக) இருக்கிறது. என் இறைவன் தவறு செய்துவிட மாட்டான். இன்னும், மறக்கமாட்டான்.
                                                                        அவன்தான் உங்களுக்கு பூமியை (தொட்டிலாகவும்) விரிப்பாக(வும்) ஆக்கி உங்களுக்கு அதில் (பல) பாதைகளை ஏற்படுத்தினான். இன்னும் வானத்திலிருந்து மழையை இறக்கினான். அதன்மூலம் பலதரப்பட்ட தாவரங்களிலிருந்து பல வகைகளை நாம் உற்பத்தி செய்கிறோம்.
                                                                        சாப்பிடுங்கள்! உங்கள் கால்நடைகளையும் மேய்த்துக் கொள்ளுங்கள். நிச்சயம் இதில் அறிவுடையவர்களுக்கு பல அத்தாட்சிகள் உள்ளன.
                                                                        அதிலிருந்துதான் உங்களைப் படைத்தோம். அதில்தான் உங்களை மீட்டுக் கொண்டுவருவோம். அதிலிருந்துதான் மற்றொருமுறை உங்களை (உயிருள்ளவர்களாக) வெளியேற்றுவோம்.
                                                                        அவனுக்கு (ஃபிர்அவ்னுக்கு) நமது அத்தாட்சிகள் அனைத்தும் நாம் காண்பித்தோம். எனினும் அவன் (அவற்றை) பொய்ப்பித்தான். இன்னும் ஏற்க மறுத்தான்.
                                                                        அவன் (ஃபிர்அவ்ன்) கூறினான்: “மூஸாவே! உமது சூனியத்தால் எங்கள் பூமியிலிருந்து எங்களை நீர் வெளியேற்றுவதற்காக எங்களிடம் வந்தீரா?”
                                                                        நிச்சயமாக நாமும் அதுபோன்ற ஒரு சூனியத்தை உம்மிடம் கொண்டு வருவோம். ஆகவே, எங்களுக்கு மத்தியிலும் உங்களுக்கு மத்தியிலும் இடைப்பட்ட ஒரு சமமான இடத்தில் (நாம் ஒன்று சேர) குறிப்பிட்ட நேரத்தை ஏற்படுத்து. நாமும் அதற்கு மாறுசெய்ய மாட்டோம். நீயும் அதற்கு மாறுசெய்யக் கூடாது.
                                                                        அவர் (-மூஸா) கூறினார்: உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட நேரம் “யவ்முஸ் ஸீனா” (என்ற உங்கள் பெருநாள்) ஆகும். இன்னும் மக்கள் முற்பகலில் ஒன்றுதிரட்டப்படுவதும் (நமது ஒப்பந்தம் ஆகும்).
                                                                        ஃபிர்அவ்ன் திரும்பிச் சென்றான். தனது சூழ்ச்சியை ஒன்றிணைத்தான். பிறகு (வாக்களிக்கப்பட்ட நேரத்தில் சூனியக்காரர்களுடன்) வந்தான்.
                                                                        அவர்களுக்கு மூஸா கூறினார்: “உங்களுக்கு கேடுதான்! அல்லாஹ்வின் மீது பொய்யை கற்பனை செய்யாதீர்கள்! அவன் உங்களை வேதனையைக் கொண்டு அழித்து விடுவான். திட்டமாக (பொய்யை) கற்பனை செய்தவன் நஷ்டமடைந்து விட்டான்.
                                                                        அவர்கள் (சூனியக்காரர்கள்) தங்களுக்கு மத்தியில் தங்கள் காரியத்தில் தர்க்கித்துக் கொண்டனர். இன்னும் அந்த பேச்சை அவர்கள் இரகசியமாக ஆக்கிக் கொண்டனர்.
                                                                        அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக இந்த இருவரும் சூனியக்காரர்கள். உங்கள் பூமியிலிருந்து உங்களை (அவ்விருவரும்) தங்கள் சூனியத்தைக் கொண்டு வெளியேற்றுவதற்கும் உங்கள் சிறந்த தலைவர்களை அவ்விருவரும் மிகைத்து விடுவதற்கும் அவ்விருவரும் நாடுகின்றனர்.”
