23. அதற்கவர், (அவர்களை நோக்கி ‘‘உங்களுக்கு வேதனை எப்பொழுது அனுப்பப்படும் என்ற) ஞானம் எல்லாம் அல்லாஹ்விடம்தான் இருக்கிறது. எவ்விஷயத்தை உங்களுக்கு அறிவிக்க நான் அனுப்பப்பட்டேனோ, அதையே நான் உங்களுக்கு எடுத்துரைக்கிறேன். ஆயினும், நீங்கள் அறிவில்லாத மக்கள் என்று நான் எண்ணுகிறேன்'' என்று கூறினார்.
الترجمة التاميلية
قَالَ إِنَّمَا ٱلۡعِلۡمُ عِندَ ٱللَّهِ وَأُبَلِّغُكُم مَّآ أُرۡسِلۡتُ بِهِۦ وَلَٰكِنِّيٓ أَرَىٰكُمۡ قَوۡمٗا تَجۡهَلُونَ
அதற்கவர்; "(அது எப்பொழுது வரும் என்ற) ஞானம் நிச்சயமாக அல்லாஹ்விடம் தான் இருக்கிறது மேலும், நான் எதைக் கொண்டு உங்களிடம் அனுப்பப்பட்டிருக்கிறேனோ அதையே நான் உங்களுக்குச் சேர்ப்பித்து, எடுத்துரைக்கின்றேன் - எனினும் நான் உங்களை அறிவில்லாத சமூகத்தாராகவே காண்கிறேன்" என்று கூறினார்.
Jan Trust Foundation - Tamil translation
அவர் கூறினார்: (உங்கள் முடிவைப் பற்றிய) அறிவெல்லாம் அல்லாஹ்விடம்தான் இருக்கிறது. நான் எதைக் கொண்டு அனுப்பப்பட்டேனோ அதை உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன். என்றாலும், நீங்கள் அறியாத மக்களாக இருப்பதாகவே நான் உங்களை கருதுகிறேன்.
الترجمة التاميلية - عمر شريف