6. (இவர்களைத் தவிர) மனிதரில் பலர் இருக்கின்றனர். அவர்கள் (பொய்யான கட்டுக்கதைகள் முதலிய) வீணான விஷயங்களை விலைக்கு வாங்கி (அவற்றை மக்களுக்கு ஓதிக் காண்பித்து) அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் இருந்து ஞானமின்றி மக்களை வழிகெடுத்து அதைப் பரிகாசமாகவும் எடுத்துக் கொள்கின்றனர். இவர்களுக்கு இழிவு தரும் வேதனை நிச்சயமாக உண்டு.
الترجمة التاميلية
وَمِنَ ٱلنَّاسِ مَن يَشۡتَرِي لَهۡوَ ٱلۡحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ ٱللَّهِ بِغَيۡرِ عِلۡمٖ وَيَتَّخِذَهَا هُزُوًاۚ أُوْلَـٰٓئِكَ لَهُمۡ عَذَابٞ مُّهِينٞ
(இவர்கள் தவிர) மனிதர்களில் சிலர் இருக்கின்றார்கள் - அவர்கள் அறிவில்லாமல் வீணான பேச்சக்களை விலைக்கு வாங்கி, (அவற்றால் மக்களை) அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுக்கவும், அல்லாஹ்வின் பாதையைப் பரிகாசமாக்கிக் கொள்ளவும் (முயல்கிறார்கள்) இத்தகையோருக்கு இழிவுதரும் வேதனையுண்டு.
Jan Trust Foundation - Tamil translation
கல்வி இன்றி அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மக்களை) வழிகெடுப்பதற் காகவும், அதை (-அல்லாஹ்வின் பாதையை) பரிகாசமாக எடுத்துக் கொள்வதற் காகவும் வீண் பேச்சை விலைக்கு வாங்குபவன் மக்களில் இருக்கின்றான். இத்தகையவர்களுக்கு (அவர்களை) இழிவுபடுத்தும் வேதனை உண்டு.
الترجمة التاميلية - عمر شريف