18. இத்தகையவர்களின் கதியோ, இவர்களுக்கு முன் சென்றுபோன (பாவிகளான) மனித, ஜின்களிலுள்ள கூட்டத்தார்களைப்போல் (இவர்களும் அழிந்து) இவர்களின் மீதும் (அல்லாஹ்வுடைய வேதனை வந்திறங்கியே தீருமென்ற) வாக்குறுதி உண்மையாகிவிட்டது. நிச்சயமாக இவர்கள் நஷ்டமடைந்து விட்டார்கள்.
الترجمة التاميلية
أُوْلَـٰٓئِكَ ٱلَّذِينَ حَقَّ عَلَيۡهِمُ ٱلۡقَوۡلُ فِيٓ أُمَمٖ قَدۡ خَلَتۡ مِن قَبۡلِهِم مِّنَ ٱلۡجِنِّ وَٱلۡإِنسِۖ إِنَّهُمۡ كَانُواْ خَٰسِرِينَ
இத்தகையோரின் நிலையோ, இவர்களுக்கு முன்னே சென்று போன ஜின்கள் மனிதர்கள் கூட்டத்தினரில் (பாவம் செய்ததினால்) எவர்களுக்கு எதிராக (அல்லாஹ்வின்) வாக்கு மெய்யாக உறுதியாய் விடுகிறதோ, அது போன்றது தான்; நிச்சயமாக இவர்கள் நஷ்டவாளிகளாய் விட்டனர்.
Jan Trust Foundation - Tamil translation
இவர்களுக்கு முன்னர் சென்றுவிட்ட ஜின், மற்றும் மனித சமுதாயங்களுடன் இவர்கள் மீதும் (அல்லாஹ்வுடைய தண்டனையின்) வாக்கு உறுதியாகிவிட்டது. “நிச்சயமாக இவர்கள் (-நிராகரிப்பாளர்களான முன்னோரும் பின்னோரும்) நஷ்டவாளிகளாகவே இருகின்றனர்.”
الترجمة التاميلية - عمر شريف