43. (நபியே!) ‘‘நீர் (இறைவனால்) அனுப்பப்பட்ட தூதர் அல்ல'' என்று இந்நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர். அதற்கு (அவர்களை நோக்கி, ‘‘இதைப் பற்றி) எனக்கும் உங்களுக்கும் இடையில் அல்லாஹ்வும், வேத ஞானம் உடையவர்களும் போதுமான சாட்சிகளாவர்'' என்று கூறுவீராக.
الترجمة التاميلية
وَيَقُولُ ٱلَّذِينَ كَفَرُواْ لَسۡتَ مُرۡسَلٗاۚ قُلۡ كَفَىٰ بِٱللَّهِ شَهِيدَۢا بَيۡنِي وَبَيۡنَكُمۡ وَمَنۡ عِندَهُۥ عِلۡمُ ٱلۡكِتَٰبِ
(நபியே!) நீர் (இறைவனால் அனுப்பப்பட்ட) தூதர் அல்லர் என்று காஃபிர்கள் சொல்கிறார்கள்; எனக்கும், உங்களுக்குமிடையே சாட்சியாக இருக்க அல்லாஹ்வும், வேதஞானம் யாரிடமிருக்கிறதோ அவர்களும் போதுமானவர்கள்" என்று நீர் கூறிவிடுவீராக!
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) “நீர் தூதராக இல்லை” என்று நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள். “எனக்கு மத்தியிலும் உங்களுக்கு மத்தியிலும் அல்லாஹ்வும், வேதத்தின் ஞானம் எவரிடம் உள்ளதோ அவரும் சாட்சியால் போதுமாகி விட்டனர்” என்று கூறுவீராக!பேரன்பாளன் பேரருளாளன் அல்லாஹ்வின் பெயரால்...
الترجمة التاميلية - عمر شريف