                                                                        “ஆகவே, உங்கள் சூழ்ச்சிகளை உறுதிப்படுத்தி பின்பு (ஒரே) ஓர் அணியாக வாருங்கள். இன்றைய தினம் மிகைத்தவர் திட்டமாக வெற்றி அடைந்து விட்டார்.”
                                                                        அவர்கள் கூறினர்: “மூஸாவே! ஒன்று நீர் எறிவீராக! அல்லது எறிபவர்களில் முதலாவதாக நாங்கள் இருப்போம்.
                                                                        அவர் கூறினார்: “மாறாக நீங்கள் எறியுங்கள். ஆக, (அவர்கள் எறிந்த)அப்போது அவர்களுடைய கயிர்களும் அவர்களுடைய தடிகளும் அவர்களுடைய சூனியத்தால் அவருக்கு (-மூஸாவுக்கு) அவை ஓடுவதாக தோற்றமளிக்கப்பட்டது.
                                                                        அவர் -மூஸா தனது உள்ளத்தில் பயத்தை உணர்ந்தார்.
                                                                        நாம் கூறினோம்: “பயப்படாதீர்! நிச்சயமாக நீர்தான் (அவர்களை) மிகைத்தவர்.
                                                                        உமது கையில் உள்ளதை எறிவீராக! அது அவர்கள் செய்ததை விழுங்கி விடும். அவர்கள் செய்ததெல்லாம் ஒரு சூனியக்காரனின் சூழ்ச்சிதான். சூனியக்காரன் எங்கிருந்து வந்தாலும் அவன் வெற்றிபெற மாட்டான்.
                                                                        ஆக, சூனியக்காரர்கள் சிரம்பணிந்தவர்களாக (பூமியில்) விழுந்தனர். ஹாரூன் இன்னும் மூஸாவுடைய இறைவனைக் கொண்டு நாங்கள் நம்பிக்கை கொண்டோம் என்று கூறினார்கள்.
                                                                        (ஃபிர்அவ்ன்) கூறினான்: நான் உங்களுக்கு அனுமதி அளிப்பதற்கு முன்னர் அவரை நீங்கள் நம்பிக்கை கொண்டீர்களா? நிச்சயமாக அவர் உங்களுக்கு சூனியத்தைக் கற்றுக்கொடுத்த உங்கள் பெரியவர் ஆவார். ஆகவே, நிச்சயமாக உங்களை மாறுகை மாறுகால் வெட்டி பேரித்த மரத்தின் பலகைகளில் உங்களை நிச்சயமாக கழுமரத்தில் ஏற்றுவேன். எங்களில் யார் வேதனை செய்வதில் கடினமானவர், (அதில்) நிரந்தரமானவர் (யாருடைய வேதனை கடினமானது, நிரந்தரமானது) என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
                                                                        அவர்கள் கூறினார்கள் :உம்மை நாம் அறவே தேர்ந்தெடுக்க மாட்டோம். ஆகவே, நீ எதை செய்பவனாக இருக்கிறாயோ அதை நீ செய்! நீ செய்வதெல்லாம் இந்த உலக வாழ்க்கையில் தான். (எங்களது மறுமையை நீ ஒன்றும் செய்துவிட முடியாது.)
                                                                        நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனை நம்பிக்கை கொண்டோம், எங்களுக்கு எங்கள் பாவங்களையும் சூனியத்தில் எதை செய்வதற்கு நீ எங்களை நிர்ப்பந்தித்தாயோ அதையும் அவன் மன்னிப்பதற்காக. அல்லாஹ்தான் (நற்கூலி கொடுப்பதில்) மிகச் சிறந்தவன். (தண்டிப்பதில்) மிக நிரந்தரமானவன்.
                                                                        நிச்சயமாக விஷயமாவது, எவன் தன் இறைவனிடம் பாவியாக வருகிறானோ நிச்சயமாக அவனுக்கு நரகம்தான். அதில் அவன் மரணிக்கவும் மாட்டான். (நிம்மதியாக) வாழவும் மாட்டான்.
