4. ஆகவே, (நபியே! அவர்களை நோக்கி) நீர் கூறுவீராக: ‘‘அல்லாஹ்வை தவிர்த்து நீங்கள் (இறைவனென) எவற்றை அழைக்கிறீர்களோ அவற்றை நீங்கள் கவனித்தீர்களா? அவை பூமியில் எதைத்தான் படைத்திருக்கின்றன? அதை நீங்கள் எனக்குக் காண்பியுங்கள் அல்லது வானங்களில் (அவற்றின் ஆட்சியிலோ அல்லது அவற்றை படைத்ததிலோ) அவற்றுக்குப் பங்குண்டா? நீங்கள் உண்மை சொல்பவர்களாயிருந்தால், இதற்கு (ஆதாரமாக) முன்னுள்ள ஒரு வேதத்தை, அல்லது (இது சம்பந்தமான) ஞானமுடையவர்களின் ஒரு வாக்கியத்தைக் கொண்டு வாருங்கள்.
الترجمة التاميلية
قُلۡ أَرَءَيۡتُم مَّا تَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِ أَرُونِي مَاذَا خَلَقُواْ مِنَ ٱلۡأَرۡضِ أَمۡ لَهُمۡ شِرۡكٞ فِي ٱلسَّمَٰوَٰتِۖ ٱئۡتُونِي بِكِتَٰبٖ مِّن قَبۡلِ هَٰذَآ أَوۡ أَثَٰرَةٖ مِّنۡ عِلۡمٍ إِن كُنتُمۡ صَٰدِقِينَ
"நீங்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை கவனித்தீர்களா? பூமியிலுள்ள எதை அவை படைத்துள்ளன அல்லது அவற்றுக்கு வானங்களில் ஏதாவது பங்கு உண்டா? என்பதை எனக்குக் காண்பியுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இதற்கு, முன்னேயுள்ள ஒரு வேதத்தையோ அல்லது (முன்னோர்களின்) அறிவு ஞானங்களில் மிஞ்சிய ஏதேனும் பகுதியையோ (உங்கள் கூற்றுக்கு ஆதாரமாக) என்னிடம் கொண்டு வாருங்கள்!" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
Jan Trust Foundation - Tamil translation
(நபியே) நீர் கூறுவீராக! அல்லாஹ்வை அன்றி நீங்கள் அழைக்கின்றவற்றை குறித்து நீங்கள் அறிவியுங்கள்! “அவர்கள் பூமியில் எதைப் படைத்தார்கள் என்று எனக்கு காண்பியுங்கள்? அல்லது வானங்களில் (-அவற்றைப் படைத்ததில்) அவர்களுக்கு ஏதும் பங்கு இருக்கின்றதா? (அப்படி இருக்கிறதென்றால் அதற்கு ஆதாரமாக) இதற்கு முன்னுள்ள ஒரு வேதத்தை அல்லது (முன்னோரின்) கல்வியில் (அறிவு சார்ந்த ஆதாரங்களில் ஏதும்) மீதமிருப்பதை என்னிடம் கொண்டு வாருங்கள். நீங்கள் (கூறுவதில்) உண்மையாளர்களாக இருந்தால்.
الترجمة التاميلية - عمر شريف