11. (மனிதன் எந்நிலைமையிலிருந்த போதிலும்) அவனுக்கு முன்னும் பின்னும் தொடர்ந்து வரக்கூடிய (வானவர்கள்) பலர் இருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வுடைய கட்டளையைக் கொண்டு அவனை பாதுகாக்கிறார்கள். மனிதர்கள் (தங்கள் தீய நடத்தையை விட்டு) தங்களை மாற்றிக்கொள்ளாத வரை நிச்சயமாக அல்லாஹ்வும் (அவர்களுக்குப் புரிந்த அருளை) மாற்றி விடுவதில்லை. அல்லாஹ் ஒரு வகுப்பாரை வேதனை செய்ய நாடினால், அதைத் தடுப்பவர்கள் ஒருவரும் இல்லை; அவர்களுக்கு உதவி செய்பவர்களும் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை.
الترجمة التاميلية
لَهُۥ مُعَقِّبَٰتٞ مِّنۢ بَيۡنِ يَدَيۡهِ وَمِنۡ خَلۡفِهِۦ يَحۡفَظُونَهُۥ مِنۡ أَمۡرِ ٱللَّهِۗ إِنَّ ٱللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوۡمٍ حَتَّىٰ يُغَيِّرُواْ مَا بِأَنفُسِهِمۡۗ وَإِذَآ أَرَادَ ٱللَّهُ بِقَوۡمٖ سُوٓءٗا فَلَا مَرَدَّ لَهُۥۚ وَمَا لَهُم مِّن دُونِهِۦ مِن وَالٍ
மனிதனுக்கு முன்னாலும், பின்னாலும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள்) இருக்கிறார்கள். அல்லஹ்வின் கட்டளையால் அவர்கள் அவனைப் பாதுகாக்கிறார்கள்; எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை.
Jan Trust Foundation - Tamil translation
(மனிதனாகிய) அவனுக்கு முன்னும், அவனுக்குப் பின்னும் தொடரக்கூடிய (கா)வ(ல)ர்கள் இருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வுடைய (தண்டனை எனும்) கட்டளையிலிருந்து அவனை பாதுகாக்(க முயற்சிக்)கின்றனர். நிச்சயமாக அல்லாஹ் ஒரு சமுதாயத்திடமுள்ளதை மாற்றமாட்டான். அவர்கள் தங்களிடமுள்ளதை மாற்றுகின்றவரை. அல்லாஹ் ஒரு சமுதாயத்திற்கு அழிவை நாடினால், (எவராலும்) அதை தடுப்பது அறவே முடியாது; அவர்களுக்கு அவனையன்றி உதவியாளர் எவரும் இல்லை.
الترجمة التاميلية - عمر شريف