                                                                        யார் அவனிடம் நன்மைகளை செய்த நம்பிக்கையாளராக வருவாரோ அவர்களுக்குத்தான் மிக உயர்ந்த தகுதிகள் உண்டு.
                                                                        அதன் சொர்க்கங்கள் (அவர்களுக்கு உண்டு). அவற்றின் கீழே நதிகள் ஓடும். அதில் அவர்கள் நிரந்தரமானவர்களாக இருப்பார்கள். இதுதான் பரிசுத்தமானவருடைய கூலியாகும்.
                                                                        மூஸாவிற்கு திட்டவட்டமாக நாம் வஹ்யி அறிவித்தோம்: “என் அடியார்(களான இஸ்ரவேலர்)களை இரவில் அழைத்துச் செல்வீராக! அவர்களுக்காக கடலில் காய்ந்த ஒரு பாதையை ஏற்படுத்துவீராக! (ஃபிர்அவ்னால் நீங்கள்) பிடிக்கப்படுவதை(யும்) நீர் பயப்பட மாட்டீர்; (கடலில் நீங்கள் மூழ்கிவிடுவதையும்) அஞ்சமாட்டீர்.
                                                                        ஃபிர்அவ்ன் தனது படைகளைக் கொண்டு அவர்களை (இஸ்ரவேலர்களை) பின்தொடர்ந்தான். ஆகவே, அவர்களை (ஃபிர்அவ்னையும் அவனுடைய படைகளையும்) சூழவேண்டியது கடலில் இருந்து அவர்களை சூழ்ந்து கொண்டது.
                                                                        ஃபிர்அவ்ன் தன் சமுதாயத்தினரை வழிகெடுத்தான் (அவர்களுக்கு) அவன் நேர்வழி காட்டவில்லை.
                                                                        இஸ்ரவேலர்களே! திட்டமாக உங்கள் எதிரிகளிடமிருந்து உங்களை நாம் பாதுகாத்தோம். உங்களுக்கு தூர் மலையின் வலது பகுதியை வாக்களித்தோம். உங்கள் மீது “மன்னு” “ஸல்வா” ஐ இறக்கினோம்.
                                                                        நாம் உங்களுக்கு வழங்கிய நல்லவற்றிலிருந்து புசியுங்கள். அதில் எல்லை மீறாதீர்கள். உங்கள் மீது என் கோபம் இறங்கிவிடும். எவன் மீது என் கோபம் இறங்கி விடுகிறதோ திட்டமாக அவன் (துர்பாக்கியத்தில்) வீழ்ந்து விடுவான்.
                                                                        நிச்சயமாக நான் (பாவங்களிலிருந்து) திருந்தி, நம்பிக்கை கொண்டு, நன்மை செய்து பின்னர், நேர்வழி பெற்றவரை மிகவும் மன்னிக்கக்கூடியவன் ஆவேன்.
                                                                        மூஸாவே உமது சமுதாயத்தை விட்டு உம்மை அவசரமாக வரவழைத்தது எது?
                                                                        அவர் கூறினார்: அவர்கள் என் அடிச்சுவட்டின் மீது (அதைப் பின்பற்றி வந்து கொண்டு இருக்கின்றனர்). “என் இறைவா! நீ திருப்தி கொள்வதற்காக உன் பக்கம் நான் விரைந்தேன்.”
                                                                        (அல்லாஹ்) கூறினான்: நிச்சயமாக நாம் உமக்குப் பின்னர் உமது சமுதாயத்தை திட்டமாக சோதித்தோம். அவர்களை ஸாமிரி வழிகெடுத்தான்.
                                                                        உடனே தனது சமுதாயத்திடம் கோபமானவராக, கவலையடைந்தவராக மூஸா திரும்பினார். என் சமுதாயமே! உங்கள் இறைவன் உங்களுக்கு அழகிய வாக்கை வாக்களிக்கவில்லையா? (என்னை விட்டுப் பிரிந்த) காலம் உங்களுக்கு தூரமாகிவிட்டதா? அல்லது உங்கள் மீது உங்கள் இறைவன் புறத்திலிருந்து கோபம் இறங்குவதை நீங்கள் நாடுகிறீர்களா? அதனால் எனது குறிப்பிட்ட நேரத்திற்கு (வராமல்) மாறு செய்தீர்களா? என்று (மூஸா) கூறினார்.
