6. அல்லாஹ்வைப் பற்றிக் கெட்ட எண்ணம் கொள்கின்ற நயவஞ்சகமுள்ள ஆண்களையும் பெண்களையும், இணைவைத்து வணங்குகின்ற ஆண்களையும் பெண்களையும் (அல்லாஹ்) வேதனை செய்தே தீருவான். வேதனை அவர்கள் (தலைக்கு) மேல் சூழ்ந்துகொண்டு இருக்கிறது. அல்லாஹ் அவர்கள் மீது கோபப்பட்டு, அவர்களைச் சபித்து, அவர்களுக்காக நரகத்தையும் தயார்படுத்தி வைத்திருக்கிறான். அது செல்லுமிடங்களில் மகா கெட்டது.
الترجمة التاميلية
وَيُعَذِّبَ ٱلۡمُنَٰفِقِينَ وَٱلۡمُنَٰفِقَٰتِ وَٱلۡمُشۡرِكِينَ وَٱلۡمُشۡرِكَٰتِ ٱلظَّآنِّينَ بِٱللَّهِ ظَنَّ ٱلسَّوۡءِۚ عَلَيۡهِمۡ دَآئِرَةُ ٱلسَّوۡءِۖ وَغَضِبَ ٱللَّهُ عَلَيۡهِمۡ وَلَعَنَهُمۡ وَأَعَدَّ لَهُمۡ جَهَنَّمَۖ وَسَآءَتۡ مَصِيرٗا
அல்லாஹ்வைப் பற்றி கெட்ட எண்ணம் எண்ணும் முனாஃபிக்கான ஆண்களையும், முனாஃபிக்கான பெண்களையும், இணைவைத்து வணங்கும் ஆண்களையும், இணைவைத்து வணங்கும் பெண்களையும், (அல்லாஹ்) வேதனை செய்வான். (அவ்வேதணையின்) கேடு அவர்கள் மேல் சூழந்து கொண்டு இருக்கிறது இன்னும் அல்லாஹ் அவர்கள் மீது கோபம் கொண்டான்; அவர்களைச் சபித்தும் விட்டான்; அவர்களுக்காக நரகத்தையும் சித்தம் செய்திருக்கின்றான் - (அதுதான்) செல்லுமிடங்களில் மிகவும் கெட்டது.
Jan Trust Foundation - Tamil translation
நயவஞ்சக ஆண்களையும் நயவஞ்சக பெண்களையும் இணைவைக்கின்ற ஆண்களையும் இணைவைக்கின்ற பெண்களையும் அல்லாஹ் வேதனை செய்வதற்காக (அவன் உமக்கு மகத்தான வெற்றியை கொடுத்தான்). அவர்கள் அல்லாஹ்வின் விஷயத்தில் (அவன் தனது நபிக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் உதவமாட்டான் என்று) கெட்ட எண்ணம் எண்ணுகின்றனர். அவர்கள் மீதுதான் கெட்ட சுழற்சி (சுற்ற) இருக்கிறது. (-அவர்கள்தான் தோற்கப் போகிறார்கள். நம்பிக்கையாளர்களின் கரத்தால் வேதனையை சுவைக்க இருக்கிறார்கள்.) அல்லாஹ் அவர்கள் மீது கோபப்படுகின்றான். அவர்களை சபிக்கின்றான். அவர்களுக்கு நரகத்தை தயார் செய்துள்ளான். அது மிகக் கெட்ட மீளுமிடமாகும்.
الترجمة التاميلية - عمر شريف