24. பின்னர், (வேதனைக்கு அறிகுறியாக வந்த) மேகம் அவர்கள் இருந்த பள்ளத்தாக்குகளை நோக்கி வருவதை அவர்கள் காணவே, ‘‘இது எங்களுக்கு மழை பெய்ய வரும் மேகம்தான்'' என்று கூறினார்கள். (அதற்கு அவர்களை நோக்கி) ‘‘அல்ல! இது நீங்கள் அவசரப்பட்ட வேதனைதான் என்றும், இது ஒரு காற்று; இதில் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது'' (என்றும் கூறப்பட்டது).
الترجمة التاميلية
فَلَمَّا رَأَوۡهُ عَارِضٗا مُّسۡتَقۡبِلَ أَوۡدِيَتِهِمۡ قَالُواْ هَٰذَا عَارِضٞ مُّمۡطِرُنَاۚ بَلۡ هُوَ مَا ٱسۡتَعۡجَلۡتُم بِهِۦۖ رِيحٞ فِيهَا عَذَابٌ أَلِيمٞ
ஆனால் அவர்களோ (அவர்களுக்கு அனுப்பப்பட்ட வேதனை) அவர்கள் இருந்த பள்ளத்தாக்குகளை நோக்கி மேகமாக வருவதைக் கண்டதும், "இது நமக்கு மழையைப் பொழியும் மேகமாகும்" எனக் கூறினார்கள்; "அப்படியல்ல, இது நீங்கள் (எதற்காக) அவசரப்பட்டீர்களோ அதுதான்; (இது கொடுங்)காற்று - இதில் நோவினை செய்யும் வேதனை இருக்கிறது
Jan Trust Foundation - Tamil translation
அவர்கள் அதை (-அல்லாஹ்வின் வேதனையை) தங்களது பள்ளத் தாக்கை முன்னோக்கி வரக்கூடிய அடர்த்தியான கார் மேகமாக பார்த்தபோது, கூறினார்கள்: “இது நமக்கு மழை பொழிவிக்கும் அடர்த்தியான கார் மேகமாகும்.” (ஆது நபி கூறினார்: இது மழை பொழியும் மேகம் இல்லை) மாறாக, இது நீங்கள் எதை அவசரமாகத் தேடினீர்களோ அதுவாகும். இது ஒரு காற்றாகும். இதில் வலி தரக்கூடிய தண்டனை இருக்கிறது.
الترجمة التاميلية - عمر شريف