                                                                        அவர்கள் கூறினார்கள்: “உமது குறிப்பிட்ட நேரத்திற்கு நாங்கள் எங்கள் விருப்பப்படி மாறுசெய்யவில்லை. என்றாலும் நாங்கள் (ஃபிர்அவ்னுடைய) மக்களின் ஆபரணங்களில் பலசுமைகளை நாங்கள் சுமத்தப்பட்டோம். ஆகவே, அவற்றை நாங்கள் (நெருப்பில்) எறிந்தோம். அவ்வாறே சாமிரியும் எறிந்தான்.
                                                                        அவன் அவர்களுக்கு ஒரு காளைக் கன்றை அதற்கு -மாட்டின் சப்தத்தை உடைய ஓர் உடலை- உருவாக்கினான். (இதைப் பார்த்த சில மக்கள்) கூறினர்: “இதுதான் உங்களது தெய்வமும் மூஸாவுடைய தெய்வமும் ஆகும். ஆனால் அவர் மறந்து (எங்கே சென்று) விட்டார்.
                                                                        அது அவர்களுக்கு எந்த பேச்சையும் திரும்ப பேசாமல் இருப்பதையும் அவர்களுக்கு தீமை செய்வதற்கும் நன்மை செய்வதற்கும் அது ஆற்றல் பெறவில்லை என்பதையும் அவர்கள் பார்க்கவேண்டாமா?
                                                                        திட்டவட்டமாக இதற்கு முன்னர் ஹாரூன் அவர்களுக்கு கூறினார்: “என் சமுதாயமே! நிச்சயமாக இதைக் கொண்டு நீங்கள் சோதிக்கப்பட்டுள்ளீர்கள். நிச்சயமாக உங்கள் இறைவன் ரஹ்மான்தான். ஆகவே, என்னைப் பின்பற்றுங்கள். என் கட்டளைக்கு கீழ்ப்படியுங்கள்.”
                                                                        மூஸா எங்களிடம் திரும்புகின்ற வரை இதை வணங்கியவர்களாகவே நாங்கள் நீடித்திருப்போம் என்று அவர்கள் கூறினர்.
                                                                        ஹாரூனே! (அவர்கள்) வழிதவறி விட்டார்கள் என்று நீர் அவர்களைப் பார்த்தபோது (என்னை நீர் பின்பற்றாமல் இருக்க) உம்மை எது தடுத்தது என்று (மூஸா) கூறினார்.
                                                                        நீர் என்னைப் பின்பற்றி நடந்திருக்க வேண்டாமா? எனது கட்டளைக்கு நீர் மாறு செய்துவிட்டீரா?
                                                                        அவர் (ஹாரூன்) கூறினார்: “என் தாயின் மகனே! எனது தாடியையும் என் தலை (முடி)யையும் பிடிக்காதே! நிச்சயமாக “என் கூற்றை நீர் கவனிக்காமல் இஸ்ரவேலர்களுக்கு மத்தியில் பிரித்து விட்டாய்!” என்று நீர் கூறிவிடுவதை நான் பயந்தேன்.
                                                                        ஸாமிரியே! உன் விஷயம் என்ன? என்று (மூஸா) கூறினார்.
                                                                        அவன் கூறினான்: “எதை அவர்கள் (மக்கள்) பார்க்கவில்லையோ அதை நான் பார்த்தேன். தூதரின் காலடி சுவடிலிருந்து ஒரு பிடி (மண்னை) எடுத்து எறிந்தேன். இப்படித்தான் எனக்கு என் மனம் அலங்கரித்தது.
                                                                        அவர் (மூஸா) கூறினார்: நீ சென்று விடு. இவ்வாழ்க்கையில் “லாமிஸாஸ்” (என்னைத்) தொடாதீர் என்று சொல்வதுதான் நிச்சயமாக உனக்கு நிகழும். இன்னும் உமக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் உண்டு. அதை நீ தவறவிடமாட்டாய். நீ வணங்கியவனாக இருந்த உனது தெய்வத்தைப் பார். நிச்சயமாக நாம் அதை எரித்து விடுவோம். பிறகு அதை கடலில் பரப்பிவிடுவோம்.
