12. (இரண்டாவது:) இம்ரானுடைய மகள் மர்யம். அவள் தன் கற்பை பாதுகாத்துக் கொண்டாள். ஆகவே, அவளுடைய கர்ப்பத்தில் நம் ரூஹிலிருந்து ஊதினோம். அவள் தன் இறைவனின் வசனங்களையும், வேதங்களையும் உண்மையாக்கி வைத்ததுடன் (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டவளாகவும் இருந்தாள்.
الترجمة التاميلية
وَمَرۡيَمَ ٱبۡنَتَ عِمۡرَٰنَ ٱلَّتِيٓ أَحۡصَنَتۡ فَرۡجَهَا فَنَفَخۡنَا فِيهِ مِن رُّوحِنَا وَصَدَّقَتۡ بِكَلِمَٰتِ رَبِّهَا وَكُتُبِهِۦ وَكَانَتۡ مِنَ ٱلۡقَٰنِتِينَ
மேலும், இம்ரானின் புதல்வியான மர்யமையும் (அல்லாஹ் உதாரணமாக்கினான்) அவர் தம் கற்பைக் காத்துக் கொண்டார், நாம் (அவரில்) நம் ரூஹிலிருந்து (ஆத்மாவிலிருந்து) ஊதினோம். மேலும், அவர் தம் இறைவனின் வார்த்தைகளையும், அவனுடைய வேதங்களையும் மெய்ப்பித்தார் - (ஏற்றுக் கொண்டார்); இன்னும், அவர் (அல்லாஹ்வை வணங்கி) வழிபட்டவர்களில் ஒருவராகவும் இருந்தார்.
Jan Trust Foundation - Tamil translation
இன்னும் இம்ரானின் மகள் மர்யமை (அல்லாஹ் உதாரணமாக விவரிக்கின்றான்). அவள் தனது மறைவிடத்தை பேணிக்கொண்டாள். ஆகவே, நாம் அதில் (-அவளுடைய மேல் சட்டையின் முன் புறத்தில்) நமது (-நாம் படைத்த) உயிரிலிருந்து ஊதினோம். அவள் தனது இறைவனின் வாக்கியங்களையும் அவனது வேதங்களையும் உண்மைப்படுத்தினாள். இன்னும் அவள் மிகவும் பணிந்தவர்களில் (ஒருத்தியாக) இருந்தாள்.
الترجمة التاميلية - عمر شريف