19. இவர்களில் ஒவ்வொருவருக்கும் (நன்மையோ தீமையோ) அவர்கள் செயலுக்குத் தக்க பதவிகள் இருக்கின்றன. ஆகவே, அவர்கள் தங்கள் செயலுக்குரிய கூலியை முழுமையாகவே கொடுக்கப்படுவார்கள். (நன்மையைக் குறைத்தோ, பாவத்தை அதிகரித்தோ) இவர்களில் ஒருவருக்கும் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டாது.
الترجمة التاميلية
وَلِكُلّٖ دَرَجَٰتٞ مِّمَّا عَمِلُواْۖ وَلِيُوَفِّيَهُمۡ أَعۡمَٰلَهُمۡ وَهُمۡ لَا يُظۡلَمُونَ
அன்றியும், ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்த செய்கைகளுக்குத் தகுந்த பதவிகள் (மறுமையில்) உண்டு - ஆகவே அவர்கள் தங்கள் செயலுக்குரிய கூலியைப் பூரணமாகப் பெறுவதற்காக, ஆகவே அவர்கள் (இதில்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்
Jan Trust Foundation - Tamil translation
(நம்பிக்கையாளர்கள், நிராகரிப்பாளர்கள் ஆகிய இவர்கள்) எல்லோருக்கும் அவர்கள் செய்தவற்றின் (-அவர்களுடைய செயல்களின்) அடிப்படையில் தகுதிகள் உண்டு. இன்னும், இறுதியாக அவன் அவர்களுடைய செயல்களுக்கு அவர்களுக்கு முழு கூலி கொடுப்பான். இன்னும் அவர்கள் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள்.
الترجمة التاميلية - عمر شريف