2. வானங்களை தூணின்றியே உயர்த்தியவன் அல்லாஹ்வே! அதை நீங்கள் (உங்கள் கண்களால்) காண்கிறீர்கள். அன்றி அர்ஷின் மீது அவன் (தன் மகிமைக்குத்தக்கவாறு) உயர்ந்து விட்டான். அவனே சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கிறான். (இவை) ஒவ்வொன்றும் (அவற்றிற்குக்) குறிப்பிட்ட கால திட்டப்படி நடந்து வருகிறது. (அவற்றில் நடைபெறும்) சகல காரியங்களையும் அவனே திட்டமிடுகிறான். நீங்கள் (இறந்த பின்னர் உயிர்பெற்று) உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதி கொள்வதற்காக (தன்) வசனங்களை (இவ்வாறு உங்களுக்கு) விவரித்து அறிவிக்கிறான்.
الترجمة التاميلية
ٱللَّهُ ٱلَّذِي رَفَعَ ٱلسَّمَٰوَٰتِ بِغَيۡرِ عَمَدٖ تَرَوۡنَهَاۖ ثُمَّ ٱسۡتَوَىٰ عَلَى ٱلۡعَرۡشِۖ وَسَخَّرَ ٱلشَّمۡسَ وَٱلۡقَمَرَۖ كُلّٞ يَجۡرِي لِأَجَلٖ مُّسَمّٗىۚ يُدَبِّرُ ٱلۡأَمۡرَ يُفَصِّلُ ٱلۡأٓيَٰتِ لَعَلَّكُم بِلِقَآءِ رَبِّكُمۡ تُوقِنُونَ
(இவ்வேதத்தை அருளிய) அல்லாஹ் எத்தகையவனென்றால் அவன் வானங்களைத் தூணின்றியே உயர்த்தியுள்ளான்; நீங்கள் அவற்றைப் பார்க்கிறீர்கள்; பின்னர் அவன் அர்ஷின்மீது அமைந்தான்; இன்னும் அவனே சூரியனையும் சந்திரனையும் (தன்) அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; (இவை) அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன் அவனே (எல்லாக்) காரியத்தையும் நிர்வகிக்கின்றான் - நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதி கொள்ளும் பொருட்டு, அவன் (இவ்வாறு தன்) வசனங்களை விளக்குகின்றான்.
Jan Trust Foundation - Tamil translation
அல்லாஹ்தான், வானங்களை தூண்கள் இன்றி உயர்த்தியவன்! அதை நீங்கள் காண்கிறீர்கள். பிறகு அர்ஷின் மேல் உயர்ந்து விட்டான். சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தினான். எல்லாம் குறிப்பிடப்பட்ட ஒரு தவணையின் பக்கம் ஓடுகின்றன. காரியத்தை திட்டமிடுகிறான். நீங்கள் உங்கள் இறைவனின் சந்திப்பை உறுதி கொள்ள வேண்டும் என்பதற்காக (தன்) வசனங்களை (உங்களுக்கு) விவரிக்கிறான்.
الترجمة التاميلية - عمر شريف