                                                                        நிச்சயமாக உங்கள் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்தான். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் (வேறு யாரும்) அறவே இல்லை. அவன் எல்லாவற்றையும் (தனது) அறிவால் விசாலமாகி (சூழ்ந்து) இருக்கின்றான்.
                                                                        இவ்வாறு, முன் சென்றுவிட்டவர்களின் செய்திகளை உமக்கு விவரிக்கிறோம். திட்டமாக உமக்கு நம் புறத்திலிருந்து நல்லுரையை (நல்லுபதேசத்தை) கொடுத்தோம்.
                                                                        யார் அதை புறக்கணித்தாரோ நிச்சயமாக அவர் மறுமை நாளில் பாவத்தை சுமப்பார்.
                                                                        அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். மறுமை நாளில் அது (-பாவம்) சுமையால் மிகக் கெட்டது.
                                                                        சூரில் (எக்காளத்தில்) ஊதப்படும் நாளில் (அந்த பாவச்சுமை மிகக் கெட்டது). அந்நாளில் பாவிகளை கண்கள் நீலமானவர்களாக நாம் எழுப்புவோம்.
                                                                        அவர்கள் தங்களுக்கு மத்தியில் மெதுவாகப் பேசிக் கொள்வார்கள், “நீங்கள் பத்து நாட்களே தவிர தங்கவில்லை”என்று.
                                                                        அவர்களில் அறிவால் முழுமையானவர், “நீங்கள் (உலகத்தில்) ஒரு நாளே தவிர தங்கவில்லை” என்று கூறும்போது அவர்கள் பேசுவதை நாம் நன்கறிந்தவர்கள் ஆவோம்.
                                                                        அவர்கள் மலைகளைப் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக! “என் இறைவன் அவற்றை தூள் தூளாக ஆக்கி விடுவான்.”
                                                                        இன்னும் அவற்றை சமமான பூமியாக விட்டுவிடுவான்.
                                                                        அவற்றில் நீர் கோணலையும் வளைவையும் (மேட்டையும் பள்ளத்தை யும்) காணமாட்டீர்.
                                                                        அந்நாளில் அவர்கள் அழைப்பாளரை பின் தொடர்வார்கள். அவரை விட்டு (அவர்கள் எங்கும்) திரும்ப முடியாது. சப்தங்கள் எல்லாம் ரஹ்மானுக்கு முன் அமைதியாகிவிடும். நீர் (அங்கு பாதங்களின்) மென்மையான சப்தத்தைத் தவிர (வேறு சப்தத்தை) செவிமடுக்க மாட்டீர்.
                                                                        அந்நாளில் ரஹ்மான் எவருக்கு அனுமதித்து அவருடைய பேச்சை அவன் விரும்பினானோ அவரைத் தவிர (வேறு யாருடைய) பரிந்துரையும் பலனளிக்காது.
                                                                        அவன் அவர்களுக்கு முன் உள்ளதையும் (மறுமையில் நடக்கப் போவதையும்) அவர்களுக்குப் பின்னுள்ளதையும் (உலகில் அவர்கள் செய்த செயல்களையும்) அவன் நன்கறிவான். அவர்கள் அவனை அறிவால் சூழ்ந்தறிய மாட்டார்கள்.
                                                                        என்றும் உயிருள்ளவன் என்றும் நிலையானவனுக்கு முகங்கள் பணிந்து விட்டன. அநியாயத்தை (-இணைவைப்பதை) சுமந்தவன் (-இணைவைத்தவன்) திட்டமாக நஷ்டமடைந்தான்.
                                                                        யார், அவரோ நம்பிக்கையாளராக இருக்க, நன்மைகளை செய்வாரோ அவர் அநியாயத்தையும் (பிறர் குற்றங்கள் தன்மீது சுமத்தப்படுவதையும்) (தனது) நன்மைகள் குறைக்கப்படுவதையும் பயப்பட மாட்டார்.
