36. (அவ்விளக்குகள்) வீடுகளில் இருக்கின்றன. அவ்வீடுகள் அவற்றில் அல்லாஹ்வின் திருப்பெயர் கூறப்படவும், அதைக் கண்ணியப்படுத்தப்படவும் அவன் கட்டளையிட்டிருக்கிறான். அவற்றில் காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்துகொண்டு,
الترجمة التاميلية
فِي بُيُوتٍ أَذِنَ ٱللَّهُ أَن تُرۡفَعَ وَيُذۡكَرَ فِيهَا ٱسۡمُهُۥ يُسَبِّحُ لَهُۥ فِيهَا بِٱلۡغُدُوِّ وَٱلۡأٓصَالِ
இறை இல்லங்களில் அவனது பெயர் கூறப்படவேண்டுமென்றும் (அவற்றின் கண்ணியம்) உயர்த்தப்படவேண்டுமென்றும் அல்லாஹ் கட்டளையிடுகிறான். அவற்றில் காலையிலும் மாலையிலும் (முஃமின்கள்) அவனை துதி செய்து கொண்டிருப்பார்கள்.
Jan Trust Foundation - Tamil translation
(அந்த விளக்கு) இறை இல்லங்களில் (-மஸ்ஜிதுகளில் எரிக்கப்படுகிறது). அவை உயர்த்திக் கட்டப்படுவதற்கும் அவற்றில் அவனது திருப்பெயர் நினைவு கூறப்படுவதற்கும் அல்லாஹ் அனுமதித்துள்ளான். அவற்றில் காலையிலும் மாலையிலும் (பல ஆண்கள்) அவனை துதிக்கின்றனர் (-தொழுகின்றனர்)
الترجمة التاميلية - عمر شريف