3. அவர்களை நாடு கடத்தல் (மட்டும்) செய்துவிடுமாறு அல்லாஹ் (ஏற்கனவே) விதித்திருக்காவிடில் இவ்வுலகத்திலேயே அவர்களை(க் கடினமான) வேதனை செய்திருப்பான். எனினும், மறுமையில் நரக வேதனை அவர்களுக்குக் காத்திருக்கிறது.
الترجمة التاميلية
وَلَوۡلَآ أَن كَتَبَ ٱللَّهُ عَلَيۡهِمُ ٱلۡجَلَآءَ لَعَذَّبَهُمۡ فِي ٱلدُّنۡيَاۖ وَلَهُمۡ فِي ٱلۡأٓخِرَةِ عَذَابُ ٱلنَّارِ
தவிரவும், அவர்கள் மீது வெளியேறுகையை அல்லாஹ் விதிக்காதிருந்தால், இவ்வுலகிலேயே அவர்களைக் கடினமாக வேதனை செய்திருப்பான், இன்னும் அவர்களுக்கு மறுமையிலும் (நரக) நெருப்பின் வேதனை உண்டு.
Jan Trust Foundation - Tamil translation
(அவர்களின் இல்லங்களில் இருந்து) வெளியேறுவதை அல்லாஹ் அவர்கள் மீது விதித்து இருக்கவில்லை என்றால் இவ்வுலகிலேயே அவர்களை அவன் கண்டிப்பாக (கடுமையான தண்டனையால்) வேதனை செய்து இருப்பான். அவர்களுக்கு மறுமையில் நரக வேதனை உண்டு.
الترجمة التاميلية - عمر شريف