                                                                        இவ்வாறே, இதை (இந்த வேதத்தை) அரபி மொழியிலான குர்ஆனாக இறக்கினோம். அதில் எச்சரிக்கையை பலவாறாக நாம் விவரித்து இருக்கிறோம். அவர்கள் இறையச்சமுள்ளவர்களாக ஆகுவதற்காக அல்லது அது, (இந்த குர்ஆன்) அவர்களுக்கு ஓர் அறிவுரையை ஏற்படுத்துவதற்காக (நாம் இதை இறக்கினோம்).
                                                                        உண்மையாளனாகிய அரசனாகிய அல்லாஹ் மிக உயர்ந்தவன். (நபியே!) குர்ஆனில் (அதை பிறருக்கு ஓதிக்காட்டுவதில்) அவசரப்படாதீர், அதனுடைய வஹ்யி (அது சம்பந்தப்பட்ட விளக்கம்) உமக்கு முழுமையாக அறிவிக்கப்படுவதற்கு முன்னர். இன்னும் கூறுவீராக! “என் இறைவா எனக்கு ஞானத்தை அதிகப்படுத்து!”
                                                                        திட்டவட்டமாக இதற்கு முன்னர் ஆதமுக்கு நாம் கட்டளையிட்டோம். அவர் (அதை) மறந்து விட்டார். அவரிடம் நாம் (நமது கட்டளையை நிறைவேற்றுவதிலும் அதில் பொறுமையாக இருப்பதிலும்) உறுதியைக் காணவில்லை.
                                                                        “ஆதமுக்கு நீங்கள் சிரம் தாழ்த்துங்கள்”என்று வானவர்களுக்கு நாம் கூறியசமயத்தை நினைவு கூருவீராக! இப்லீஸைத் தவிர அவர்கள் (வானவர்கள் அனைவரும்) சிரம் தாழ்த்தினர். (அவன்) மறுத்து விட்டான்.
                                                                        ஆகவே, நாம் கூறினோம்: “ஆதமே! நிச்சயமாக இவன் உமக்கும் உமது மனைவிக்கும் எதிரி ஆவான். ஆகவே, அவன் உங்கள் இருவரையும் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றிவிட வேண்டாம். நீர் சிரமப்பட்டு விடுவீர்.
                                                                        நிச்சயமாக உமக்கு அதில் நீர் பசித்திருக்காத, ஆடையற்றிருக்காத (சுகமான வாழ்க்கை) உண்டு.
                                                                        நிச்சயமாக நீர் அதில் தர்கிக்க மாட்டீர். இன்னும் வெட்பத்தை உணரமாட்டீர்.
                                                                        ஷைத்தான் அவருக்கு ஊசலாட்டத்தை ஏற்படுத்தினான். ஆதமே! நிரந்தரத்தின் மரத்தையும் அழியாத ஆட்சியையும் நான் உமக்கு அறிவிக்கவா? என்று கூறினான்.
                                                                        ஆக, அவ்விருவரும் அதிலிருந்து (அம்மரத்திலிருந்து) சாப்பிட்டனர். ஆகவே, அவ்விருவருக்கும் அவ்விருவரின் மறைவிடங்கள் தெரியவந்தன. சொர்க்கத்தின் இலைகளை அவ்விருவரும் தங்கள் இருவர் மீது கட்டிக் கொள்வதற்கு முற்பட்டனர். ஆதம் தன் இறைவனுக்கு மாறுசெய்தார். (அவனது கட்டளையை மீறினார்.) ஆகவே, வழி தவறிவிட்டார்.
                                                                        பிறகு அவருடைய இறைவன் அவரை தேர்ந்தெடுத்தான். அவரை மன்னித்தான். (அவருக்கு) நேர்வழி காட்டினான்.
                                                                        (அல்லாஹ்) கூறினான்: “நீங்கள் அனைவரும் இதிலிருந்து இறங்குங்கள். உங்களில் சிலர் சிலருக்கு எதிரி ஆவர். என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வந்தால் எவர் எனது நேர்வழியை பின்பற்றுவாரோ அவர் வழிதவற மாட்டார்; (மறுமையில்) சிரமப்பட மாட்டார்.
                                                                        எவன் என் அறிவுரையை விட்டு புறக்கணிப்பானோ நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கைதான் உண்டு. மறுமையில் அவனை குருடனாக நாம் எழுப்புவோம்.
