18. எவர்கள் தங்கள் இறைவனுடைய அழைப்பை ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களுக்கு (அது) முற்றிலும் நன்மையாகும். எவர்கள் அவன் அழைப்புக்குப் பதில் கூறவில்லையோ அது அவர்களுக்கு(க் கேடாகும். ஏனென்றால்) பூமியிலுள்ள பொருள்கள் அனைத்தும் சொந்தமாக இருந்து, அத்துடன் அதைப் போன்றதொரு பாகமும் (அவர்களிடம்) இருந்தால் (மறுமையில் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய) வேதனையிலிருந்து தப்பித்துக்கொள்ள இவை அனைத்தையும் தங்களுக்குப் பிரதியாகக் கொடுத்து விடவே விரும்புவார்கள். (எனினும், அது ஆகாத காரியம்!) மேலும், அவர்களிடம் மிகக் கடினமாகவே கேள்வி கணக்குக் கேட்கப்படும். அவர்களுடைய தங்குமிடம் நரகம்தான். அது தங்கும் இடங்களில் மிகக் கெட்டது.
الترجمة التاميلية
لِلَّذِينَ ٱسۡتَجَابُواْ لِرَبِّهِمُ ٱلۡحُسۡنَىٰۚ وَٱلَّذِينَ لَمۡ يَسۡتَجِيبُواْ لَهُۥ لَوۡ أَنَّ لَهُم مَّا فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗا وَمِثۡلَهُۥ مَعَهُۥ لَٱفۡتَدَوۡاْ بِهِۦٓۚ أُوْلَـٰٓئِكَ لَهُمۡ سُوٓءُ ٱلۡحِسَابِ وَمَأۡوَىٰهُمۡ جَهَنَّمُۖ وَبِئۡسَ ٱلۡمِهَادُ
எவர் தம் இறைவனின் கட்டளைகளை ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு (அது) அழகிய நன்மையாகும்; இன்னும் எவர் அவனது கட்டளைகளை ஏற்றுக் கொள்ள வில்லையோ, அவர்களுக்கு பூமியிலுள்ள பொருள்கள் யாவும் சொந்தமாக இருந்து, அத்துடன் அதைப்போன்ற (இன்னொரு) பாகவும் இருந்து (மறுமையின் வேதனையிலிருந்து தப்பித்துக்கொள்ள) அவற்றையெல்லாம் மீட்டுப் பொருளாகக் கொடுத்துவிடவே விரும்புவார்கள்; (ஆனால் இது பலனை அளிக்காது) அவர்களுக்குக் கேள்வி கணக்கு மிகவும் கடினமாக இருக்கும்; அவர்கள் தங்கும் இடம் நரகமேயாகும்; அது மிகவும் கெட்ட புகலிட(மும் ஆகு)ம்.
Jan Trust Foundation - Tamil translation
தங்கள் இறைவனுக்கு பதிலளித்தவர்களுக்கு மிக அழகிய நன்மை உண்டு. அவனுக்குப் பதிலளிக்காதவர்களுக்கு பூமியிலுள்ளவை அனைத்தும் இன்னும் அதுபோன்றதும் இருந்திருந்தால், (நரகத்திலிருந்து தப்பிக்க) அதை பிணை கொடுத்திருப்பார்கள். அவர்களுக்கு கடினமான விசாரணை உண்டு. அவர்களுடைய தங்குமிடம் நரகம்தான். அது தங்குமிடத்தால் மிகக் கெட்டு விட்டது.
الترجمة التاميلية - عمر شريف