ﰇ
                    surah.translation
            .
            
                            
            
    ﰡ
சூரியனின் மீது சத்தியமாக! அதன் பகலின் மீது சத்தியமாக! (ழுஹா: பகல், முற்பகல், வெளிச்சம்)
                                                                        நீர் இந்நகரத்தில் (எதிரிகளைத் தண்டிக்க) அனுமதிக்கப்பட்டவர்.
                                                                        தந்தையின் மீதும், அவர் பெற்றெடுத்ததின் மீதும் சத்தியமாக!
                                                                        திட்டவட்டமாக, மனிதனை சிரமத்தில் (சிக்கிக் கொள்பவனாகவே) படைத்தோம்.
                                                                        தன்மீது ஒருவனும் ஆற்றல் பெறவே மாட்டான் என்று (அவன்) எண்ணுகிறானா?
                                                                        அதிகமான செல்வத்தை நான் அழித்தேன் என்று கூறுகிறான்.
                                                                        அவனை ஒருவனும் பார்க்கவில்லை என்று எண்ணுகிறானா?
                                                                        அவனுக்கு இரு கண்களை நாம் ஆக்கவில்லையா? (படைக்கவில்லையா?)
                                                                        
                                                                                                                
                                    ﮨﮩ
                                    ﰈ
                                                                        
                    இன்னும், ஒரு நாவையும், இரு உதடுகளையும் (அவனுக்கு நாம் படைக்கவில்லையா?)
                                                                        
                                                                                                                
                                    ﮫﮬ
                                    ﰉ
                                                                        
                    இன்னும் இரு பாதைகளை அவனுக்கு நாம் வழிகாட்டினோம்.
                                                                        அவன் ‘அகபா'வைக் கடக்கவில்லை.
                                                                        (நபியே!) "அகபா' என்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
                                                                        
                                                                                                                
                                    ﯘﯙ
                                    ﰌ
                                                                        
                    (அது) ஓர் அடிமையை விடுதலை செய்தல்,
                                                                        அல்லது கடும் பசியுடைய நாளில் உணவளிப்பது,
                                                                        உறவினரான ஓர் அனாதைக்கு,
                                                                        அல்லது வறியவரான ஓர் ஏழைக்கு (உணவளிப்பதாகும்).
                                                                        பிறகு, நம்பிக்கையைக் கொண்டவர்களிலும், பொறுமையைக் கொண்டு உபதேசித்துக் கொண்டவர்களிலும், கருணையைக் கொண்டு உபதேசித்துக் கொண்டவர்களிலும் அவர் ஆகிவிட வேண்டும்.
                                                                        இவர்கள் வலப்பக்கமுடையவர்கள் (-சொர்க்க வாசிகள்) ஆவார்கள்.
                                                                        நம் வசனங்களை நிராகரித்தவர்கள்தான் இடப்பக்கமுடையவர்கள் (அவர்கள் நரகவாசிகள்)
                                                                        (அவர்கள் நரகத்தில் தள்ளப்பட்டப்பின் அந்)நரகம் அவர்கள் மீது மூடப்படும்.