                                                                        அவன் கூறுவான்: “என் இறைவா! ஏன் என்னை குருடனாக எழுப்பினாய், நான் பார்வை உள்ளவனாக இருந்தேனே!
                                                                        அவன் (அல்லாஹ்) கூறுவான்: “அவ்வாறுதான் எனது வசனங்கள் உன்னிடம் வந்தன. ஆனால் நீ அவற்றை மறந்தாய். அவ்வாறே இன்றும் நீ மறக்கப்படுவாய்.
                                                                        இவ்வாறுதான் வரம்பு மீறிவிட்டு, தன் இறைவனின் வசனங்களை நம்பிக்கை கொள்ளாதவருக்கு கூலிகொடுப்போம். மறுமையின் தண்டனை மிகக் கடுமையானதும் நிரந்தரமானதும் ஆகும்.
                                                                        இவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினர்களை நாம் அழித்தது அவர்களுக்கு (தங்கள் தவறை) தெளிவுபடுத்தவில்லையா? இவர்கள் அவர்களின் இருப்பிடங்களில் (கடந்து) செல்கிறார்கள். நிச்சயமாக இதில் அறிவுடையவர்களுக்கு பல அத்தாட்சிகள் உள்ளன.
                                                                        உமது இறைவனிடம் (அவர்களை முழுமையாக அடையவேண்டிய) ஒரு வாக்கும் ஒரு குறிப்பிட்ட தவணையும் முந்தி இருக்கவில்லையெனில் கண்டிப்பாக (வரம்பு மீறியவர்களுக்கு) மரணம் ஏற்பட்டே இருக்கும்.
                                                                        அவர்கள் கூறுவதை நீர் பொறுத்துக் கொள்வீராக! சூரியன் உதிக்கும் முன்னரும் அது மறையும் முன்னரும் இரவின் நேரங்களிலும் பகலின் ஓரங்களிலும் உமது இறைவனை புகழ்ந்து தொழுவீராக! (இதன் மூலம் இறைவனின் அருள் கிடைக்கப் பெற்று) நீர் திருப்தி பெறுவீர்!
                                                                        இவர்களைப் போன்றவர்களுக்கு உலக வாழ்க்கையின் அலங்காரமாக நாம் இன்பமளித்தவற்றின் பக்கம் உமது கண்களை நீர் திருப்பாதீர். அதில் (-அந்த இன்பத்தில்) அவர்களை நாம் சோதிப்பதற்காக (அதைக் கொடுத்தோம்). உமது இறைவனின் அருட்கொடையே (உமக்கு) சிறந்ததும் நிலையானதும் ஆகும்.
                                                                        உமது குடும்பத்திற்கு தொழுகையை ஏவுவீராக! அதன்மீது நீர் உறுதியாக இருப்பீராக! உம்மிடம் நாம் உணவு எதையும் கேட்கவில்லை. நாம்தான் உமக்கு உணவளிக்கிறோம். நல்ல முடிவு இறையச்சத்திற்குத்தான்.
                                                                        இவர்கள் கூறினார்கள்: “இவர் (-முஹம்மது நபி) தன் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியை நம்மிடம் கொண்டு வரமாட்டாரா? என்று முந்திய வேதங்களில் உள்ள தெளிவான சான்று(கள்) அவர்களிடம் வரவில்லையா?
                                                                        இதற்கு முன்னரே ஒரு வேதனையைக் கொண்டு இவர்களை நாம் அழித்திருந்தால், “எங்கள் இறைவா! எங்களுக்கு ஒரு தூதரை நீ அனுப்பி இருக்கக்கூடாதா? நாங்கள் இழிவடைவதற்கும் கேவலப்படுவதற்கும் முன்னர் உனது வசனங்களை பின்பற்றி இருப்போமே!” என்று கூறுவார்கள்.
                                                                        (நபியே!) கூறுவீராக! (நீங்கள்) ஒவ்வொருவரும் எதிர்பார்ப்பவர்களே! ஆகவே, எதிர்பாருங்கள். நேரான பாதையுடையவர்கள் யார்? நேர்வழி பெற்றவர் யார் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...